வெளிநாட்டு வாழ்க்கை, இந்த பதிவை படிக்க வந்திருக்கும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டில் இருக்கலாம் இல்லை என்றால் கணவனோ மகனோ வெளிநாட்டில் பணி புரியலாம் இந்த பதிவை தேடி வரும் பெரும்பாலானவர்கள் மனதில் பெரிய வலிகளை சுமந்து கொண்டு இருக்கலாம். சொல்லி தீர்க்க முடியாத வலி நினைத்தால் கண்ணில் கண்ணீர் வரும். ஏனென்றால் தன் வாழ்நாளில் இளமை பருவத்தை முழுவதுமாக இழந்த ஒரு குடும்பத் தலைவரின் குமுறல் எப்படிப்பட்டது என்று யாருக்கு தெரியும் அனுபவித்தவர்களுக்கு அதன் வலி புரியும்.
இளமையை தொலைத்த பிறகு தான் புரிந்தது, சம்பாதிக்க வேண்டிய வயது மட்டும் அல்ல வாழ வேண்டிய வயதும் அது தான் என்று
வெளிநாட்டு வாழ்க்கை whatsapp status
இந்த கவிதைகள் வெளிநாட்டில் வாழும் ஆண்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.எனவே இதனை நீங்கள் உங்களுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் தாராளமாக வைக்கலாம்.
எங்க அப்பா செல்போனில் தான் இருக்கிறார் என்று நினைத்து கொண்டிருக்கும் சிறு பிள்ளையின் உளறல் எத்தனை வலியை தரும் அந்த ஆணுக்கு
இதோ பார் கப்பல்,அங்க பாரு ரெண்டு அடுக்கு பஸ் என்று வீடியோ காலில் வேடிக்கை காட்ட வேண்டி இருக்கிறது…அவர்களின் பிஞ்சு முகத்தை சில நிமிடம் காண

இந்த வருடம் கடனை அடைத்துவிட்டு ஊருக்கு சென்று விடலாம் என்று இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு வருடமும்
ஏதோ கொஞ்சம் முன்னேறி விடலாம் என்று ஏறினான் விமானம்,தெரியவில்லை அவனுக்கு இறங்குவது அவ்வளவு எளிதல்ல என்று
ஒரே வீட்டில் வசித்தும் பிரிந்து போகும் கணவன் மனைவிகளுக்கு இடையே செல்போனில் மட்டும் உயிர் வாழும் நம் உறவை இவ்வளவு நீள வைப்பது நம் அன்பு மட்டுமே
காசு கண்ணை மறைக்கும்,வெளிநாடு இளமையை பறிக்கும்,வயதாகி வந்தால் எல்லாம் கசக்கும்

வெளிநாட்டு கணவன் கவிதை
கணவன் வெளிநாட்டில் இருந்தால் அந்தப் பெண்ணிற்கு கணவன் இருந்தும் இல்லாத நிலை தான்…. எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவருடைய உதவியை எதிர்பார்க்க வேண்டும்.
கணவனை இழந்தவளுக்கும் வெளிநாட்டில் வேலை செய்யும் ஆணை மணந்தவளுக்கும் ஒரே விதிகள் தான் இங்கே…
(எங்கும் தனியாக சென்று வர இயலாது,விஷேச இடங்களுக்கு மிக அழகாக நேர்த்தியாக உடை அணிந்தால் குற்றம் என பல்வேறு விதமாக பேசும் இந்த சமுதாயத்தினர்)

எல்லா பேரண்ட்ஸ் மீட்டிங்க்கும் அம்மா தான் வருது,நீ வா பா! என்று அழைக்கும் பிள்ளைகளின் அழுகுரல் இதயத்தில் என்னவோ செய்யும்
நல்லது கெட்டது என்று எந்த காரியங்களுக்கும் சென்றதில்லை,எல்லாம் செவி வழியே கடந்து செல்கிறது- வெளிநாட்டு வாழ்க்கை
விமான டிக்கெட்டில் விலையை பார்த்து பயந்து பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ஊருக்கு வராமல் சென்ற ஆண்டுகள் எத்தனை!ஊரில் கேட்டால் அவனுக்கென்ன வெளிநாட்டில் நல்ல சம்பளம் என்பார்கள்?
யாருக்காக நாடு கடந்தாயோ?அவர்களே உன்னை யார் நீ என்பார்கள்? எனக்காக என்ன செய்தாய் என்பார்கள்
பிள்ளைக்களுக்கு வசதியான வாழ்க்கையை கொடுக்க நினைத்து வசதியாக நடிக்க கற்றுக்கொண்ட வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே!

Foreign life வெளிநாட்டு வாழ்க்கை கவிதை
அடுக்கு மாடி கட்டிடங்கள் எதுவும் அமைதியை தரவில்லை என் இதயத்திற்கு
இளமையை இழந்து வெறுமையை சம்பாதிக்க விமானம் ஏறினேன் என்று இறங்கும் போது தான் புரிந்தது.
கோவில் திருவிழா, குடும்ப விசேஷங்கள் எல்லாம் வெகு விமர்சையாக இருந்தது என்று மெச்சிக் கொண்டேன் வீடியோ காலில் வேடிக்கை பார்த்தபடி….
சம்பாதித்த பணம் சந்தோஷத்தை தரவில்லை -வெளிநாட்டு வாழ்க்கை
சம்பாதிக்க வேண்டிய வயது என்று சந்தோஷத்தை எல்லாம் இழக்கிறார்கள்
கடனை அடைத்து விட்டால் போதும் என்று விமானம் ஏறினேன்,இறங்கவே இல்லை நானும்!கடனும்
வீடு கட்டணும், தங்கச்சி கல்யாணம், பின்பு எனக்கு கல்யாணம்! என் பிள்ளைகளின் படிப்பு என்று நீண்டு கொண்டே போகிறது காரணங்கள் மட்டும்….
காசு சம்பாதிக்க தன் இளமையையும் கனவையும் தொலைத்து ஓடும் ஆண்களின் வாழ்க்கை நரகம் தான்….
அவன் கிட்ட என்ன இல்ல,வெளிநாட்டு சம்பளம் ஜாலியா இருக்கான் என்று எல்லோரும் சொல்லுவார்கள்….ஆனால் எல்லோரும் அனுபவித்த சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட அவனால் அனுபவிக்க முடியவில்லை என்ற வலி ….அவனோடே இறந்து போகும்.
பெற்ற பிள்ளையின் பிறந்த நாள் அன்று வீடியோ காலில் கேக் வெட்டுவதை பார்ப்பதை விட கொடுமை ஒன்றும் இல்லை.

அடுத்த வருடம் ஊருக்கு செல்லலாம் தீபாவளிக்கு ஊருக்கு செல்லலாம் பொங்கலுக்கு ஊருக்கு செல்லலாம் என்று எத்தனையோ கனவுகளோடு இரு வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் 30 40 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊரை எட்டிப் பார்க்கும் ஒரு ஆணுக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சியும் ஒரு தாய் தன் குழந்தையை ஈன்றெடுத்து அதன் முகம் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.





