நகைச்சுவை என்பது வாழ்க்கைக்கு சுவராசியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஒரு பகுதியாகும்.நகைச்சுவையை உருவாக்கும் வழிகளில் கடி ஜோக்ஸ்க்கும் முக்கிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம்.மக்களை மகிழ்விக்க பேச்சாளர்கள் மற்றும் காமெடி நடிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உக்தியே இந்த கடி ஜோக்ஸ் ஆகும்.
எவ்வளவோ….துன்பங்களிலும் மக்கள் தங்களுக்கான நேரத்தை ஒதுக்கி கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அந்த மாதிரியான சூழ்நிலைகளில் மக்கள் பெரும்பாலும் நகைச்சுவையே விரும்பி பார்க்கின்றனர் கேட்கின்றனர்.அந்த வகைகளில் இந்த கடி ஜோக்ஸ் ஐ பரவலாக படித்து பயன்பெறுகின்றனர்.
1.கபிலன்: நாணயமும், சில்லறையும் ஒன்னு தான்டா?முகிலன்: ஆமா!கபிலன்: அப்போ ஏன்டா நீங்க ஒரு நாணயமானவர்னு சொன்ன சிரிக்குறாங்க… நீங்க ஒரு சில்லறைப்பயல்னு சொன்ன அடிக்குறாங்க..!
2.மருமகன்: பொண்ணு கிளி மாதிரி அப்படின்னு சொன்னீங்களே உங்க பொண்ணு என்னங்க அருவாளை எடுத்துட்டு வெட்ட வருது . மாமியார்: அது வெட்டுக்கிளிங்க
3. ஏன்? லேட்டா வந்தேன்னு அம்மா கேட்டா அது நலன் விசாரணை. ஏன்? லேட்டா வந்தேன்னு பொண்டாட்டி கேட்டா அது போல விசாரணை.
4.ராகுல் : டாக்டர் சார் என் மனைவி கொஞ்சம் அதிகமா டி.வி பாக்குறாங்க ..டாக்டர்: “எப்படி சொல்றீங்க?”… ராகுல்: கரண்ட் கட்டானாலும், டார்ச் லைட் அடிச்சி பாக்குறா சார்..
5.அம்மா : நம்ம புள்ள எங்க காசு வச்சாலும் எடுத்திட்டு போயிடறாங்க… அப்பா : அவனுடைய கல்லூரி புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்..
6.ரகு : ஒரு காப்பி எவ்வளவு ணா?..டீ கடைக்காரர் : 10 ரூபாய்…ரகு : பக்கத்து கடையில 1 ரூபாய் னு எழுதியிருக்காங்களே ?… டீ கடைக்காரர்:அது ஜெராக்ஸ் கடை பா….
7.மருத்துவர் :சாரி சார் உங்க கிட்னி ஃபெயில் ஆகிடுச்சு …நோயாளி :நான் என் கிட்னி ய படிக்க வைக்கவே இல்லேயே டாக்டர்.
8.பாபு: நான் உன் கிட்ட எதாவது கடன் வாங்கி இருக்கேனா? லாதா…லாதா: இல்லையே பாபு. பாபு:பின்ன ஏன் எனக்கு உங்க மேல இன்ட்ரெஸ் அதிகமாகிட்டே போகுது.
9.அம்மா: ஸ்கூல்ல டீச்சரை எதிர்த்து பேசுனியா கனி… உனக்கு கொஞ்சம் கூட பயம் இல்லையா கனி.கனி :நீ தான் மா கடவுளுக்கு மட்டும் தான் பயப்படனும் னு சொன்ன
10.பர்ஸ் ல இருந்த பணத்தை ஃபுல்லா வாங்கிட்டு,புதுசா காலி பர்ஸ் அ கொடுப்பான் பாரு நகைக்கடைக்காரன்
11. அண்ணா சாப்பாடு சாப்பிடறதுல யாரு ரொம்ப கெட்டிக்காரன் ராமனா?பீமனா? ராமன் தான் தம்பி அப்புறம் ஏன்னா நல்லா சாப்பிடுறவங்கள பார்த்து சாப்பாட்டு ராமன் சொல்றாங்க?
