சுதந்திர தின வாழ்த்து கவிதைகள் – INDEPENDENCE DAY WISHES QUOTES IN TAMIL with Images

By TAMIL KAVITHAI

Updated on:

Happy independence day wishes in Tamil

இனிப்புகள் கொடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் நமது சுதந்திர தினத்தை…ஆனால்,இந்த இனிப்பின் பின்னால் எத்தனை கசப்பான வரலாறுகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

**எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது வாழ்க்கையல்ல…எதற்காக வாழ்கிறோம் என்பதே வாழ்க்கை* *நம் முன்னோர்கள் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார்கள்.நாம்…அந்த சுதந்திரத்தின் மதிப்பிற்காக வாழ்வோம். 🇮🇳

இந்த மண்ணின் விடுதலைக்காக எத்தனை லட்சம் வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்… அவர்கள் சிந்திய இரத்தத்தில் தான் இன்று நாம் சசுவாசிக்கும் சுதந்திரமான காற்று பிறந்தது.

ஒற்றுமை ஒன்றே நம்மை உயர்த்தும் ஆயுதம் என்று உணர்ந்த நாள் இது! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Happy independence day wishes in Tamil

அவர்களின் உயிர்த் தியாகத்திற்கு உயிர் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை.

சுதந்திர தினத்தை பெயருக்காக மட்டும் கொண்டாடாமல்,இந்தியாவை உலகின்முதன்மையான நாடாக மாற்ற நாம் ஒவ்வொருவரும் ஏதாவது செய்ய வேண்டும்.

நாடு வளர வேண்டும் என்றால் அரசு மட்டும் உழைத்தால் போதாது;ஒவ்வொரு குடிமகனின் உழைப்பும் இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு செங்கல்லாக இருக்க வேண்டும்.இந்த நாளில் உயிர்த் தியாகம் செய்த ஒவ்வொரு வீரரையும் நம் நெஞ்சில் நிறுத்தி போற்றி வணங்குவோம்.

மொழிகள் பல…மாநிலங்கள் பல…பண்பாடுகள் பல…ஆனால் நம் தாய்மண் ஒன்றே —இந்தியா! 🇮🇳 இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Happy independence day wishes in Tamil

ரத்தத்தில் பிறந்தால் தான் உறவுகள் உருவாக வேண்டும் என்பதில்லை…ஒரே நாட்டில் பிறந்து,வெவ்வேறு மாநிலங்களில் வாழ்ந்து,வெவ்வேறு மொழிகளைப் பேசி,வெவ்வேறு பண்பாடுகளைப் பின்பற்றினாலும்,”இந்தியா”என்ற ஒற்றை வார்த்தை நம்மை உறவுகளாக்குகிறது.

உலகெங்கும் வாழும் என் இந்திய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

உலகெங்கும் வாழும்என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!🇮🇳

ஆகஸ்ட் 15 ல் கிடைத்ததல்ல நாம் சுதந்திரம் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணம் நம் மக்களிடையே என்று ஒன்றுபட்டு தோன்றியதோ அன்றே நமக்கு மனதளவில் சுதந்திரமானது கிடைத்துவிட்டது.

உயிர்த்தியாகம் செய்த உறவுகளின் உணர்வுகளுக்கு உயிர் கொடுப்போம்.இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Happy independence day wishes in Tamil

சரித்திரத்தின்படி மாகாணங்களாக பிரிந்து கிடந்த நம் இந்திய தேசமானது சுதந்திரத்திற்கு பிறகு தான் இந்தியா எனும் ஒரு நாடாக உருவாகியுள்ளது. சுதந்திரப் போராட்டம் பல நல்ல பாடங்களையும் சில கசப்பான அனுபவங்களையும் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. 300 வருடங்கள் ஆங்கிலேயர்களின் பிடியில் அடிமைப்பட்டு கிடந்த நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உவமைக்கு ஏற்ப போராடி வெற்றி கண்டுள்ளோம் இந்த திருநாளில்…

ஆகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில் நமக்கு விடியலானது கிடைத்தது அதாவது நாம் சுதந்திரம் அடைந்தோம் இந்தியாவை விட்டு முழுவதுமாக ஆங்கிலேயர்கள் வெளியேறுவதாக நமக்கு அறிவித்திருந்தனர். எனவேதான் அந்த நாளை நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம்.

தாய் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

தாயின் மீது வைத்துள்ள அன்பை விட தாய் நாட்டின் மீதுள்ள பற்று தான் பெரியது.அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


Happy independence day wishes in Tamil

இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொரு சுதந்திர பிரஜைகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

முன்னூறு ஆண்டுகள் மூச்சின்றி வாழ்ந்தோம்…ஆம்…சுதந்திரம் என்பதும் சுவாசிக்கும் காற்றைப் போன்றது தான்.காற்றின் அருமையை அதை இழக்கும் வரை நாம் உணர்வதில்லை.அது போலத்தான் சுதந்திரத்தின் மதிப்பையும் அடிமை எனும் இருளில் இருந்த போதுதான் நம் முன்னோர்கள் உணர்ந்தார்கள்.

