Good Morning Quotes in Tamil – காலை வணக்கம் கவிதைகள்

By TAMIL KAVITHAI

Updated on:

Good Morning Quotes in Tamil for Love

அதிகாலை பொழுது என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான நேரமாகும். எவன் ஒருவன் காலை பொழுதை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிறானோ அவனுடைய வாழ்க்கையானது மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அத்தகைய காலைப் பொழுதுகளை இனிமையாக்கவே இந்த பதிவில் சில அழகான தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய கருத்துக்களை கொண்ட கவிதை வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை தங்களுடைய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து கொண்டு காலை பொழுதே நல்ல நோக்கத்தோடு தொடங்குவதற்கு பயன்படுத்துங்கள்.

Good morning Quotes in Tamil


தேனீரும் தேன்மழையும் போல இனித்திருக்கட்டும் உங்கள் காலை பொழுது….இனிய காலை வணக்கம்

கதிரவன் பார்வையில் கலைந்து விடும் பனித்துளி போல் உங்கள் கவலை எல்லாம் கலைந்து போகட்டும் இந்த காலைப் பொழுதில் இனிய காலை வணக்கம்…

முடியும் என்ற ஒற்றை வார்த்தை மூச்சாய் இருக்கட்டும் வெற்றி என்ற வாழ்க்கை முடிவாய் உனக்கு இருக்கும்.இனிய காலை வணக்கம்

பள்ளத்தை நிரப்பும் மழைநீர் போல் உங்கள் உள்ளத்தை நிரப்பட்டும் என் வாழ்த்துக்கள் இனிய காலை வணக்கம்

Good Morning Quotes in Tamil


தேவையான பொருளை மறந்து வைத்து விடுவது போலத்தான் இந்த காலை பொழுதுகளும்…வாழ்க்கைக்கு மிகவும் தேவையானவை…இனிய காலை வணக்கம்

முடியாது என்ற சொல்லை, சொல்ல முடியாது என்ற நிலைக்கு உங்கள் மனது வரும் நிலையே வெற்றியின் முதல் படி.இனிய காலை வணக்கம்

இருளோடு வாழ்க்கை முடிந்து விடாது என்பதை ஒவ்வொரு விடியலும் சொல்லிக்கொண்டே இருக்கும்.குட் மார்னிங்

பூத்த மலர்கள் எல்லாம் உங்கள் புன்னகை பார்க்க காத்திருக்கிறது….தன்னை விட அழகானவரை காண…இனிய காலை வணக்கம்

எல்லோருக்கும் பிடிக்கும் படி இறைவனாலும் இருக்க முடியாது இனிய காலை வணக்கம்

மரணம் தான் எல்லாவற்றிற்கும் தீர்வு என்றால் இந்த உலகத்தில் மண்டை ஓடுகள் மட்டுமே மிஞ்சும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இனிய காலை வணக்கம்

Good morning Quotes in Tamil


தீராத அன்பே மாறாத காதலுக்கு அடித்தளம் குட் மார்னிங்

கல்லை கரைக்கும் வித்தை கடவுளுக்கும் காதலிக்கும் மட்டுமே தெரியும் இனிய காலை வணக்கம்

அன்பால் பணிந்து போகவும் முடியும் பணிய வைக்கவும் முடியும் இனிய காலை வணக்கம்

GOOD MORNING QUOTES IN TAMIL


கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட கையில் இருப்பதை வைத்து வாழ்வதே மேல் இனிய காலை வணக்கம்

தூரமாக இருந்தாலும் உன் இதயத்தின் ஒரு ஓரமாக இருந்துவிட்டால் அதுவே போதும் இனிய காலை வணக்கம்

அன்னை தமிழால் என்னை அணைக்கும் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

உலகில் பிறந்த முதல் மொழியும் என் செவிகள் கேட்கும் கடைசி ஒலியும் என் அன்னை தமிழே இனிய காலை வணக்கம்

Good Morning Quotes in Tamil


சொல்லும் செயலும் ஒன்றிணைந்தால் தான் நீ செல்லும் பாதை வெல்லும் குட் மார்னிங்

Short positive Good Morning Quotes In Tamil

காலை பொழுது என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது.ஒரு நாள் காலையில் ஏதேனும் தவறாக நடந்து விட்டால் அன்றைய பொழுதே மிகவும் மோசமானதாக மாறியதாக தோன்றும்.பெரும்பாலும் காலை பொழுது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்து விட்டால் அன்றைய பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.மனதில் தோன்றுவதை எல்லாம் சரியாக செய்து முடிக்க காலை பொழுதுகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.அப்பேற்ப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காலை பொழுதுகளை நல்ல எண்ணங்களுடன் தொடங்குவது என்பது மிகவும் முக்கியமாகும்.உங்கள் காலை பொழுதுகளை இனிமையானதாக மாற்றிக்கொள்வதற்கு இந்த கவிதைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.


