கல்வி பற்றிய கவிதைகள் – Education Quotes in Tamil

By TAMIL KAVITHAI

Updated on:

கல்வி என்பது புத்தகங்களில் இருக்கும் எழுத்துக்களைப் படித்து மதிப்பெண்கள் பெறுவதற்கான ஒரு வழி மட்டுமல்ல. அது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், உலகத்தைப் பற்றி சிந்திக்கவும், சரியான முடிவுகளை எடுக்கவும் உதவும் மிகப்பெரிய சக்தியாகும்.

Education-quotes-in-Tamil

கையில் இருக்கும் புத்தகம் சிறியதாக இருக்கலாம்;அது திறந்து வைக்கும் எதிர்காலம் பெரியது

Short kalvi quotes in tamil:

பணம், பொருள், பதவி போன்றவை வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் குறையலாம் அல்லது மறையலாம். ஆனால் கல்வியால் கிடைக்கும் அறிவும் அனுபவமும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அவருடன் பயணிக்கும்

Education-quotes-in-Tamil

தலை குனிந்து நீ படித்தால், தலை நிமிர்ந்து நடக்க வைக்கும் -கல்வி

“கல்வியால் ஒருவன் உயர்ந்தான்”என்பது சாதாரணமாகத் தோன்றலாம்.ஆனால்…”கல்வியால் யாரும் தாழ்ந்துவிடவில்லை”என்பதே இந்த உலகின் அசாதாரணமான உண்மை.

Kalvi quotes in tamil for students:

ஒரு குழந்தை முதன்முதலில் பள்ளிக்குச் செல்லும் போது அதன் கையில் இருப்பது ஒரு புத்தகம் மட்டுமே. ஆனால் அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் திறக்கத் தொடங்கியதும், அதன் முன்னால் ஒரு புதிய உலகமே திறக்கிறது.

Education-quotes-in-Tamil

இருட்டில் வெளிச்சத்தைத் தேடாதே…நீயே வெளிச்சமாக மாறிவிடு.உனக்கு ஒளியூட்டும் வழிகாட்டி தான் கல்வி

நீரின்றி அமையாது உலகு; நற்கல்வி இன்றி அமையாது நல்வாழ்க்கை

ஒரு மனிதனுக்கு கை,கால்களை போன்றதல்ல கல்வி; இதயம் போன்றது! இதயம் இல்லையேல் வாழ்க்கையே இல்லை

Motivational kalvi quotes in tamil:

கல்வி நமக்கு பாடங்களை மட்டும் கற்றுத் தருவதில்லை. எது சரி, எது தவறு, எதை நம்ப வேண்டும், எதை கேள்வி கேட்க வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறது. பிறரின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நாமாக சிந்திக்கும் திறனை வளர்க்கிறது.

Education-quotes-in-Tamil

கல்வி எப்போதும் மனிதனை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருக்கும்.ஏனென்றால்,மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வதற்காகவேஉருவாக்கப்பட்ட ஒளி அது

இரு கண்களுக்கு தெரியாதது கூட அறிவு கண்களுக்கு தெரியும்

கல்வி quotes in tamil in one line:

எழுத்துக்களை அறிந்துகொள்வதில் தொடங்கும் கல்விப் பயணம், வாழ்க்கையை அறிந்துகொள்ளும் பயணமாக மாறுகிறது.

Education-quotes-in-Tamil

எல்லோரும் கைவிட்டாலும் கை விடாதது உன் கல்வி மட்டுமே….

உனக்காய் உன்னோடு எப்போதும் நிற்பது நீ கற்ற கல்வி மட்டுமே!

எண்ணும் எழுத்தும் இரு கண்;இந்த இரு கண்ணும் உனக்கு திறந்திருந்தால் தானாகவே திறக்கும் மூன்றாவது கண்!நெற்றிக்கண்(வெற்றிக்கண்)

Kalvi ponmoligal in tamil:

கல்வி பெற்ற ஒருவர் தனது வாழ்க்கைக்கான வாய்ப்புகளைத் தேடுவதில் அதிக நம்பிக்கையுடன் செயல்பட முடியும். நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் கல்வி ஒரு அடித்தளமாக அமைகிறது. அதைவிட முக்கியமாக, தோல்வி வந்தாலும் மீண்டும் எழுந்து நிற்கும் மனப்பக்குவத்தையும் கல்வி வளர்க்கிறது.

Education-quotes-in-Tamil

எல்லாவற்றையும் நீ படித்து தெரிந்து கொண்டால் உன்னை பற்றி இந்த உலகம் படித்து தெரிந்து கொள்ளும்.