 

லட்சக்கணக்கான வீரர்களின் உயிர்த் தியாகங்களும்,கோடிக்கணக்கான மக்களின் அறப்போராட்டங்களும்,எண்ணற்ற தியாகங்களும் சேர்ந்து தான் நமக்கான இந்த சுதந்திரக் காற்றை பரிசளித்திருக்கின்றன.


இந்திய நாட்டின் மீது நேசம் கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


Happy independence day wishes in Tamil

விடுதலைக்காக வீர மரணம் அடைந்த ஒவ்வொரு போராளிகளையும் போற்றுவோம்…இந்த சுதந்திர திருநாளில்


இந்தியா எனும் நாட்டை உருவாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த நல்லவர்களை நினைவு கூறுவோம் இந்த நன்னாளில்


சுதந்திரத்திற்காகப் போராடிய அந்த வீரர்களின் மனதில் என்ன எண்ணங்கள் இருந்திருக்கும்?

“நாங்கள் இன்று அடிமைகளாக இருக்கலாம்…ஆனால் எங்கள் எதிர்கால தலைமுறைகள் ஒருபோதும் அடிமைகளாக இருக்கக் கூடாது!”

என்ற அந்த உன்னதமான எண்ணம் தானே அவர்களின் ஒவ்வொரு தியாகத்திற்கும் பின்னாலும் இருந்திருக்கும்?

Happy independence day wishes in Tamil

இந்திய தேசத்தின் மீது பாசம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சுதந்திரம் என்பது ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் உரிமை அல்ல அது அனைவருக்குள்ளேயும் இருக்கும் தார்மீக உணர்வாகும் .இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


யாரும் யாருக்கும் இங்கே இனிமேல் எப்பொழுதும் அடிமை இல்லை என்பதை உணர்வோம்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


 


ரத்தம் சிந்தி, யுத்தங்கள் பல நடத்தி அறவழியை ஆதாரமாய் கொண்டு பெற்ற இந்த சுதந்திரத்தை பேணி காப்போம் இனிய சுதந்திர நல்வாழ்த்துக்கள்


Happy independence day wishes in Tamil

சுதந்திர தின கவிதைகள் 2026 || சுதந்திர தின கவிதைகள் தமிழில்

இந்திய வரலாற்றையே சுதந்திரத்திற்கு முன் சுதந்திரத்திற்குப் பின் என்று இரண்டு பாகங்களாக தான் எழுத வேண்டும் ஏனென்றால் சுதந்திரத்திற்கு முன் நம்முடைய மண்ணில் மன்னர் ஆட்சியை நடைபெற்றுக் கொண்டிருந்தது அதற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சி நடைபெற்றது.

பின்பு தான் நாம் போராடி சுதந்திரம் பெற்ற பிறகு இன்று ஜனநாயக இந்தியாவில் மக்களாட்சி நடைபெறுகிறது எனவே இதனை கொண்டாடும் விதமாகத்தான் சுதந்திர தினத்தை இந்தியா வெகு விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறது.

சுதந்திர தினத்தில் நான் நினைவு கொள்ள வேண்டியது நம்முடைய முன்னோர்கள் நமக்கு இந்த சுதந்திரம் கிடைப்பதற்காக எவ்வளவு போராட்டங்களை சந்தித்தார்கள் ஆயிரக்கணக்கான போராளிகள் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தார்கள். அவர்களுடைய பார்வையிலிருந்து சுதந்திரமானது என்னவாக இருந்தது இப்பொழுது நம்முடைய கைகளில் இருக்கும் சுதந்திரமானது எப்படிப்பட்டதாக இருக்கிறது. அந்த சுதந்திரத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

Happy independence day wishes in Tamil


வீசும் காற்றை போல் சுதந்திரமாய் நம் கால்கள் பயணிக்கும் நேரமே உண்மையான சுதந்திரம் ஆகும். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


லட்சக்கணக்கான மக்கள் தங்கள் லட்சியமாய் சுதந்திரத்தை கொண்டு போராடி போர்க்களத்தில் மடிந்து பெற்ற வெற்றியே நம் சுதந்திரமாகும்…


Happy independence day wishes in Tamil

இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவதால் சுதந்திரத்தின் பின்னணியில் இருக்கும் கருப்பு பக்கங்களை நாம் மறந்து விடுதல் கூடாது. தேசத்திற்காக உயிரை தியாகம் செய்த வள்ளல்களை போற்றுவோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


 


இந்திய நாடு உனக்கு என்ன செய்தது என்று யோசிக்காதே; இந்த நாட்டிற்காக நாம் என்ன செய்தோம் என்று யோசித்துப் பார் சுதந்திரத்தின் அருமை புரியும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்….