12. நம்ம தலைவர நீங்க எப்படி துறவின்னு சொல்றீங்க? ஆமாங்க உண்மை நேர்மை நாணயம் கடமை உரிமை எல்லாத்தையும் துறந்துட்டு வாழ்ந்துட்டு இருக்காரே அதனால் தான் அவர துறவின்னு சொல்றோம்.
13. அரசே அந்த புலவன் எழுதி பாடிய பாட்டில் முழுக்க உங்களை புகழ்ந்து பாடி உள்ளான் பின் ஏன் அவன் மேல் கோபம் கொள்கிறீர்கள்… அமைச்சரே அந்த பாட்டின் கீழே படித்து பாருங்கள் மேலே எழுதி அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல என்று எழுதியுள்ளான்.
Kadi jokes in Tamil With Answers – சிறுவர் கடி ஜோக்ஸ்
மனதின் காயங்களை நாம் மறைப்பதற்கு புன்னகை எனும் முகமூடியை மக்கள் அணிந்து கொள்கிறார்கள்.அந்த முகமூடிக்கு உயிர் கொடுக்கும் வகைகளில் முக்கிய இடத்தினை பெறுவது கடி ஜோக்ஸ் ஆகும்.எவ்வளவு மகிழ்ச்சி வந்தாலும் ஒரு நகைச்சுவையால் தான் அதை மறக்க முடியாத நினைவுகளாக சேமிக்க முடியும்.
14. ஒரு ஹோட்டல் முதலாளி அவருடைய பணியாளரிடம் அந்த டேபிளில் உட்கார்ந்திருந்த நபர் ஏன் சாப்பிடாமலே எழுந்து சென்றுவிட்டார் என்று கேட்டார். அதற்கு பணியாளரும் அந்த நபர் என்னிடம் உணவு எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு நான் வீட்டு சாப்பாடு போலவே இருக்கும் என்றேன் உடனே எழுந்து போய்விட்டார்.
15. இந்த உலகத்திலேயே ரெண்டு விஷயத்தை தான் ரொம்ப நேரம் மொரச்சி பார்க்க முடியாது.ஒன்னு சூரியன் இரண்டாவது பொண்டாட்டி
16. மனைவி தன் கணவனிடம் கேட்டாள் நான் அணிந்திருக்கும் உடை எப்படி இருக்கிறது என்று? அதற்கு கணவன் சொன்னான் உன்னைப் போலவே இருக்கிறது என்று, அவ்வளவு அழகாக இருக்கிறதா என்றாள் மனைவி? அதற்கு கணவன் இல்லை! ரொம்ப லூசாக இருக்கிறது என்று கூறினான்.
17. காதலுக்கும் நட்புக்கும் ஓட்டப்பந்தயம் வைத்தால் எது ஜெயிக்கும் நட்பு தான் ஜெயிக்கும். ஏனென்றால் நட்புக்கு விட்டுக் கொடுக்க மட்டுமே தெரியும் ஆனால் காதலிக்கு தான் விட்டுட்டு ஓட தெரியும்.
18. ஹோட்டல் ஓனரிடம் சென்று ஒருவர் சாப்பாட்டில் கரப்பான்பூச்சி இருப்பதாக கூறினார்.கரப்பான் பூச்சிக்கெல்லாம் நாங்கள் காசு வாங்குவதில்லை நீங்கள் சாப்பிடுங்கள் என்று ஓனர் கூடினார்.
19. டேய் எப்ப பாரு பேஸ்புக்ல இருக்க உனக்கு வேற வேலையே இல்லையா அப்படின்னு அம்மா கேட்க… எப்ப பாரு நான் பேஸ்புக்ல இருக்கிறதே நீ பார்த்துக்கிட்டே இருக்க உனக்கு வேற வேலையே இல்லையா? அப்படின்னு மகன் பதில் சொன்னான்.