எல்லா கண்டுபிடிப்புகளுக்கு பின்னாலும் சத்தமில்லாமல் சாதிப்பது என்னவோ கல்வி தான்….

வேலை செய்ய மட்டும் பிடிக்காதே!வாழ்வதற்காக படி!வாழ்வோடு கல்வியை ஐக்கியமாக்கு !வெற்றி உனக்குள் ஐக்கியமாகும்.

Educational quotes in tamil for students:

ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திலும் கல்விக்கு முக்கியமான இடம் உண்டு. ஒரு குழந்தை கல்வியில் முன்னேறும்போது, அதன் எதிர்காலம் மட்டுமல்ல; அந்தக் குடும்பத்தின் எதிர்காலமும் மாறக்கூடும். கல்வி பெற்ற தலைமுறை, அடுத்த தலைமுறைக்கு நல்ல சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

Education-quotes-in-Tamil

உன்னை உயர்த்திக் கொள்ள உலகம் ஏற்றுக்கொள்ளும் சரியான வழி -கல்வி

உன்னை மட்டுமல்ல உன் தலை முறையையே உயர்த்தக் கூடியது கல்வி

பணக்காரனாக மாற கல்வி தேவை இல்லை ;ஆனால் ஒவ்வொரு பணக்காரனுக்கும் படித்தவன் நிச்சயம் தேவை

Student education quotes in tamil:

பெண்களின் வாழ்க்கையிலும் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கல்வி ஒரு பெண்ணுக்கு அறிவை மட்டுமல்ல, தனது முடிவுகளைத் தானே எடுக்கும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. கல்வி கற்ற ஒரு பெண் தனது வாழ்க்கையையும், குடும்பத்தையும், சமூகத்தையும் முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

Education-quotes-in-Tamil

சொந்த காலில் நிற்க சொந்த பந்தங்கள் தேவையில்லை கல்வி என்னும் தீப்பந்தம் போதுமானது.

கல்வி மட்டும் இல்லை என்றால் காட்டுவாசியாகவே இருந்திருப்போம்

கடைசி வரை உன்னோடு நிற்பது நீ கற்ற கல்வியே

Students study motivation quotes in tamil:

கல்வியின் உண்மையான நோக்கம் அனைவரையும் ஒரே மாதிரியாக மாற்றுவது அல்ல. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையை கண்டறிந்து, அதை வளர்க்க உதவுவதுதான்.

Education-quotes-in-Tamil

ஏட்டுக் கல்வி மட்டும் போதாது வாழ்க்கையில் ஏற்றம் காண

உன்னை மட்டும் உயர்த்துவது கல்வியின் நோக்கமாக நிச்சயம் இருக்காது.உன்னோடு சேர்த்து உலகத்தையும் உயர்த்தும்.

வெள்த்தால் அழியாதது;வெந்தனலால் வேகாது…நெஞ்சத்தில் என்றும் நிலைத்து நிற்பது கல்வியே…

கல்வியின் கையை பிடித்தவர்கள் கைத்தடி பிடிக்கும் காலத்திலும் கவலை இல்லாமல் வாழலாம்.

Study quotes in tamil:

ஒருவருக்கு அறிவியல் பிடிக்கலாம்; இன்னொருவருக்கு கலை பிடிக்கலாம்; மற்றொருவருக்கு எழுத்து, விளையாட்டு அல்லது தொழில்நுட்பம் பிடிக்கலாம். கல்வி அவரவர் திறமையை அடையாளம் கண்டு, அதை சரியான பாதையில் கொண்டு செல்லும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

1000359882 100kb

அறியாமை என்னும் தீண்டாமை ஒழிய கல்லாமை எனும் நிலை இல்லாமல் போக வேண்டும்

தோண்ட தோண்ட சுரக்கும் நீரை போல படிக்க படிக்க அறிவு எனும் உயிர் நீர் சுரந்து கொண்டே இருக்கும்.

சுயமாக சிந்திக்க கல்வி என்னும் சூரியன் நிச்சயம் தேவை.

கல்வி எனும் நீருற்றை யாராலும் தடுக்க முடியாது.

கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் அல்ல அறியாமையால் வாடும் உயிர்களுக்கு அறிவு எனும் ஒளியை தருவதும் ஆகும்.

Success education motivational quotes for students in tamil:

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள், புதிய வேலைகள், புதிய சவால்கள் என வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் கல்வி என்பது பள்ளி அல்லது கல்லூரியுடன் முடிந்துவிடும் ஒன்று அல்ல. வாழ்க்கை முழுவதும் தொடரும் கற்றலே உண்மையான கல்வி.

Education-quotes-in-Tamil

படிக்காமல் ஜெயித்தவர்கள் ஆயிரம் பேர் என்றால் படித்து ஜெயித்தவர்கள் லட்சம் பேர்.

