விளையாட்டாக ஆரம்பித்த ஒரு வீரனின் பயணம் ஒரு நாட்டின் விடுதலைக்காக முடிந்தது என்பதே சேகுவாரா அவர்களின் வாழ்க்கை பயணமாகும். கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த ஒரு இளைஞனை இன்றளவும் மக்கள் கொண்டாடி, அவருடைய வழிகளை பின்பற்றுகின்றார்கள் என்றால் அந்த இளைஞனால் ஏற்பட்ட தாக்கமானது எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்…
ஆம் மருத்துவ கல்வியை முடித்துவிட்டு ஊரை சுற்றி பார்ப்பதற்காக தன்னுடைய மோட்டார் சைக்கிளில் தொடங்கிய பயணம் தான் உலகம் முழுக்க நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க தொடங்கிய பயணமாகும் முடிந்தது.
1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் நாள் அர்ஜென்டினாவில் பிறக்கிறார் புரட்சியாளர் சேகுவாரா. மருத்துவம் படித்துவிட்டு கோடை காலங்களில் நாடுகளைச் சுற்றி பார்க்க தன்னுடைய மோட்டார் சைக்கிளில் பயணத்தை மேற்கொள்கிறார் அந்தப் பயணமே அவருடைய வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்து அவரை ஒரு புரட்சியாளராக மாற்றியது.
புரட்சியாளர் திரு சேகுவாரா அவர்களின் பொன்மொழிகளை பதிவிடுவதில் பெருமை கொள்கிறது தமிழ் கவிதை வலைப்பதிவு.
புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, அதை நாம் தான் விழ வைக்க வேண்டும் – சேகுவாரா
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்பு கேட்கிறதோ? அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் – சேகுவாரா
நாங்கள் செய்வதெல்லாம் கம்யூனிஸ்ட் போல உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். – சேகுவாரா
அநீதியை கண்டு நீ ஆத்திரப்பட்டால் நீயும் என் தோழனே – சேகுவாரா
உலகம் உங்களை மாற்ற அனுமதியுங்கள், உங்களால் உலகை மாற்ற முடியும் – சேகுவாரா
நான் கீழே விழும்பொழது என் துப்பாக்கியை ஏந்தி என் பணியை வேறொருவர் தொடர்ந்தால், கீழே விழுவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. – சேகுவாரா
செயல்படுத்தப்படாத சொற்களால் எந்த பயனும் விளையப்போவதில்லை – சேகுவாரா
நீ என்னைக் கொல்ல வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். சுடு, கோழையே, நீ வெறும் ஒரு மனிதனை மட்டுமே கொல்லப் போகிறாய். – சேகுவாரா
சேகுவேரா தத்துவம் || சே குவேரா கவிதை
கியூப நாட்டு மக்களால் இன்றளவும் ஒரு தெய்வமாகவே பார்க்கப்படும் நபர் என்றால் அது சேகுவாரா தான். அடிமைப்பட்டு வறுமையின் கீழ் நிலையில் அவதிப்பட்டு வந்த கியூப நாட்டு மக்களுக்கு ஒரு தெய்வ அவதாரமாகவே கிடைத்தவர் தான் சேகுவாரா.
இறுதி மூச்சு உள்ளவரை போராடி துப்பாக்கி குண்டுகளை கண்டு அஞ்சாமல் ஓடி ஒளியாமல் எதிரியிடம் அடைக்கலம் காணாமல் போர்க்களத்தில் வீர மரணம் எழுதிய ஒரு வீரன் சேகுவாரா ஆவார்.
நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!. – சேகுவாரா
ஒரு புரட்சியாளரின் முதல் கடமை கல்வியறிவு பெறுவதே. – சேகுவாரா
பெருமுதலாளிகளையும், அரசியல் செய்வதையே தொழிலாக கொண்டவர்களையும் கொண்டு நடத்தப்படும் போலியான தேர்தலை வைத்து ஒரு ஜனநாயகத்தை நடத்த முடியாது. – சேகுவாரா
போராடாமல் சுதந்திரம் கிடைக்கும் என்று நம்புவதற்கு நமக்கு உரிமை இல்லை. – சேகுவாரா
யதார்த்தம் மார்க்சியமாக இருந்தால் அது என் தவறல்ல. – சேகுவாரா
மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழிப்பதைத் தவிர சோசலிசத்திற்கு வேறு எதுவும் சரியான வரையறையாக எங்களுக்கு தெரியவில்லை. – சேகுவாரா
வெற்றி கொண்டாட்டம் தேவையில்லை, தோல்விகளை கடந்து வாழ்க்கையை வாழுங்கள், – சேகுவாரா
நண்பர்கள் இல்லாமல் வாழ்வது மோசம் தான் ஆனால் எதிரிகள் இல்லாமல் வாழ்வது அதைவிட மோசம் – சேகுவாரா
motivational quotes சே குவேரா தத்துவம் || motivational quotes சேகுவேரா பொன்மொழிகள்
உலகமே என்னுடைய நாடு என்று உரிமையாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்களுக்காக அவர்களுள் ஒருவனாக நின்று இறக்கும் வரை தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய ஒரு மாவீரன் சேகுவாரா அவர்கள். இன்றைய இளைஞர்கள் தங்களுடைய சிந்தனையில் வளர்த்துக் கொள்ள வேண்டிய பல முக்கிய தத்துவங்களை இந்த உலகிற்கு சொன்னவர் சேகுவாரா அவர்கள்.