20.கடன் கொடுத்தவன்: வாங்கின காசை கொடுக்க முடியல உனக்கெல்லாம் வெக்கம் மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லையா? கடன் வாங்கியவன்: அது எல்லாம் இருக்குங்க ஆனால் காசு தான் இல்ல
21.டீச்சர்: முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?மாணவன்: நாங்க எல்லாரும் முட்டாள் சார். நீங்க எங்களை அடிக்கிறது நாள நீங்கதான் சார் அடிமுட்டாள்
22. வாங்க மாப்ள எப்படி இருக்கீங்க நான் அடிச்ச சரக்கு நல்லாவே இல்ல மாப்ள போதையே ஏறல! போத எல்லாம் நல்லாதான் ஏறி இருக்கு நான் உன் மாப்பிள்ளை இல்ல உங்க அப்பன்
23. நான் ஒரு மணி நேரத்துல பண்றத என் பொண்டாட்டி ரெண்டே நிமிஷத்துல முடிச்சிடுவா… அப்படி என்ன பண்ணுவாங்க? நான் ரொம்ப நேரம் சமைப்பன் அவ சீக்கிரம் சாப்பிட்டு விடுவா!
Mokka Jokes Questions and Answers in Tamil – கடி ஜோக்ஸ் விடுகதைகள் pdf
காதலை விடவும் நகைச்சுவை வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாகும்.உணர்ச்சிகளை வெளிப்படுத்த நகைச்சுவை என்பது மிகச் சிறந்த வழியாகும்.நகைச்சுவை இல்லாமல் வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ள முடியாது.
24. கையில பத்து ரூபா கூட இல்ல எப்படி தான் என் பொண்ணு கல்யாணத்தை நடத்த போறானோ? ஏன்டா கவலைப் படுற இந்த பத்து ரூபா உன்னோட கல்யாணத்தை செம்மையா நடத்து
25. சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு சேல்ஸ் டிபார்ட்மெண்ட்ல ஏதாவது அனுபவம் இருக்கா? வேலை கேட்டு வந்தவர்: ஏன் இல்லை என் வீடு, காரு, தங்க நகை எல்லாத்தையும் வித்ருக்கன் சார்.
26. டாஸ்மார்க் கடை அருகே ஆடு ஒன்று மேய்ந்து கொண்டு இருந்ததாம் அதனிடம் இங்கு ஏன் மேய்கிறாய் என்று கேட்டதற்கு இங்கதான் நிறைய புல்லு(ஃபுல்) கிடைக்கும் என்று சொன்னாங்க
27. நம்ம நாட்டோட ஒரு நல்ல குடிமகனுக்கு என்னலாம் தேவை …ஊறுகாய் சார்
28.நீதிபதி: திருடனை பார்த்து நீ அவர்கிட்ட பணத்தை பறிச்சு கிட்டு ஓடுனியா? இல்லங்க ஐயா நான் கத்திய மட்டும் தான் காட்டினேன் அவரே தான் காசு எடுத்து கொடுத்தார்.
29. திருடப் போகும்போது எதுக்குடா பொண்டாட்டியையும் கூட்டிட்டு போன… இந்த காலத்துல புருஷன் போல இருக்கு ரெண்டு பேருமே வேலைக்கு போனாதாங்க பொழைக்க முடியும்
30. நைட் உங்க வீட்ல ஏன் சார் அவ்வளவு சத்தம் கேட்டுச்சு? அது ஒன்னும் இல்ல சார் என் பொண்டாட்டிய திட்டிகிட்டு இருந்தன். அவங்க ஊருக்கு போய் தான் ரெண்டு நாள் ஆச்சே சார்? அதான் தைரியமா சத்தம் போட்டு திட்டுன.. சார்
31. என் வீட்டு பூட்ட உடச்சி 5 லட்சம் திருடிட்டாங்க சார்;பூட்டுக்குள்ள எப்படி அவ்ளோ பணம் வச்சிருந்தீங்க
32. எதுக்கு சார் உங்க பொண்டாட்டி உங்க தலைல சுத்தியல் போட்டாங்க…யாரோ சுத்தி போட்டா திருஷ்டி போயிடும்னு சொல்லியிருக்காங்க…
33. இந்த வளையல் எவ்வளோங்க? ஆயிரம் ரூபா மா!.. கொஞ்சம் குறையுதுங்க நான் அப்புறம் வந்து வாங்கிக்கிறேன்! எவ்வளவு மா குறையுது? ஆயிரம் ரூபாவும் குறையுது
34. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்ககிக்குள்ள போட்டு யூஸ் பண்ண முடியாது
35. தேள் கொட்டுனா வலிக்கும் ஆனா முடி கொட்டுனா வலிக்காது
மதுரை முத்து கடி ஜோக் – கடி ஜோக்ஸ் புதிர்
கடி ஜோக்ஸ் என்பது நகைச்சுவைக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.எவ்வளவு தான் துன்பங்களை அனுபவித்தாலும் ஒரு சிறிய நகைச்சுவை வாழ்க்கையை அடுத்த கட்ட நகர்விற்கு தள்ளும்.நகைச்சுவையை கொண்டு பல அரசியல் புரட்சிகளே நடந்துள்ளது.