மாற்றி யோசித்தால் மாற்றம் நிச்சயம் உண்டாகும் குட் மார்னிங்

அறிவால் செய்ய முடியாததை கூட அன்பால் செய்ய முடியும் இனிய காலை வணக்கம்.

பூவில் ஒளிந்திருக்கும் தேன் துளியைப் போல் உங்கள் வாழ்க்கையிலும் இன்பம் ஒளிந்திருக்கிறது அதை கண்டுபிடித்து மகிழ்ந்து வாழுங்கள் குட் மார்னிங்

Good Morning Quotes in Tamil


ஒவ்வொரு நாளும் புதிதாய் பூக்கட்டும் உங்கள் வாழ்க்கை எனும் செடியில்… இனிய காலை வணக்கம்

வலிகள் இல்லாத வாழ்க்கை வசந்தத்தை தராது…இனிய காலை வணக்கம்

பட்ட ஏமாற்றங்கள் எல்லாம் நல்ல மாற்றத்தை தரட்டும் இனிய காலை வணக்கம்

மண்ணில் மனிதன் வாழும் வரை மண்ணிற்கு கெட்ட நேரமே…இனிய காலை வணக்கம்

வேதனை என்று நினைத்தால் வெற்றி பெற முடியாது சோதனை என்று நினைத்து பார் வெற்றியின் வேரை யாராலும் தடுக்க முடியாது.இனிய காலை வணக்கம்

உன்னை நம்பி நீ இருக்கும் வரை யாருடைய வார்த்தையும் உன் பயணத்தை தடுக்க போவதில்லை இனிய காலை வணக்கம்

போனது போகட்டும்; ஆனது ஆகட்டும்;அடுத்த நொடியின் அதிசயத்தை காண இதயம் திறக்கட்டும் இனிய காலை வணக்கம்

GOOD MORNING QUOTES IN TAMIL


குழந்தையின் சிரிப்பை போல் மலரட்டும் உங்கள் வாழ்க்கை இனிய காலை வணக்கம்

Good morning quotes in tamil for friends

பெரிதாக இந்த உலகத்தில் சாதித்த ஒவ்வொருவரும் தங்களுடைய காலை பொழுதுகளை நல்ல முறையில் பயன்படுத்தியவர்கள் தான்.சூரியன் உதிப்பதற்கு முன்பு எழுந்து தங்களுடைய கடமைகளை செய்பவர்கள் தாங்கள் நினைத்த காரியங்களை செய்யும் வலிமை உடையவர்களாக மாறுகிறார்கள்.இந்த உலகில் சாதித்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை வரலாற்றில் காலை பொழுதுகளை பற்றி சிறப்பாக குறிப்பிடுவதுண்டு.நாம் ஒவ்வொருவரும் எழும்போது எந்த உணர்வோடு எழுகிறோமோ அன்றைய நாளின் முடிவிலும் கிட்டதட்ட 70% அதே உணர்வோடு தான் முடிக்கிறோம். எனவே நிச்சயம் காலை பொழுதுகளை நல்ல உணர்வோடு ஆரம்பிப்பது என்பது முக்கியமானதாகும்.பின்வரும் கவிதைகளை நல்ல உங்கள் காலை பொழுதுகளை வண்ணமயமாக்க உபயோகித்து கொள்ளுங்கள்.

Good Morning Quotes in Tamil


இன்பமும் துன்பமும் இறுதி வரை இறுக்கப் போவதில்லை, முயற்சி ஒன்றே மூச்சிருக்கும் வரை நிலைக்கும். இனிய காலை வணக்கம்

உன்னை அவமதித்தவர்களுக்கு முன்னால் மரியாதையாய் வாழ்ந்து காட்டு இனிய காலை வணக்கம்

நேசிக்க மறக்காதீர்கள் இருக்கும் உறவுகளை இனிய காலை வணக்கம்

மனம் நிறைந்த மனிதர்களுக்கு இதயம் நிறைந்த இனிய காலை வணக்கம்

தூக்கத்தின் இறுதி நிமடம் இனிமையாய் கழிந்து இமைகள் விலகி இதயம் விழிக்கும் போது இன்பங்கள் அனைத்தும் வந்து சேர்ந்திட இனிய காலை வணக்கம்

