“உலகின் தலை சிறந்த மனிதன் என் அப்பா”
மயிலிறகால் வருடுவது தாயின் அன்பு…உலியாய் செதுக்குவது தந்தையின் அன்பு
அப்பாவின் நிழல் தான் இந்த உலகில் மிகவும் பாதுகாப்பான இடம்
என்னை கரை சேர்க்க வாழ்நாள் முழுக்க கடலுக்குள்ளயே…தத்தளிச்ச என் அப்பா தாங்க கடவுள்
என் பிள்ளை என்று பெருமை பட வேண்டும் என்ற ஆசையை தவிர அப்பாக்களின் மிகப்பெரிய ஆசை என்று எதுவும் இல்லை.
எனக்கு எல்லாவற்றையும் தந்து தன்னை இழந்தவர் என் அப்பா
அப்பாவின் நிழல் கூட ஓய்வெடுத்தது இல்லை இன்று வரை
எனக்கு 1000 ரூபாய்க்கு சட்டை எடுத்து கொடுத்த என் அப்பா! அணிந்தது எல்லாம் 100 ரூபாய் சட்டை தான்
என்னை உயர்த்த தன்னை உருக்கும் என் அப்பா என்றும் உயர்ந்தவர் தானே….
அப்பாவின் விரல் பிடித்து நடக்கும் போது விழுந்து விடுவேன் என்ற பயமே இல்லை…
அப்பாவின் கண்டிப்பு என்பது வாழ்க்கைக்கான ஒழுக்கம் என்று வருடங்கள் ஓடிய பிறகே தெரிந்தது
வாழ்க்கை எனும் கடலில் பயணிக்க கட்டுமரம் தந்ததோடு மட்டுமல்லாமல் தவறி விழுந்தால் நீச்சல் அடிக்கவும் கற்றுக் கொடுத்தவர் என் அப்பா!
எனக்காக என்று யோசித்த என் அப்பா!தனக்காக என்று எதையுமே யோசிக்காமல் சென்று விட்டார்.
அப்பா என்ற வார்த்தையே ஒரு பலம் தான்
தோல்வி தான் உன்னை செதுக்கும் என்று கூறி என்னை செதுக்கியவர் என் அப்பா!
நான் பார்த்துக்கிறேன் என்று அப்பா கூறினால் மலையே என்றாலும் மனதில் பயம் வந்ததே இல்லை.
யாருக்கும் பயப்பட கூடாது என்று சொல்லி கொடுக்கும் தைரியம் அப்பாவிற்கு மட்டுமே உண்டு…
எங்கிட்ட இருக்குற எல்லாம் என் பிள்ளைக்காக தான் என்று யோசிப்பது அப்பாவின் குணம்..
சொத்தை வித்தாவது என் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அப்பாக்களுக்கு மட்டுமே உண்டு
வேண்டினால் தான் தருகிறார் கடவுள் நான் வேண்டாம் என்றால் கூட தராமல் இருப்பதில்லை என் தந்தை…எனக்கு வேண்டியதை
அப்பாவிடம் மட்டுமே அன்பின் மாற்று வடிவங்களை நம்மால் பார்க்க முடியும்
கண்டிப்பும் அன்பு என்று உணர்த்துவது தான் ஒவ்வொரு தந்தையின் வாழ்க்கையும்
சின்ன பிள்ளையா இருக்கும்போது யார் யார் யாரையோ ரோல் மாடல் னு சொல்ல தோணிச்சு ஆனா இப்போ…என் அப்பா தான் என் ரோல் மாடல் னு தோணுது…
என் அனுபவம் கூட என் பிள்ளைக்கு உதவனும் னு சொல்லி தந்துட்டு போற அப்பாக்கள் தாங்க கடவுள்.
