பைபிள் வாக்கியங்கள் -BIBLE VERSES IN TAMIL

By TAMIL KAVITHAI

Published on:

Bible Verses in Tamil – பைபிள் வாக்கியங்கள்;

தினம் தினம் ஏதோ ஒன்றை தேடி இந்த வாழ்க்கை நகர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த தேடல்கள் தேகத்தை பாதிப்பதோடு தேகத்தை ஆடையாய் வைத்திருக்கும் உள்ளுயிரை ரணப்படுத்துகின்றன.தேடல்களின் பிறப்பிடம் ஆசை…

ஆசையற்ற மனிதனை பார்ப்பது என்பது அரிதினும் அரிது.ஆனால் ஆசைகளின் வரம்புகளை தீர்மானிக்கும் திறமையை பெற்ற மனிதன் ஆசைகளை ஆளும் தகுதியை பெறுகிறான்.

யேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு நம் வாழ்க்கையை மேம்படுத்த நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு எழுதப்படுகிறது.

பைபிள் என்பது கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல.அதையும் தாண்டி,அனைத்து மதத்தினரும் படித்து பயனடைய நிறைய வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ஒரு புத்தகமாகவே நாம் அதை பார்க்க வேண்டும். இந்த பதிவில் பைபிளில் நமக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும் வகையில் அமைந்துள்ள வாக்கியங்கள், சங்கீதம்,யோவான்,நீதிமொழி போன்றவற்றிலிருந்து எடுத்து எழுதப்பட்டுள்ளது.

Motivation Bible Verses in Tamil

Motivation Bible Verses in Tamil:

எந்த மனிதனும் தேவனை கண்டதில்லை ஆனால் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கும் பொழுது தேவன் நம்மில் வசிப்பார்.

யோவான் 4:12

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 1:2

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் பதிலருளும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பதைக் கேட்டருளும்.

சங்கீதம் 4:1

Bible Verses in Tamil

கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

சங்கீதம் 5:8

 

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.சங்கீதம் 5:12

கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.சங்கீதம் 5:1

கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.சங்கீதம் 6:1

Bible Verses in Tamil

கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.சங்கீதம் 6:9

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.சங்கீதம் 7:1

Blessing Bible Verses in Tamil || Today bible verses in Tamil || Daily bible verses in Tamil

குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.சங்கீதம் 7:15

நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.சங்கீதம் 7:17

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.சங்கீதம் 9:9

Bible Verses in Tamil

கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.சங்கீதம் 9:10

துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.சங்கீதம் 10:4

கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; சிறுமைப்பட்டவர்களை மறவாதேயும்.சங்கீதம் 10:12

கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.சங்கீதம் 11:5

Powerful Promise Bible verses in tamil || Faith bible verses in Tamil

அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.சங்கீதம் 12:2

Bible Verses in Tamil

நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.சங்கீதம் 13:5

கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.சங்கீதம் 13:6

தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் இலஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.சங்கீதம் 15:5

எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்; பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள்.தெசலோனிக்கேயர் 5-16:17

Bible Verses in Tamil

நேரான பாதையில் இருந்து விலகாதே.அப்பாதையே நல்லதும் சரியானதும் ஆகும்;ஆனால் எப்பொழுதும் தீமையில் இருந்து விலகியிரு.நீதிமொழி 4;27

கர்த்தர் உன்னை வழிநடத்துவார். அவர் தாமே உன்னுடன் இருக்கிறார்.அவர் உன்னைக் கைவிடமாட்டார்.உன்னை விட்டு விலகமாட்டார்.கவலைப்படாதே.பயப்படதே உபாகமம் 31:8

நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி,உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.ரேமியா 30:17

Bible Verses in Tamil

நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்.நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.யோ.15:7

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.சங்கீதம் 23:1

Positive bible quotes in Tamil || Today bible verse in tamil

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்.சங்கீதம் 138:7

Bible verses in Tamil

அழிந்து போகிற ஆமணக்கிற்காக கவலைப்படாதே,அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காக கவலைப்படு சுவிசேஷம் அறிவி!-