36. கல்ல தூக்கி கிணத்துல போட்டா அது மூழ்கி போது ஏன்? அதுக்கு நீச்சல் தெரியாது
37. ஒரு யானை தண்ணியில விழுந்தா என்ன ஆகும் – நீர் யானை ஆகும்
38. வெத்தலை கூட சேராத பாக்கு என்ன? மைசூர் பாக்கு
39. தூக்க மாத்திரை சாப்பிட்டால் தூக்கம் வரும் ஆனால் இருமலுக்கு மாத்திரை சாப்பிட்டால் இருமல் வராது.
40.அக்காவோட தோழிய அக்காவா நினைக்கலாம் தங்கச்சியோட தோழிய தங்கச்சியா நினைக்கலாம் ஆனா பொண்டாட்டியோட தோழிய பொண்டாட்டி னு நினைக்க முடியாது.
41.தினமும் தண்ணி தெளிச்சு கோலம் போடுறாங்க ஏன்?கோலத்த போட்டுட்டு தண்ணிய தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்
42.மோதிரத்த கை ல தான் போடனும் நீ ஏன் கால்ல போட்ரூக்க?இது கால் பவுன் மோதிரம்
43.சார் நீங்க எவ்ளோ பெரிய பருப்பா இருந்தாலும் உங்கள வச்சு சாம்பார் வைக்க முடியாது
44.வேகமா ஓடுவது காலா இருந்தாலும் பரிசு கையில் தான் குடுப்பாங்க
45.படிச்சு முடிச்சிட்டு என்ன செய்ய போறீங்க;புக்க மூடி வைக்க போறேன்
46. பேஷண்ட்:ரெண்டு இட்லிய முழுசா கூட சாப்பிட முடியல சார்?டாக்டர்:யாராலும் அத முழுசா சாப்பிட முடியாது புட்டு புட்டு தான் சாப்பிட முடியும்.
47.உங்க ஊர்ல தங்க வீடு கிடைக்குமா? தங்கத்துல வீடு கிடைக்காது கூரை வீடு ஓட்டு வீடு மாடி வீடு கிடைக்கும்
Mokka jokes in Tamil with Answers – கடி ஜோக்ஸ்
தமிழ் மொழியில் நகைச்சுவை என்பது ஆதி காலத்தில் இருந்தே ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.கட்டியக்காரன் என்ற வேடத்தில் மூலம் நாடகத்தில் கூட நகைச்சுவையை கலந்தவர்கள் தமிழர்கள்.எவ்வளவுதான் நாகரீகம் வளர்ந்தாலும் நகைச்சுவை என்பது குறையாது.
48.பாபு: காதல்னா என்ன? ராஜா: காதல் ஒரு மழை மாதிரி தான் இருக்கும், நனையும் போது சந்தோஷம் அடுத்த நாள் ஜலதோஷம்
49.நேத்து எனக்கு ஜாதகம் பார்த்தாங்க அப்போ எனக்கு அறிவு ரொம்ப அதிகமா இருக்கும் னு சொன்னாங்க! நான் ஏன் ஜாதகத்த நம்புவது இல்லன்னு இப்போவாது புரிஞ்சுக்க…
50.சார் இவரு உங்க கூட பிறந்த தம்பியா? இல்லை சார்…நாலு வருஷம் கழிச்சு தான் இவன் பொறந்தான்….