Good Morning Quotes in Tamil


தோல்வி பற்றிய சிந்தனையே வெற்றியின் முதல் எதிரி இனிய காலை வணக்கம்

மலை ஏற வேண்டும் என்றால் கல்லும் முல்லும் காலில் படத்தான் செய்யும்;இனிய காலை வணக்கம்

எரியும் நெருப்பிற்கு நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாது அனைத்தையும் எரித்துவிடும் இனிய காலை வணக்கம்

இதயத்தை இதமாய் தட்டி எழுப்பட்டும் என் காலை வணக்கம்…

மழைக்காக ஏங்கும் மண்ணைப் போல உன் வருகைக்காக காத்திருக்கிறது இன்றைய வருங்காலம் இனிய காலை வணக்கம்

Good Morning Quotes in Tamil


மண்ணோடு போராடி மரமாகும் விதையை போல வாழ்க்கையோடு போராடுங்கள் இனிய காலை வணக்கம்

காற்றில் கமழும் தென்றலை போல் இதயத்தில் இன்பம் என்றும் நிலைக்கட்டும் இனிய காலை வணக்கம்

Positive Good Morning Quotes In Tamil

நேர்மறையான சிந்தனைகளோடு ஒரு காலை பொழுதானது தொடங்கப்பட்டால் அன்றைய பொழுது மிகவும் நேர்த்தியாகவும் நல்ல முறையிலும் தொடங்கப்பட்டுள்ளதாகவே அர்த்தமாகும்.ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நம்பிக்கையோடு தான் தொடங்கப்படுகிறது அந்த நம்பிக்கைக்கு பக்க பலமாக நிற்பது நேர்மறை சிந்தனைகளே…எனவே ஒவ்வொரு நாளையும் நேர்மறையான‌ சிந்தனைகளோடு தொடங்குவதற்காகவே கீழே சில நேர்மறையான காலை வணக்க கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றை படித்து அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


சுற்றும் பூமியே நின்றாலும் உன் முயற்சியை நிறுத்தாதே இனிய காலை வணக்கம்

Good Morning Quotes in Tamil


ஆலோசனை கேள், ஆனால் நீயே முடிவெடு பயணிக்க போவது நீதான் இனிய காலை வணக்கம்

மனதில் உற்சாகம் ஊற்றெடுத்தால் ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தான் இனிய காலை வணக்கம்

நீச்சல் தெரியவில்லை என்றால் குட்டையை பார்த்தால் கூட பயம் தான் வரும் இனிய காலை வணக்கம்

எதிர்காலம் குறித்த பயமே உங்களை எந்திரிக்க விடாமல் செய்கிறது இனிய காலை வணக்கம்

மரணம் ஒன்று உள்ள வரை தான் மனிதன் தன் மனதை நிலையாக வைத்திருப்பான் இனிய காலை வணக்கம்

தோற்றுப்போன பின்னும் முயற்ச்சிப்பது தான் தோல்வியை தொடராமல் பார்த்துக் கொள்ளும்…இனிய காலை வணக்கம்

GOOD MORNING QUOTES IN TAMIL


மண்ணும் விண்ணும் பிரிந்து இருக்கலாம் ஆனால் ஒன்றில்லாமல் ஒன்றால் இருக்க முடியாது;அது போலத்தான் வெற்றியும் தோல்வியும் இனிய காலை வணக்கம்

இதயம் கணமாக இருந்தால் இமைகள் விழிக்க மறுக்கும் இனிய காலை வணக்கம்

பூவில் ஒட்டியிருக்கும் பனித்துளி போல எப்பொழுதும் உங்கள் இதழில் புன்னகை ஒட்டியிருக்கட்டும் இனிய காலை வணக்கம்

நல்லவனாக வாழ்வது சிரமம் தான் ஆனால் நல்லவனாக வாழ முயற்ச்சிப்பது சிறந்தது இனிய காலை வணக்கம்

ஒவ்வொரு நாளும் விடியும் பொழுது முடியும் என்ற எண்ணத்தோடு தொடங்கட்டும் இனிய காலை வணக்கம்

பூங்கொத்துகள் தேவையில்லை உங்கள் அழகான புன்னகை ஒன்றே போதும் எழுந்ததும் தரிசிக்க…இனிய காலை வணக்கம்

Good Morning Quotes in Tamil

குட் மார்னிங் ஸ்டேட்டஸ் தமிழ் || Good morning quotes in tamil with images

தங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் காலை வணக்க புகைப்படங்கள் மற்றும் கவிதைகளை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.இதற்காக செலவிடும் உங்கள் பொன்னான நேரங்களை அதே சமயம் நல்ல நேர்மறை சிந்தனைகளோடு அந்த நாளை தொடங்கவும் முயற்சி செய்யுங்கள்.காலை பொழுதுகள் உங்கள் கனவுகளை நோக்கிய பயணத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.