என்னை கரை சேர்க்க வாழ்நாள் முழுக்க கடலுக்குள்ளயே…தத்தளிச்ச என் அப்பா தாங்க கடவுள்
சொல்லி கொடுக்க அப்பா இருந்த வரை எந்த சோதனையும் பெரிதாக தெரியவில்லை
என்னை ஏமாற்றாத ஒரே நபர் என் அப்பா
நான் இருக்கனும் னு நெனச்ச என் அப்பா! அவர் நல்லா இருக்கனும் னு யோசிக்காமல் இருந்து விட்டார்…என் நலனில் அவர் பெயர் இருக்கும் என்ற நம்பிக்கையில்
தோல்விகள் என்னை துரத்திய போதேல்லாம் என் அடைக்கலம் என் அப்பா!
அப்பாவின் பார்வைக்கு மட்டும் அடிபணிந்து போகிறது என் கண்கள்
கொல்லி வைத்தால் மட்டும் போதும் என்று அனைத்தையும் கொடுத்தவர் என் அப்பா
அப்பாக்களின் தியாகங்கள் தான் அம்மாவசை இரவு போல் வெளிச்சத்திற்கே வராமல் போகிறது.
அப்பாவின் கோபத்திற்கு பின்னால் இருந்த வலி நான் அப்பாவான பிறகே புரிந்தது.
அவனுக்கு எந்த கஷ்டமும் வந்து விட கூடாது என்பதே அப்பாக்களின் அதிகபட்ச வேண்டுதல்.
நான் கஷ்டப்பட்டுட்டன்…என் மகன் நல்லா இருக்குறத பார்த்துட்டா போதும் என்பதே அப்பாக்களின் அதிகபட்ச ஆசை
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் கொடுக்க முடியாத அப்பாக்களின் வேதனை பிரசவ வலியை விட கொடுமையானது.
எந்த கஷ்டத்தையும் தாங்கி கொண்டார் என் அப்பா! தன் பிள்ளை கஷ்டப்பட்டு விடுவனோ என்ற எண்ணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல்…
அப்பாவின் கைகள் இறைவனின் இதயத்தை விட உயர்ந்தது.
அப்பாவின் கால்கள் மலைகளை விட வலியது.
உனக்காக ஓடுகிறேன் என்று ஒரு நாளும் சொல்லிக் காட்டாதவர் என் அப்பா!
அப்பா இருக்கிறார் என்ற தைரியமே பாதி வாழ்க்கையை பத்திரப்படுத்தியது.
ஹோட்டலில் பிள்ளைகள் சாப்பிட்டால் போதும் என்று ஒரு காபி மட்டும் போதும் என்பார் அப்பா
உலகில் நல்ல வாழ்க்கைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அப்பாக்களின் வாழ்க்கை
அம்மா அன்பை அன்பாக மட்டுமே காட்டுவாள் அப்பாவால் மட்டுமே கண்டிப்பில் கூட அன்பை காட்ட முடியும்
படிக்காத தந்தை கூட ஆயிரம் பாடம் சொல்லுவார் …தன் வாழ்க்கையில் இருந்து…
எவ்வளவோ முயற்சி செய்தாலும் என் தந்தையை போல் இருக்க முடிவதில்லை சில நேரங்களில்
இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்று எத்தனை விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் அவரிடமிருந்து…
அப்பாவின் கோபங்கள் எல்லாம் இப்போது அன்பாக தெரிகிறது
எனக்கு பிடித்ததை கொடுப்பதில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி …
எவ்ளோ கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல அவன முன்னுக்கு கொண்டு வந்திடனும் னு யோசிச்சு என் அப்பா எனக்கு இறைவனை விட மேலாக தெரிகிறார்.