51.கல்யாண வீட்டில் காலணி தொலைத்தவன் எழுதிய கவிதை:உள்ளே ஒரு ஜோடி சேர வெளியே ஒரு ஜோடி பிரிந்து போறது.
52.ஆண்கள் குடித்தாலும் பெண்கள் குளித்தாலும் போட்ட வேஷம் கலைந்து விடும்
53. ஆசிரியர்: ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கனும் கண்டிப்பா? மாணவன்: அப்புறம் ஏன் சார் தூங்குனா திட்றீங்க
54.காதலி:நைட்ல தனியா ஓடி வர பயமா இருக்கு! காதலன்:சரி அப்போ உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா…
55.மாப்ள கோச்சிட்டு போறாரு நீங்க பாத்துட்டு நிக்குறீங்க…ஆறு வருஷத்துக்கு முன்னாடி தீபாவளிக்கு வந்தாரு இப்போ தான் போறாரு போகட்டும்
56.அரசன்:என்ன பத்தி புகழ்ந்து பாடிய கவிஞர் என்ன பண்றார்?மந்திரி: சோத்துக்கு பிச்சை எடுக்கிறார் மன்னா!அரசன்: ஏன்? மந்திரி:பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது மன்னா!
57.ஒருத்தன் மழையில நெனஞ்சிட்டு வந்தானாம்!அவன் தலை பெருசா வீங்கி இருந்துச்சாம்!ஏண்டா னு கேட்டா கொட்டுற மழையில நெனஞ்சிட்டு வந்தாராம்
58. பாபு:எனக்கு இன்டர்வியூ போறது பிடிக்கல டா?ராஜா: ஏன்டா? பாபு: நாலு பேர் நம்பள கேள்வி கேட்கிற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு எங்க அப்பா சொல்லி இருக்காருடா!
59.பாபு: எதுக்குடா அப்பா பேரு பிரிட்ஜ்ல எழுதி வைக்கிற? ராஜா: எங்க அப்பா பேரு எப்பவுமே கெட்டுப் போய்ட கூடாது மாப்பிள!
60.ஜனவரி 14 க்கும் பிப்ரவரி 14 க்கும் என்ன வித்தியாசம் ஜனவரி 14 அன்னைக்கு பொங்கல் ஃபேமஸ் பிப்ரவரி 14 அன்னைக்கு அல்வா ஃபேமஸ்
61.கணவன்: எவ்வளவு நாள் சொல்றேன் சமைக்கிறப்போ மொபைல் யூஸ் பண்ணாதன்னு இப்போ பாரு ரசத்துல உப்பு இல்ல புளியும் இல்லை! மனைவி: நான் எவ்வளவு நாள் தான் சொல்றது சாப்பிடும்போது மொபைல் யூஸ் பண்ணாதீங்கன்னு நீங்க ஊத்துனது ரசம் இல்ல பக்கத்துல வச்சிருந்த பச்சை தண்ணி
Kadi jokes in tamil with answers pdf – மொக்க ஜோக்ஸ் விடுகதை
நகைச்சுவை எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கிறது இன்றைய காலகட்டத்தில்….இதயம் இறுகிப் போகும் வாழ்க்கை சூழலில் நகைச்சுவைக்கான தேடல் அதிகமாக இருக்கிறது.