கல்வியின் பரிணாமமே வாழ்க்கையின் வளர்ச்சி

மனிதனை முழுமையாக்குவதும் முன்னேற்றுவதும் கல்வி தான்

கல்வியால் வாழ்ந்தவர்கள் உண்டு: வீழ்ந்தவர்கள் இல்லை

Education kavithai in tamil:

அறிவு ஒருவரை உயர்த்துகிறது. ஆனால் அந்த அறிவை நல்லதற்காகப் பயன்படுத்தும் மனப்பக்குவம்தான் அவரை சிறந்த மனிதராக மாற்றுகிறது. பிறரை மதிப்பது, உதவி செய்வது, பொறுப்புடன் நடப்பது, இயற்கையைப் பாதுகாப்பது, சமூகத்தின் மீது அக்கறை கொள்வது போன்ற நல்ல பண்புகளையும் கல்வி வளர்க்க வேண்டும்.

Education-quotes-in-Tamil

ஆயிரம் கைகள் கை விட்டாலும் கல்வி எனும் நம்பிக்கை உனை கைவிடாது.

யாராலும் அழிக்க முடியாத ஆகச் சிறந்த ஆயுதம் கல்வி

உண்மையான கல்வியின் வெளிப்பாடே நல்ல மாற்றம்.

அறிவில் செய்யப்படும் முதலீடு சிறந்த வட்டியை தரும்

உலகில் எதையும் மாற்றும் சக்தி கல்வி எனும் ஒரு ஆயுதத்துக்கு மட்டுமே உண்டு

Motivational kalvi quotes in tamil:

ஒரு நாட்டின் வளர்ச்சியை அதன் கட்டிடங்களால் மட்டும் அளக்க முடியாது. அந்த நாட்டின் குழந்தைகள் எவ்வளவு நன்றாகக் கல்வி கற்கிறார்கள், இளைஞர்கள் எவ்வளவு திறமையுடன் சிந்திக்கிறார்கள், மக்கள் எவ்வளவு பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்பதிலும் அதன் எதிர்காலம் இருக்கிறது.அதனால் கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கைக்கான அலங்காரம் அல்ல; அது வாழ்க்கையை கட்டியெழுப்பும் அடித்தளம்.

Education-quotes-in-Tamil

கல்வி இல்லை என்றால் இந்த உலகம் இன்னும் கல்லும் மண்ணுமாகவே இருந்திருக்கும்

அழிக்க முடியாத ஆக்கும் சக்தி கல்வி

கற்றவரையும் அவரை சுற்றி உள்ளவரையும் உயர்த்தும் கருவியே கல்வி

நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே கல்வியின் தலையான கடமையாகும்

Self confidence education motivational quotes for students in tamil:

ஒரு நல்ல கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றலாம்.ஒரு கல்வியறிவு பெற்ற தலைமுறை ஒரு சமூகத்தின் பாதையை மாற்றலாம்.அதனால் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைப்பது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல — அது அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் உரிமை

1000359517 100kb

கல்வி தரும் மதிப்பை வேறு எந்த பதவியாலும் தர முடியாது

கற்கும் போது கசக்கும் கற்றபின் இனிக்கும் -கல்வி

ஒழுக்கமே கல்வி கற்க முதல் தகுதி

அறிவை தெளிவாக்குவதும் கல்வியே:மனதை விரிவாக்குவதும் கல்வியே

செல்வந்தனை விடவும் கல்வியில் கரை சேர்ந்தவருக்கே மரியாதை அதிகம்

கல்வியின் கையை பிடித்தவனுக்கு வெற்றியின் பாதை கண்களில் தெரியும்

Exam study motivation quotes in tamil:

கையில் காசு இல்லாத நாளிலும், கற்ற அறிவு ஒருவனை ஏழையாக்காது. வாழ்க்கை எத்தனை கதவுகளை மூடினாலும், கல்வி கற்ற மனம் புதிய கதவைத் தேடும். இருளான பாதையில் வழிகாட்டும் விளக்கைப் போலவும், தடுமாறும் நேரத்தில் துணை நிற்கும் தோழனைப் போலவும் கல்வி நம்முடன் நிற்கிறது. அதனால்தான் ஒரு குழந்தையின் கையில் நாம் கொடுக்கும் புத்தகம், வெறும் காகிதங்களின் தொகுப்பு அல்ல; அது அந்தக் குழந்தை நாளை எங்கு நிற்க வேண்டும் என்பதற்கான முதல் படி. இன்று ஒரு சிறிய எழுத்தைக் கற்றுக்கொள்ளும் குழந்தை, நாளை ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாகவும், ஒரு சமூகத்தின் குரலாகவும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான சக்தியாகவும் மாறக்கூடும்.