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரணோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.ரோமர் 6:23

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள் 19:17

அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை.ரோமர் 9:33

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;திகையாதே,நான் உன் தேவன்;நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்;என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.ஏசாயா 41:10

ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம் பண்ணினால்,அவனோடு இரண்டு மைல் தூரம் போ.மத்தேயு 5:41

உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு,உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.மத்தேயு 5:42

நீ ஏன் கலங்குகிறாய்?ஏன் எனக்குள் தியங்குகிறாய்?தேவனை நோக்கிக் காத்திரு;என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.சங்கீதம் 42:11

Bible Verses in Tamil

பரிசுத்த ஆவியானவர் தங்கும் இடமாக உங்கள் சரீரம் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ளார்.தேவனிடமிருந்து ஆவியை நீங்கள் பெற்றீர்கள்.நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல.பரிசுத்த கொரி 6:19

நாம் எந்த மனித அதிகாரத்தையும் விட கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போஸ்தலர் 5:29

போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல  இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள்.ஆனால் உண்மையில் அவர்கள்,ஓநாய்களைப் போல அபாயமானவர்கள் மத்தேயு 7:15

Bible verses in Tamil

பைபிள் வசனங்கள் – Hard Time bible quotes in Tamil

பார்வையால் அல்ல;விசுவாசத்தினாலே‌ நடக்க2 கொரி 5:7

கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்.ஏனென்றால்,கர்த்தர் நம்பத்தகுந்தவர் என்பதை காட்டுவார்.எரேமியா 17:7

சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும்,எங்களைக் காப்பாற்றும்.சங்கீதம் 80:7

ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.மத்தேயு 6:11

“பேசிச் சிரிக்க நல்லவர்களாக சில நண்பர்கள் இருப்பார்கள்.ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனை விடச் சிறந்தவன்.நீதிமொழிகள் 18:24

Bible Verses in Tamil

ஞானத்தை நேசி,ஞானம் உன்னைப் பெரியவனாக்கும்.ஞானத்தை முக்கியமுள்ளதாக்கு.ஞானம் உனக்கு மதிப்பைக்கொண்டு வரும்.நீதிமொழிகள் 4:8

ஒருவன் தான் சொல்லுகின்றவற்றில் எச்சரிக்கையோடு இருந்தால் அது அவன் வாழ்வைக் காப்பாற்றும். ஆனால் சிந்தித்துப் பார்க்காமல் பேசுகின்றவர்க ளின் வாழ்க்கை அழிந்துப்போகும்.நீதிமொழிகள் 13:3

வலிமையும்,மகிழ்ச்சியும் கர்த்தர்‌ வசிக்கும் இடத்தில் உள்ளன. கர்த்தர் ஒரு பிரகாசமான வெளிச்சத்தைப் போன்றவர்.நாளாகமம் 16:27

திட்டமிடுவதற்கு முன்பு நல்ல அறிவுரைகளைப் பெறவேண்டும் நீதிமொழிகள் 20:18

அதிகம் கேளுங்கள் குறைவாக பேசுங்கள் நீங்கள் கேட்கிறவற்றைப் பற்றிக் கவனமாய் சிந்தியுங்கள். நீங்கள் எப்படிக் கொடுக்கிறீர்களோ அந்தப்படியே தேவன் உங்களுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாக தேவன் உங்களுக்குக் கொடுப்பார். ஆனால் நீங்கள் கொடுப்பார்.மாற்கு 4:24

ஞானத்தின் குரலைக் கேட்டு உன்னால் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிசெய்.நீதிமொழிகள் 2:2

வாழ்க்கை நிச்சயமில்லாதது எனவே அதிகாலையிலே நடுவை செய்.மாலை வரை உன் வேலையை நிறுத்தாமல் செய். ஏனென்றால்,எது உன்னை செல்வந்தனாக்கும் என்பதும் உனக்குத் தெரியாது. நீ செய்கிற அனைத்துமே உனக்கு வெற்றியைத் தரலாம்.பிரசங்கி 11:6