இந்திய நாட்டின் விடுதலைக்காக வீர மரணம் அடைந்த வீரர்களை போற்றுவோம் புகழ்வோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சுதந்திரம் ஒன்றிற்காக தூக்கு கயிறை துச்சமான நினைத்து இன்னுயிரை இழந்த நம் தேசத்து போராளிகளை போற்றுவோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


Happy independence day wishes in Tamil

மாக்களை போல் நம் மக்களை நடத்தி, நம் வளங்களை எல்லாம் சுருட்டி, எதிர்த்து நின்ற நம் வீரர்களை எல்லாம் கொன்று குவித்த ஆங்கிலேயர்களிடம் அறவழியில் உறுதியாய் நின்று பெற்ற இந்த சுதந்திரத்தை பேணி காப்போம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


 


கடவுளை விடவும் சுதந்திரம் பெரியது என்பதை உணர்வோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


சுதந்திர தினம் கவிதைகள் 2026 download || சுதந்திர தின ஹைக்கூ கவிதைகள்

சுதந்திரம் இது வெறும் வார்த்தையாக இருந்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது சுதந்திரம் என்பது ஒரு உணர்வு அது அடிமைப்பட்டு கிடந்த நம் மக்களிடையே வெகுண்டு எழுந்ததினால் கிடைத்தது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சுதந்திரமாகும்.

ஒரு சாதாரண மனிதனின் தனிமனித சுதந்திரம் மற்ற நாடுகளில் உள்ளவர்களை விட இந்தியாவில் உள்ளவர்களுக்கே மிக அதிகம். இருப்பினும் மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் பல்வேறு நிலைகளில் சற்று பின் தங்கிய உள்ளோம் இதற்கான காரணங்களை நாம் ஆராய வேண்டும். அதை சரி செய்ய வேண்டும்.

நம் இந்திய நாட்டு உலக நாடுகளின் அரங்கில் தலை நிமிரச் செய்ய வேண்டும். இதுவே நம் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய ஒவ்வொரு தியாகிகளுக்கும் நாம் கொடுக்கும் சமர்ப்பணமாகும்.

Happy independence day wishes in Tamil

Independence day wishes quotes in Tamil with images

Happy independence day wishes in Tamil


300 ஆண்டுகள் மூச்சின்றி வாழ்ந்தோம் ஆம் சுதந்திரம் என்பதும் சுவாசிக்கும் காற்றை போலத்தான் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்….


உதிரங்கள் ஆறாய் ஓடி, உரிமைக்காக போராடி, சுவாசிக்கும் காற்றில் சுதந்திரத்தை சேர்த்தோம், பெற்ற சுதந்திரத்தை பிறர் கைப்பற்றாமல் காப்போம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற உவமைக்கு ஒரு தலை சிறந்த உதாரணமே நம் தாய் நாட்டின் விடுதலை தான்…


ஜாதி மத சமயங்கள் கடந்து சாதித்த இந்தியர்களின் உணர்வுகளை போற்றுவோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


 

Happy independence day wishes in Tamil


சுதந்திர பூமியில் நாம் சுவாசிப்பதற்கு தங்கள் சுவாசங்களை இழந்த தியாகிகள் அனைவருக்கும் நன்றி செலுத்துவோம் இந்த நன்னாளில்….


சுதந்திர எண்ணத்தோடு சுதந்திரமான நம் தேசத்தில் சுவாசிப்பதற்கு மகிழ்ச்சி கொள்வோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


இந்திய நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளை உள்ளம் நிறைய போற்றுவோம் புகழ்வோம் இந்த நன்னாளில்


 

Happy independence day wishes in Tamil


அறவழிப் போரை ஆயுதமாக்கி, ஆங்கிலேயர்களை அகிம்சை வழியில் அடித்து விரட்டி பெற்றெடுத்த சுதந்திரத்தை போற்றி பாடுவோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சுதந்திர போராட்ட வீரர்கள் கவிதைகள் || நான் தேடும் சுதந்திரம் கவிதைகள்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் எத்தனையோ நாடுகள் சில சில ஏகாதிபத்திய நாடுகளின் கீழ் அடிமைகளாக கிடக்கின்றனர். அந்த மக்களுக்கெல்லாம் கிடைக்காத சுதந்திரம் நம் இந்திய மக்களுக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் நாம் ஆலோசிக்க வேண்டும்.

*32 கோடி முகமுடையாள் உயிர்மெய் புற ஒன்றுடையாள்” என்ற பாரதியின் வாக்கிற்கு நாங்க நாம் வெவ்வேறு முகங்களாக இருக்கலாம் ஆனால் நம்முடைய அகங்களில் இந்தியா எனும் நாட்டின் தீபமே எரிந்து கொண்டிருக்கிறது என்பதை எல்லோருக்கும் எப்பொழுதும் காட்ட வேண்டும்.