தோளில் உள்ள பாரத்தை நெஞ்சில் சுமக்காதீர்கள் அது வலியை‌ மட்டுமே அதிகமாக்கும் இனிய காலை வணக்கம்

நீ, நான் என்ற வார்த்தையை விட நாம் வார்த்தையே வெற்றியை தரும் குட் மார்னிங்

இதயத்தில் உள்ள கேள்விகளுக்கு எதிர்காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையுடன் எழுந்திருங்கள். இனிய காலை வணக்கம்

Good Morning Quotes in Tamil


பிடித்தவரோடு வாதம் செய்து நேரத்தை வீணாக்காதீர்கள் இனிய காலை வணக்கம்

ஒவ்வொரு விடியலும் உங்களுடைய வாழ்க்கை புதையலை தேடுவதற்கான தொடக்கமாக மாற்றுங்கள் இனிய காலை வணக்கம்

விளையாட்டாய் நினைத்தால் வாழ்க்கையில் பல வலிகள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் இனிய காலை வணக்கம்

இறைவனிடத்தில் கவலைகள் ஒப்படைத்து உன் இதயத்தில் இன்பம் என்னும் நீருற்றை உருவாக்கு … இனிய காலை வணக்கம்

மனம் திறந்தால் மார்க்கம் கிடைக்கும் இனிய காலை வணக்கம்

இமைகளின் வழியே உலகை பார்ப்பதை விட உன் இதயத்தின் வழியே இந்த உலகத்தை பார் இனிமையாக இருக்கும்;இனிய காலை வணக்கம்

எவ்வளவு வெளிச்சத்தை கொடுத்தாலும் நட்சத்திரங்களின் ஒளி பகலில் தெரிவதில்லை அதுபோலத்தான் உங்களுடைய உழைப்பு கூட சில நேரங்களில் தெரியாமல் போகலாம் காலம் வரும் வரை காத்திருங்கள். இனிய காலை வணக்கம்

காத்திருக்கும் காலம் தான் காதலை அதிகப்படுத்தும் அதுபோலத்தான் காலம் தாழ்த்தி கிடைக்கும் ஒவ்வொன்றிலும் காதல் அதிகமாகத்தான் இருக்கும் இனிய காலை வணக்கம்

சரியான பாதையை தேர்ந்தெடுங்கள் அது மற்றவர்களுக்கு சரியாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.இனிய காலை வணக்கம்

Good Morning Quotes in Tamil


மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மனதினை சில நேரம் நீங்கள் ஒளித்து வைக்கத் தான் வேண்டும்.இனிய காலை வணக்கம்

Good morning quotes in tamil for whatsapp

பெரும்பாலும் இந்தியாவில் உள்ள பெண்கள் அதிகாலையிலேயே எழுந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.பெண்களின் வாழ்க்கை காலை நேரம் என்பது மிகவும் ஓட்டம் நிறைந்ததாகவும் பல சிந்தனைகள் அடங்கியதாகவும் இருக்கும்.எவ்வளவுதான் தடுத்தாலும் பல எதிர்மறை சிந்தனைகள் தோன்றும் அது போன்ற சமயங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள காலை வணக்க கவிதைகள் உங்கள் பொழுதுகளை அழகாக்கும்.


காற்று வந்தால் இலைகளும் கிளைகளும் அசையத்தான் செய்யும் அதுபோலத்தான் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு .இனிய காலை வணக்கம்

Good Morning Quotes in Tamil


மனதில் குழப்பம் இல்லாத சூழல் இருந்தால் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.இனிய காலை வணக்கம்

பொறுப்புகள் தான்‌ உங்கள் வாழ்க்கையை பொக்கிஷமாக்கும்.இனிய காலை வணக்கம்

என்ன தான் துணை இருந்தாலும் உன் மீது உனக்கு நம்பிக்கை வந்தால் தான் ஜெயிக்க முடியும்.குட் மார்னிங்.

