ஒற்றை எழுத்தில் ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு வாக்கியத்தையோ அடக்கி வைத்து பொருள் தரும் எழுத்துக்களையே ஒரு எழுத்து ஒரு மொழி சொற்கள் என்பார்கள். தமிழில் தான் உலகிலேயே அதிக அளவு ஓர் எழுத்தில் ஒரு மொழிச் சொற்கள் அதிகமாக உள்ளன. கிட்டதட்ட 56-ற்கும் மேலான சொற்கள் உள்ளன இந்த பதிவில் நாம் 56 ஓரெழுத்து ஒரு மொழி சொற்களை விவரிக்க போகிறோம் இந்தச் சொற்கள் பெரும்பாலும் TNPSC பொது தேர்வுகளில் கேட்கப்படுகின்றன இதை படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1.அ – சிவன், திருமால், நான்முகன், இரக்கம், அழகு ,எட்டு, திப்பிலி, சுக்கு, அந்த, எனும் பொருள்களை அ என்ற ஒற்றை எழுத்து பெற்றுள்ளது.
2.ஆ – பசு, எருது, ஆச்சா மரம், ஆன்மா, இறக்கம், வியப்பு, துன்பம், பெற்றம், மான், சிவஞானம், இச்சை, மறை, எனும் பொருள்களை ஆ என்ற ஒற்றை எழுத்து பெற்றுள்ளது.
3.இ – சுட்டு, அவன், அன்பு ,அங்கே, இந்த, ஆச்சரியம்,எனும் பொருள்களை என்ற ஒற்றை எழுத்தானது பெற்றுள்ளது.
4.ஈ- பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு, கற்பித்தல், புகை, தாமரை, இதழ், திருமகள், நரி, லட்சுமி, தா, கடவுள், இதழ், இரத்தல், படைத்தல், ஈணுதல், கொடை, பார்வதி, இறகு, இந்திரவில், எனும் பொருள்களை ஈ என்ற ஒற்றை எழுத்து பெற்றுள்ளது.
5.ஊ- இறைச்சி, உணவு, விகுதி, தசை, திங்கள், ஊன், சிவன், எனும் பொருளை இந்த ஒற்றை எழுத்தான ஊ பெற்றுள்ளது
6.எ-வினா, ஏழு வண்ணம், எந்த, எண்ணின் குறி, எனும் பொருள்களை எ என்ற ஒற்றை எழுத்து பெற்று உள்ளது
7.ஏ – அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு, பெருக்கு, நோக்குதல், திருமால், சிவன், எதிர்மறை பொருள், இடைச்சொல், வில் எனும் பொருளை ஏ என்ற ஒற்றை வார்த்தை பெற்றுள்ளது
8.ஐ – அழகு, ஐயம், தலைவன், அரசன், மென்மை, நுண்மை, தந்தை, தும்பை, துர்க்கை, பருந்து, பாஷாணம், வியப்பு, கடவுள், குரு, சிவம், கணவன், சகோதரன் எனும் பொருள்களை ஐ என்ற ஒற்றை வார்த்தையானது கொண்டுள்ளதால் இதனை ஓரெழுத்து ஒரு மொழி என்று கூறுகிறார்கள்.
9.ஒ – ஒழிவு, உயர்வு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, ஒளிக்குறிப்பு, நினைவுப் பொருந்து எனும் பொருள்களை ஓ என்ற ஒற்றை வார்த்தை பெற்றுள்ளது.
10.ஓ – ஆபத்து மதகு(நீர் தங்கும் பலகை), வினா, இரக்கம், பிரம்மன், அசைநிலை ஆகிய பொருள்களை கொண்டுள்ளது
க -இனத்தில் ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்:
11. க – அரசன், தீ, கதிரவன், மயில், உடல் நலம், ஒளி, முகில், ஒன்று, காற்று, ஆன்மா, எமன்
12. கா – காத்தல், காவடி, சோலை, வருத்தம், வலி, பாதுகாப்பு, தராசு, எதிர்பார்ப்பு, காடு, கலைமகள்
13. கீ – கிளிக்குரல், பாவம், பூமி
14. கு – இகழ்ச்சி, நீக்குதல், நிறம், குற்றம், பூமி, சிறுமை
15. கூ – பூமி,கூகை, பிசாசு, அழுக்கு, கூவு, நிலம்
16. கை – இடம், ஒழுக்கம், ஆள், சதுரம், சங்கு, அஞ்சலி, ஒப்பனை, அளவு, ஓர், உறுப்பு, படை, சிறகு, வரிசை
ச – இனத்தில் ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்:
17. ச – சக
18. சா – பேய்,இறப்பு,சோர்வு, போ, கெடுதல், தேயிலைச்செடி, சாவி
19. சீ- அடக்கம், அலட்சியம், உறக்கம், செல்வம், பண்சீழ், இகழ்சிசிக் குறிப்பு, இலக்குமி
20. சு – தன்மை, சுகம், சுய, நன்மை
21. சூ – வானவகை, வெறுப்பை உணர்த்தும் ஒலி