பறவை பறப்பதற்கு சிறகுகள் தேவைப்படுவது போல மனிதன் வாழ்வதற்கு கல்வி தேவைப்படுகிறது.

Education-quotes-in-Tamil

வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் படகே கல்வியாகும்.

சூரியன் தரும் பகல் வெளிச்சத்தை விட கல்வி தரும் சுய வெளிச்சமே…வாழ்க்கைக்கு உதவும்

நம்பிய எல்லாம் கைவிட்டாலும் நல்ல கல்வி கைவிடாது.

கல்வியால் ஒருவர் பெறும் புகழ் மற்ற அனைத்தை விடவும் உயர்ந்தது.

கல்வி தரும் வளர்ச்சி ஒருவருக்காக மட்டும் நிச்சயம் இருக்காது.

Importance of education quotes in tamil:

சில குழந்தைகளின் கனவுகள் வசதியான அறைகளில் பிறக்கின்றன; சில குழந்தைகளின் கனவுகள் வாழ்க்கையின் கஷ்டங்களுக்கு நடுவில் பிறக்கின்றன. ஆனால் கனவு எங்கு பிறந்தது என்பது முக்கியமல்ல; அதை நனவாக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம். ஒரு குழந்தையின் வறுமை அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடாது. அதன் பிறந்த சூழ்நிலை அதன் திறமையின் எல்லையாக இருக்கக் கூடாது. சரியான கல்வியும், ஊக்கமும் கிடைத்தால், வாய்ப்புக்காக காத்திருக்கும் அந்தச் சிறிய மனமே நாளை வாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு உயர முடியும். ஒரு குழந்தைக்கு கல்வி கொடுப்பது என்றால், அதன் கைகளில் ஒரு தொழிலை மட்டும் கொடுப்பதல்ல; தன் வாழ்க்கையைத் தானே எழுதிக்கொள்ளும் பேனாவை கொடுப்பதாகும்.

வாழ்க்கையின் ஆழத்தை அளக்க கல்வி என்னும் அளவுகோல் நிச்சயம் தேவை.

உலகை மாற்றும் ஒற்றை சொல் கல்வி

உற்றார் உறவினர் துணைக்கு இல்லாத நேரத்திலும் நீ கற்ற கல்வி துணை நிற்கும்

கல்வி என்னும் பார்வையில் இந்த உலகத்தை நீ பார்க்காவிட்டால், பார்வை இருந்தும் இந்த உலகம் உனக்கு இருளாக தெரியும்

முடிந்த வரை படி,கல்வியே வெற்றியின் வாசற்படி

இனிப்பான பழங்களை தரும் கல்வியின் வேர் கசப்பானது தான்

கல்வி எல்லாவற்றையும் வெல்லும் ஆற்றல் கொண்டது

Students study motivation quotes in tamil:

நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது பணமும் சொத்தும் மட்டுமல்ல; சிந்திக்கத் தெரிந்த மனங்களையும், கேள்வி கேட்கத் துணியும் அறிவையும், மனிதநேயத்துடன் நடக்கத் தெரிந்த இதயங்களையும் உருவாக்க வேண்டும். பள்ளியின் வாசலில் தொடங்கும் ஒவ்வொரு கல்விப் பயணத்திற்குப் பின்னாலும் ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்பு இருக்கிறது; ஒரு தாயின் கனவு இருக்கிறது; ஒரு தந்தையின் உழைப்பு இருக்கிறது; ஒரு குழந்தையின் சொல்லப்படாத ஆசை இருக்கிறது. அந்தக் கனவுகள் ஒருபோதும் பாதியில் நின்றுவிடக்கூடாது. ஒரு தலைமுறையின் கையில் கல்வி சென்றால், அதன் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையில் மாற்றம் மலரும். கல்வியைப் பாதுகாப்போம்; அறிவை வளர்ப்போம்; ஒவ்வொரு குழந்தையின் கனவுக்கும் சிறகுகள் கொடுப்போம்.

சமூக மாற்றத்தின் முதல்படி கல்வியில் இருந்தே தொடங்குகிறது.

கல்வி என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட முன்னேற்றம் மட்டும் அல்ல;ஒரு சமூகத்தின் முன்னேற்றமும் கூட

கல்வியால் என்ன மாற்ற முடியும் என்று நினைக்காதே!உன் அப்பாவிற்கும் உனக்கும் உள்ள வித்தியாசமே கல்வியால் நிகழ்ந்தது தான்

TAMIL KAVITHAI

Leave a Comment