62.மனைவி: ஏங்க நாளைக்கு நமக்கு கல்யாண நாள் நான் இதுவரைக்கும் போகாத இடத்துக்கு எனக்கு கூட்டிட்டு போறீங்களா? கணவன்: அப்போ வா தங்கம் நம்ம கிச்சனுக்கு போவோம்…
63.மனைவி:எல்லை மீறிய பயங்கரவாதம் னா என்னாங்க?கணவன்: என்ன கரண்டியாக அடிக்கும் போது அது ஜன்னல் வழியா பக்கத்து வீட்டுக்காரர் மேல விழுந்ததுனா அதாம்மா எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
64. கணவன்:ஏண்டி இவ்ளோ வெயிட்டா புடவை எடுக்கிற மனைவி: கட்டுவது நான் தானே உங்களுக்கு என்ன கஷ்டமா இருக்கு!கணவன்: துவைக்கிறவனுக்கு தான் மா கஷ்டம் தெரியும்
65.மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்க பொண்ணு நல்லா இல்லன்னு அவர்கிட்ட சொல்லிட்டீங்களா? கணவன்: நான் ஏன் சொல்லணும் அவன் எனக்கு சொன்னானா? பாவி பய
66.மனைவி: நீங்க செத்துப் போயிட்டீங்கனா உங்க கூடவே நானும் வந்துவிடுவங்க… கணவன்: அப்பவே ஜாதகம் பார்க்கும் போது ஜோசியக்காரன் சொன்னான் செத்தாலும் சனியன் விடாது என்று…
67.கணவன்: ஏண்டி சாப்பாட்டுல…இவ்வளோ கல்லு இருக்கே… ரெண்டு கை எதுக்கு இருக்கு அரிசியை புடச்சிட்டு போடலாம் ல….மனைவி: உங்களுக்கு தான் 32 பல்லு இருக்கே…கடிச்சு திங்கலாம் ல….
68.மனைவி: ஏங்க பக்கத்து வீட்டுக்காரரோட பொண்டாட்டி யாரையோ கூட்டிட்டு ஓடி போயிடடாங்களாம்!கணவன்: விடுமா! அவனுக்கு நல்ல நேரம்…
69.மனைவி: எனக்கு உங்கள பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு! கணவன்: ஜோசியக்காரன் அப்பவே சொன்னா சனியின் பார்வை தொடரும் சார்னு…
70.கணவர்: வரதட்சணை வாங்கிட்டு உன்ன கல்யாணம் பண்ணது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா? மனைவி: அதுக்கு இப்போ என்ன? கணவர்: அதாம்மா வரதட்சணை வாங்காமல் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் னு யோசிக்கிறேன்.
71.கணவர்:இன்னுமா?சமையல் ரெடியாகல….நான் ஓட்டலுக்கு போய் சாப்பிட்டுக்கிறன்…என்ன விடு மனைவி:ஒரு 10 நிமிஷங்க… கணவர்:சமையல் ரெடியாகிடுமா? மனைவி:நான் ரெடியாகியுவன்….ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்
72.மனைவி: என்ன மாதிரி ஒரு பொண்ணு இந்த உலகத்துல உங்களுக்கு எங்க தேடினாலும் கிடைக்காது… கணவன்: எனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு…உன்னை மாதிரியே தேட…
73.மனைவி:ஏங்க நம்ம பொண்ணுக்கும் வயசாகிடுச்சி….அவளுக்கு ஒரு பையன பார்த்து கட்டி வச்சிடலாம் ல… கணவர்: இரும்மா… அவளுக்கு ஏத்த மாதிரி அழகா…ஒரு பையன பார்ப்போம்…அது வரைக்கும் வெயிட் பண்ணலாம்… மனைவி:எங்க அப்பா அப்படியா வெயிட் பண்ணாரு…
74.மனைவி: ஏங்க நமக்கு இன்னைக்கு வெட்டிங் டே… கோழி அடிச்சி பிரியாணி செய்யட்டுமா? கணவன்:நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் மா தண்டனை குடுக்குற….
75.மனைவி: நான் ஒரு மூனு மணி நேரம் வெளிய போறேன்… உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரனுமா? கணவர்: எதுவும் வேண்டாம்!மூனு மணி நேரமே போதும்
76. பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவன் மனைவியை பார்த்து ஒரு நாளைக்கு பெண்கள் முப்பதாயிரம் வார்த்தைகள் பேசுகிறார்களாம்! ஆண்கள் 15 ஆயிரம் வார்த்தைகள் தான் பேசுறாங்களாம்… பேப்பர் ல போட்டதுக்கு…மனைவி: ஆமா உங்களுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் ரெண்டு தடவ சொன்னா தான் புரியுது…
77.மனைவி:நம்ம ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனைனா அது நாலு செவுத்துக்குள்ள தான் நடக்கணும்.கணவன்: அப்போ சண்டை வந்தா எனக்கு தப்பிச்சு போக கூட உரிமை இல்லையா மா…?