22. சை – இகழ்ச்சி, செல்வம்சேசிகப்பு, காளை, எருது, மதில், வெறுப்புக்குறி, அழிஞ்சிமரம்
23. சோ – அரண், நகர், ஒலி, வியர்படைச்சொல்
24. சௌ – சுமங்கலி
ஞ இனத்து ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்:
25. ஞா – சுட்டு, பொருந்து
26. ஞை – இகழ்ச்சி
த இனத்து ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்:
27. த – குபேரன், பிரம்மன்
28. தா – அழிவு, குற்றம், தாண்டுதல், பகை, வலிமை, கொடு, தருதல், மரம்
29. தீ – நெருப்பு,சினம்,அறிவு, நானம், நரகம், விளக்கு, விஷம், ஞானம்
30. து – அசைத்தல், அனுபவம், வருந்து, கெடுத்தல், பிரிவு, துன்பம்
31. தூ – சுத்தம், வலிமை, சிறகு, தடை, வெண்மை, பகை, இறைச்சி, தூவி, இகழ்ச்சிக் குறிப்பு
32. தே – தெய்வம், அருள், மாடு, நாயகன், கருணை
33. தை – மாதம், அலங்காரம், மரக்கன்று, தாளம், தையல், திங்கள், மகரராசி
34. தோ – நாயை அழைத்தல்
ந – இனத்து ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்:
35. ந – சிறப்பு, மிகுதி
36. நா – அயலாள், திறப்பு, மணி, நாக்கு, பொலிவு, பல், சொல், நடு, தராசு, அயலார்
37. நி – இன்மை, சமீபம், உபயம், விருப்பம், அருகில், நிச்சயம், மிகுதி
38. நீ – நீக்கு, விடு, ஒருமைச்சுட்டு, முன்னிலை
39. நு – தியானம், நேரம், புகழ், ஆயுதம், தோனி, அணிகலன்
40. நூ – எள், யானை, ஆபரணம்நேஅன்பு, அருள், ஈரம்
41. நை – துன்பம், நோய்
42. நொ – துன்பம், நோய், வலி, வருந்து
33. நோ – சிதைவு, துக்கம், பலவீனம்
34. நௌ – மரக்கலம்
ப இனத்து ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்
35. ப – காற்று, சாபம், பஞ்சமம், புயல்
36. பா – பாட்டு, பின்னம், குடித்தல், நிழல், பஞ்சுநூல், செய்யுள், பாம்பு, காப்பு
37. பி – அழகு
38. பீ – அச்சம், மலர், தொண்டி
39.பூ – கூர்மை, மலர், தீப்பொறி, பிறப்பு, நிறம், மென்மை, பொலிவு
40. மே – நுரை, மேகம் , அச்சம், இல்லை
41. பை – அழகு, சாக்கு, பசுமை, இளமை, பாம்பின்படம், தாமிர நாணயம், பச்சைநிறம்,உடல்
42. போ – ஏவல்,செல்
ம இனத்து ஓரெழுத்து ஒரு மொழி
43. ம – சந்திரன்,நேரம்,எமன், அசோகமரம், சிவன், மத்திமம்
44. மா – அறிவு, பெரிய, அழைத்தாய், ஆணி, இடை, மாமரம், வயல், அன்னை, கருமை, விலங்கு, மான், சிங்கம், நிலம், யானை, குதிரை, வண்டு, இலட்சுமி, அன்னம், சரஸ்வதி, அசைச்சொல்
44. மீ – மகிமை, மேலிடம், ஆகாயம், அன்பு, உயரம், மேன்மை
45. மூ – மூப்பு, முன்று, கேடு
46. மே – அன்பு, மேன்மை, விருப்பம், மேல்
47. மை – அஞ்சுகம், மதி, மலடு, அழுக்கு, பாவம், ஆடு, நீர், குற்றம், கருநிலம், இருள். கண்மை, மேகம், பிறவி, இளமை, எழுதும் மை
48. மோ – மோத்தல், முகர்தல்
வ இனத்து ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்:
49. வா – ஏவல்,வருதல்
50. வி – ஆகாயம், விசும்பு, விசை, அறிவு, பிரிவு, பறவை, காற்று, திசை, கண், மிகுதி, மாறுபாடு
51. வீ – கொல்லுதல், மகரந்தம், மோதல், மலர், சாவு, பறவை
52. வே – வேவு, ஒற்று
53. வை – கூர்மை, புல், வைக்கோல், வையகம், கீழே வைத்தல்
54.வௌ – திருடுதல், பிடித்தல், கவ்வுதல், வேறுசொல்
ர இனத்து ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்:
55. ரா – ராத்திரி
ய இனத்து ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்:
56. யா – ஐயம், அகலம்,தினம்,ஒரு,வகை மரம்,வாசித்தல்,கட்டுதல்,செய்யுள்,பாட்டு,யாவை,யானை,அசைச்சொல்