அநீதிக்கு எதிராக ஒவ்வொரு இளைஞனும் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்த ஒரு மாபெரும் வீரனின் வரலாறு என்றால் அது இவருடையது தான். பேய்வாரா பற்றிய கவிதைகளையும் அவர் முன்மொழிந்த பொன்மொழிகளையும் இந்த பதிவில் நாம் படித்து பயன்பெற இருக்கிறோம்.
மௌனம் என்பது வேறு வழிகளில் மேற்கொள்ளப்படும் வாதமே. – சேகுவாரா
செய்வதே சொல்லின் சிறந்த வடிவம். - சேகுவாரா
பிரச்னையை வார்த்தைகளால் தீர்க்க முடியும் என்று நினைப்பது ஒரு மாயை. – சேகுவாரா
உலகிலேயே பெரிய பணக்காரரின் சொத்துக்களை விட ஒரு மனிதனின் உயிரின் மதிப்பு பல மடங்கு அதிகம் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். – சேகுவாரா
உண்மையான புரட்சியாளர் அன்பின் சிறந்த உணர்வுகளால் வழிநடத்தப்படுகிறார்.
ஒவ்வொரு நாளும் மக்கள் தங்கள் தலைமுடியை சீராக்குகிறார்கள், ஆனால் இதயத்தை? – சேகுவாரா
எப்போதும், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு நபருக்கும் நடக்கும் அநீதியை ஆழமாக உணர முயலுங்கள். அது ஒரு புரட்சியாளரின் மிக அழகான குணம். – சேகுவாரா
சேகுவேரா கவிதைகள் || சேகுவேரா போட்டோ
இன்று கியூபா எனும் ஒரு சிறிய நாடு மருத்துவத்தில் உலகிலேயே தலைசிறந்த நாடாக விளங்குகிறது என்றால் அது சேகுவாரா எனும் மருத்துவரால் தான். ஊரை சுற்றி பார்க்கச் சென்று அந்த ஊரில் நடக்கும் அநியாயங்களையும் கொடுமைகளையும் கண்டு அந்த மக்களுக்காக போராட வேண்டும் அவர்களுக்கான உரிமைகளை பெற்று தர வேண்டும் என்று எண்ணி அவர்களுடன் கைகோர்த்து இளம் வயதிலேயே போராட்டக் களத்தில் குதித்து வெற்றியும் கண்ட ஒரு மாவீரன் சேகுவாரா.
யதார்த்தமாக இருங்கள், சாத்தியமற்றதைக் கோருங்கள்! – சே குவாரா
நிறைய சாதிக்க, முதலில் நீங்கள் எல்லாவற்றையும் இழக்க வேண்டும். – சே குவாரா
நான் தோற்றுப் போகலாம், அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல. – சே குவாரா
போருக்கு செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும் – சே குவேரா
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம் – சே குவேரா
நீங்கள் ஒன்றிற்காக சாகத் தயாராக இருந்தால் ஒழிய, நீங்கள் வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை உறுதியாக சொல்லமுடியாது. – சே குவாரா
மண்டியிட்டு வாழ்வதை விட எதிர்த்து நின்று சாவதே மேல். – சே குவாரா
நான் விடுதலை செய்பவன் அல்ல. விடுதலை செய்பவர்கள் என்று யாரும் இல்லை. மக்களே தங்களை விடுவித்து கொள்கிறார்கள். – சே குவாரா
விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை. – சே குவாரா
இளைஞர்கள் பொருந்திரளாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். தனிமனிதனாக சிந்திப்பதும் குற்றமே. – சே குவாரா
சேகுவேரா images || சேகுவேரா புகைப்படம் hd
தோன்றின் புகழோடு தோன்றுக என்ற வள்ளுவனின் தத்துவத்திற்கு ஏற்ப வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் வெகுசிலரே அதில் நிச்சயம் சேகுவாரா அவர்களின் பெயரும் இடம்பெறும். வாழ்ந்தாலும் சிலரைப் போல் வாழ வேண்டும் மடிந்தாலும் சிலரைப் போல் மடிய வேண்டும் என்பார்கள் அதில் இரண்டிலுமே சேகுவாராவின் பெயர் நிச்சயம் இடம்பெறும் மக்களுக்கான ஒரு பொது வாழ்க்கையும் வீரனாக தன்னுடைய மரணத்தையும் பெற்றவர் சேகுவேரா.
1967ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ம் நாள் அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டு துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு அவருடைய மரணமானது நிகழ்த்தப்பட்டது.
கல்வி அமைப்பின் சுவர்கள் தகர்க்கப்பட வேண்டும். கல்வி என்பது பணம் படைத்தவர்ளின் உரிமையாக இருக்கக்கூடாது. – சே குவாரா
எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிது. – சே குவாரா
ஒரு மனிதனை தூக்கிலிடுவதற்கு, அவன் குற்றம் செய்ததற்கான ஆதாரம் தேவையில்லை. அவனை தூக்கிலிட வேண்டியது அவசியம் என்பதற்கான ஆதாரம் மட்டுமே தேவை. – சே குவாரா
சதுரங்கம் என்பது மனித மூளைக்கு கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த வழிமுறையாகும். – சே குவாரா
உண்மையான புரட்சியாளர்கள் தங்களை உட்புறமாகவே அலங்கரிக்கிறார்கள், வெளிப்புறமாக அல்ல. – சே குவாரா
ஒரு புரட்சிகர சூழ்நிலைக்காக ஒருவர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அதை உருவாக்க முடியும். – சே குவாரா
மனிதர்களை மிருகங்களாக மாற்றுவதே ஏகாதிபத்தியத்தின் இயல்பு. – சே குவாரா
நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும் – சே குவேரா
நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன் – சே குவேரா