இந்திய சுதந்திரத்திற்காக போராடி இறைவனடி சேர்ந்த வீரர்களை போற்றுவோம் புகழ்வோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


இந்தியன் என்று பெருமைப்படு இந்தியாவிற்காக இன்னுயிரையும் கொடு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சிந்திய ரத்தத்திற்கெல்லாம் உங்கள் சிந்தனை பதில் சொல்லட்டும்…. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


 


வருங்காலம் சிறகடித்து பறக்க தங்கள் வாழ்க்கை முழுக்க சிறைவாசத்தில் கழித்த வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம் இந்த நன்னாளில்


இந்திய சுதந்திர வரலாறு அந்நிய நாடுகள் அனைத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாய் எப்பொழுதும் இருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


இன்றைய நாள் நம் தேசியக் கொடியை நெஞ்சிலும் தேசத்திற்காக உயிரைக் கொடுத்த உத்தமர்களை நம் நினைவிலும் சுமப்போம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


 


300 ஆண்டுகள் மூச்சின்றி வாழ்ந்தோம் முடிவில் சுதந்திரம் எனும் மூச்சுக்காற்றை பெற்றோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் தியாகத்தால் உயிர் பெற்றுள்ளது நம் இந்திய தேசம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சுதந்திர தின பொன்மொழிகள் || எங்கே சுதந்திரம் கவிதை

ஜாதி மதம் சமயம் என்று பிளவு பட்டு கிடந்த இந்திய நாடு சுதந்திரம் எனும் ஒற்றை வார்த்தையில் ஒன்றுபட்டு நின்று வெற்றி கண்டது நம்முடைய இந்திய வரலாறாகும். எனவே தான் இன்றைய சிறப்பு என்பது ஒன்றுபட்ட இந்தியா என்ற தலைப்பு ஆகும்.

இந்தியர்களின் ஒற்றுமை உணர்ச்சியே நம்முடைய எதிர்கால இந்தியாவின் திட்டமாகவும் இருக்க வேண்டும். எப்பொழுதும் ஒற்றுமையுடன் கூட்டு முயற்சியோடு எல்லோருக்குமான வெற்றியை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.


சுதந்திர தேசத்தில் வாழும் நாம் சுதந்திரத்திற்காக வீழ்ந்தவர்களை போற்றும் நாள் இன்று இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


எதிர்கால இந்தியா சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று தங்களுடைய எதிர்காலங்களை தொலைத்த நல்லுள்ளங்களை போற்றுவோம் புகழ்வோம் இந்த நன்னாளில்


சுதந்திரம் என்பது ஒரு வார்த்தை அல்ல அது உணர்வாகும்….இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சுற்றித் திரியும் சுதந்திர மேகங்களை போல் நம் எண்ணங்களும் சுதந்திரத்தால் அழகுபடட்டும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


 


நமக்கென நல்லதொரு நாட்டை மீட்டுக் கொடுத்த நம் முன்னோர்களை போற்றுவோம் புகழ்வோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


நம் மண்ணிற்காக போராடிய மகாத்மாக்களை நினைவு கூறுவோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


தாய் மண்ணின் விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையினை தொலைத்த தியாகிகளை போற்றுவோம் புகழுவோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சுற்றும் காற்றின் சுதந்திரத்தை நமக்கு பரிசளித்த இந்திய விடுதலை வீரர்களை இன்னுயிராய் நேசிப்போம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சுதந்திர தின வாசகம் || கவிதைகள் சுதந்திர தின வாசகம்

இந்திய விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை தொலைத்த வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

 


சுதந்திர காற்றை சுவாசிப்போம்; சுதந்திரமாய் வாழ்வதற்கு பெருமை கொள்வோம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த பெருமக்களுக்கு நன்றி செலுத்துவோம்


ஒன்றுபட்ட இந்தியாவுக்கு கிடைத்த பரிசே… சுதந்திரம்


போராடி பெற்று விட்டோம் சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம் சுதந்திர தினத்தை இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


 


சாதிகள் செத்து போயிருந்தது நம் சுதந்திர போராட்டத்தில்….


இன்றைய பதிவில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் பதிவுகளை நீங்கள் விரும்பியவர்களுக்கு கவிதைகளாகவும் அல்லது புகைப்படங்கள் ஆகவும் பரிமாறி கொள்வதற்காக இந்த பதிவானது உருவாக்கப்பட்டுள்ளது இதில் உள்ள புகைப்படங்களையும் கவிதைகளையும் உங்களுடைய நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழுங்கள்.

TAMIL KAVITHAI

Leave a Comment