கற்றுக் கொடுப்பதில் ஆசிரியர்களை விட அப்பாக்களுக்கே முதலிடம் வாழ்க்கையில்
பெண் பிள்ளைகளை ராணியாக நினைக்க வைப்பதில் அப்பாக்களுக்கே முதலிடம்
ஆலமரமும் அப்பாவும் ஒன்று …நிழல் தருவதிலும் வலிமையை தருவதிலும்
கசப்பாக இருக்கும் மாத்திரையின் பயன்கள் இனிப்பது போலத்தான் அப்பாவின் அறிவுரைகளும்
உலகின் வலிமையான கரங்கள் அப்பாவின் கரங்கள்
அப்பாக்களின் ஆசிர்வாதம் ஆண்டவனுடைய அனுகிரகத்தை விட மேலானது.
தன் பிள்ளைகளுக்காக எதையும் தாங்கி கொள்ளும் அப்பாக்களின் இதயமே வலிமையானது.
அவமானங்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு அனுபவமாக கிடைக்கட்டும் என்று நினைப்பது அப்பாக்கள் மட்டுமே.
தந்தையின் அன்பை உணரும் பொழுது அவர் இல்லாமல் போவதே வாழ்கையின் முரண்
அப்பாவின் பாதுகாப்பை அவர் இருக்கும் பொழுதே…உணர்ந்து கொள்பவர்கள் சிலரே…
அப்பாவின் கனவுகள் அனைத்தும் பிள்ளைகளை பற்றியதாகவே இருக்கும் இறுதி வரை
எவ்வளவு தான் தேடினாலும் சுயநலம் என்பது கிடைக்காமல் போவது அப்பாவின் அன்பில் மட்டுமே…
பிள்ளைகளை கைக்குள் வைத்து விட கூடாது என்பதை உணர்ந்தவர்கள் தந்தைகள் மட்டுமே…
எனக்கு என்ன செய்வான் என்று எதிர்ப்பார்க்காத உறவு அப்பா
அப்பா இருக்கிறார் என்ற நம்பிக்கையில் கடந்து வந்த கஷ்டங்கள் எத்தனை
எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத அன்பு அப்பாவினுடையது
என் வாழ்வின் மிகச்சிறந்த ஹீரோ என் அப்பா!
என் அப்பா பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நான் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக
என்னை செதுக்கிய போது என்னை விட அதிகமாக காயப்பட்டது என் அப்பா தான்
புள்ள கிட்ட கெட்டவன்னு பேர் எடுத்தாலும் பரவாயில்ல…என் புள்ள நல்லா வரனும் னு நினைக்கிறவன் தாங்க அப்பா…
கண் முன்னே விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் போவது தந்தையின் குணம்…விழுந்தால் தானாக எழ வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைக்கு வர வேண்டும் என்பதற்காக…
தாயின் கண்ணீரில் அன்பு மட்டும் தான் தெரியும் தந்தையின் கண்ணீரில் அன்போடு வலியும் தெரியும்
தந்தையின் மரணம் தான் வேதனைகளின் உச்சம்…
அப்பா மீது அன்பு பெண்ணிற்கு இன்னொரு வீட்டிற்கு மருமகளாகும் போதும் ஆணிற்கு தன் குடும்பத்தை தோளில் சுமக்கும் போது தான் தெரியும்
தன் பிள்ளை தொட்டியில் மீனாய் வாழ எந்த தந்தையும் விரும்புவதில்லை
கஷ்டம் வரும்போது தான் என் தந்தை எவ்வளவு புத்திசாலி என்பதே எனக்கு தெரிய வந்தது.
எவ்வளவு முயன்ற போதும் தந்தையின் மீதான என் அன்பு குறையவே இல்லை…நானொரு தந்தையான பிறகு.
கோடி உறவு வந்த பிறகும் மனம் நாடும் உறவு அப்பா
அப்பாவிற்கு இணையான உறவு என்று எதுவுமில்லை.
தந்தை இல்லாத பிள்ளைக்கு சிறந்த ஆசிரியர் இல்லாத குறையும் சேர்ந்து கொள்ளும்
வாழ்க்கை பாடத்தை கொஞ்சம் செய்முறை களந்து சொல்லித் தருவதில் தந்தையை மிஞ்சிய ஆள் இல்லை