மனதிற்கு பிடித்த வேலையை தேடிக்கொள்ளுங்கள் பிடிக்காத இடத்தில் உங்கள் மனம் நீண்ட நாள் சரியாக இருக்காது.குட் மார்னிங்

என்னதான் உலகம் குறை சொன்னாலும் நீங்கள் நன்றாக வாழும் போது அதே உலகம் அப்படியே மாற்றி சொல்லும்.குட் மார்னிங்

தூண்டிலில் மாட்டிய மீனுக்கும் காதல் வலையில் வீழ்ந்த ஆணுக்கும்/பெண்ணுக்கும் ஆயுள் குறைவு தான்.குட் மார்னிங்

Good Morning Quotes in Tamil


நீண்ட நாள் வாழ்வதற்கு ஆரோக்கியம் மட்டும் போதாது ஆழமான அன்பும் தேவை.இனிய காலை வணக்கம்

அதிகாலையே ஆகச் சிறந்த நல்ல நேரம் எல்லா காரியங்களுக்கும்.இனிய காலை வணக்கம்

மனதின் காயங்களை மறைத்து வைக்க கற்றுக்கொள்வதே சிறந்த பக்குவம்.குட் மார்னிங்

எனை ஆளும் ஈசன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் இனிய காலை வணக்கம்

முழு முதற் கடவுளான கணபதியின் கடை விழி பார்வை உங்கள் கனவுகளின் மீது விழட்டும் இனிய காலை வணக்கம்.

நம் முப்பாட்டன் முருகன் அருளால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை காண வாழ்த்துக்கள் .இனிய காலை வணக்கம்

அம்மன் அருளாலே…எண்ணமெல்லாம் நல்ல வழி சேர இனிய காலை வணக்கம்

காலை பொழுதை சரியாக பயன்படுத்துபவனே தனது கனவுகளை அடைய போராடுபவன் ஆவான்.இனிய காலை வணக்கம்.

Positive Good Morning In Tamil || Meaningful Good Morning Quotes In Tamil

ஒவ்வொரு நாளும் எவ்வளவு முக்கியம் என்பது அன்றைய நாளின் தொடக்கத்தில் இருந்து தான் அமைகிறது.அதிகாலை என்பது எல்லா சுபகாரியங்களுக்கும் ஏற்ற நேரம் என்பதால் தான் பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலையிலேயே இருக்கிறது.


சரியாக பயன்படுத்தப்படாத நேரம் சரித்திர வாய்ப்பை உங்களிடம் இருந்து தள்ளி வைக்கும்…குட் மார்னிங்

ஒவ்வொரு விடியலும் உன் தேடலுக்கான பாதையாகும்….குட் மார்னிங்

தடுக்கி விழுந்தால் தான் தானே வழியை தேடும் திறன் வளரும்…குட் மார்னிங்

தேவையில்லாத நினைவுகளை சுமப்பதை விடவும் தேவையான கனவுகளை நினைவுகளாக்குங்கள் இனிய காலை வணக்கம்

நீ தேடும் வாழ்க்கை உன்னையும் தேடுகிறது.குட் மார்னிங்

Good Morning Quotes in Tamil


அடிக்கடி ஏற்படும் சறுக்கல் தான் வாழ்க்கையின் சுவாரசியம்.குட் மார்னிங்

காலம் தாழ்ந்து விட்டதாக எண்ணி கனவை தொலைத்து விடாதே அனுமதியும் சாதித்தவர்கள் ஏராளம்.குட் மார்னிங்

கனவுகளை நினைவாக்க, காலை பொழுதுகளை ஒரு பொழுதும் கனவுகளால் நிறைக்காதீர்கள்….இனிய காலை வணக்கம்

முயற்சி என்ற வார்த்தை உங்கள் மூச்சில் இருக்கட்டும் குட் மார்னிங்

விரைவாக எழுந்து விடுங்கள் வாழ்க்கை வீணாகாது.குட் மார்னிங்

உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இந்த நல்ல பொழுதில் உங்களுக்கு கிடைக்கட்டும்.இனிய காலை வணக்கம்

அதிகாலையே அனைத்து விதமான முயற்சிகளுக்கும் உகந்த நேரம் .இனிய காலை வணக்கம்

அன்பில் குறை இருந்தால் வார்த்தையில் வெளிப்பட்டு விடும்.குட் மார்னிங்

மகிழ்ச்சியாய் இருக்க வைக்கும் ஒரே நோய் மறதி குட் மார்னிங்

என்ன தான் காசு பணம் இருந்தாலும் அரவணைக்க அன்பு காட்ட ஆள் இல்லை என்றால் அத்தனையும் வீண் தான்.குட் மார்னிங்

TAMIL KAVITHAI

Leave a Comment