Bible Verses in Tamil

ஒருவருக் கொருவர் அன்பு செலுத்துவ துதான் மிக முக்கியமா னது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவ ரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையா கச் சேர்க்க வல்லது.கொலோசெயர் 3:14

உங்களுக்குத் தீமை செய்கிற வர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள்.ரோமர் 12:14

உன்னை பார் முதலில்”உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துணடினைக் கவனிக்காது,உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள்.அது ஏன்?மத்தேயு 7:3

எனவே, கணவனும் மனைவியும் இருவரல்ல ஒருவரே. அ வர்களை இணைத்தவர் தேவன். என எவரும் அ வர்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது” மத்தேயு 19:6

மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத் திருப்தியைத் தேவன் அளிப்பார்.மத்தேயு 5:6

நீங்கள் உயிர்வாழத்
தேவையான உணவிற்காகக்
கவலை
கொள்ளாதீர்கள்.
உங்கள் உடலுக்குத்
தேவையான உடைக்காகவும்
கவலைகொள்ளாதீர்கள்.
உணவைவிடவும்
| முக்கியமானது ஜீவன்.
உடையைவிடவும்
முக்கியமானது சரீரம்.மத்தேயு 6:25

Bible Verses in Tamil

பொறுமை யுள்ளவன் மிகவும்
புத்திசாலி. விரைவில்
கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.நதிமொழிகள் 14:29

ஒருவன் ஞானமுள்ளவனாக விரும்பினால், அவனது தவறினை மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதை வெறுக்கிறவனோ முட்டாளாகக் ஆனால் தீயவன் தண்டனை பெறும்படி கர்த்தர் தீர்ப்பளிக்கிறார்.கருதப்படுகிறான். நல்லவர்களில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார்.நீதிமொழிகள் 12:1-2

அவர்களின் கண்களில் வடியும் கண்ணீரை தேவன் துடைப்பார்.இனிமேல் அங்கே மரணம் இருக்காது.துக்கமும், அழுகையும்,வேதனையும் இல்லாமல் போகும்.பழைய முறைகள் எல்லாம் போய்விட்டன. வெளி 21:4

நம் பாவங்களை ஒத்துக்கொண்டால்தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவ ங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார்.1யோவான் 1:9

Bible Verses in Tamil Images || Famous bible word Tamil

சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது.தேவனுடைய இராஜ்யம் நெருங்கிவிட்டது.உங்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள்.நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள் மாறுகு, 5

Bible Verses in Tamil

மற்றவர்களைவிட தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்கள் துன்பத்தையே உருவாக்குகிறார்கள்.ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பவர்கள் ஞானம் உடையவர்கள்.நீதிமொழிகள் 13:10

வார்த்தைகளில் கவனம் நீங்கள் எவ்வளவு அதிகமாக பேசுகிறீர்களோ,அவ்வளவு குறைவாக அவை அர்த்தப்படுத்துகின்றன. அதனால் அவர்களுக்கு என்ன நல்லது?பிரசங்கி 6:11

தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.சங்கீதம் 136:25

பாவத்திடம் தோல்வி அடைந்து விடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள்.ரோமர் 12:21

என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.சங்கீதம் 86:11

“தேவன் என் அரண்” நீர் என்னைப் பாதுகாத்தீர்.எனக்கு வெற்றி அளித்தீர்.என் பகைவரை உதவினீர் நான் வெல்ல சாமுவேல் 22:33,36

Motivational Bible Verses in Tamil || Tamil bible

Bible Verses in Tamil

மனிதன் தீமை செய்வதை விட்டு நன்மை செய்ய வேண்டும்.மனிதன் அமைதியை நாடி, அதைப் பெற முயல வேண்டும்.பேதுரு 3:11

கர்த்தரையும்,அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப் போங்கள்.1 நாளாகமம்16:11

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.நீதிமொழிகள் 21:23

Bible verses in Tamil

TAMIL KAVITHAI

Leave a Comment