தீபாவளி திருநாளில் அனைவருக்கும் பகிர்ந்து மகிழ்வதற்காக இந்தப் பதிவில் வாழ்த்து கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை என்பது வெவ்வேறு ஊர்களில் பிரிந்து கிடந்த உறவுகளை எல்லாம் ஒன்று சேர்க்கும் ஒரு திருநாளாக உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேடிக்கை பார்த்து விளையாட்டுகள் செய்து தங்களுடைய பொழுதை இனிமையாக கழித்து கொண்டாட விரும்பும் இந்த தீபாவளி திருநாளை எல்லோரும் மன நிம்மதியோடும் மன நிறைவோடும் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் கொண்டாடி மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த தீபாவளி எல்லோருடைய வாழ்விலும் எல்லாவித நன்மைகளையும் தந்து வாழ்க்கையை வளமாக்கி உங்கள் உடல் நலத்தை நலமாக்கி உள்ளத்தை உறுதியாக்கி இன்பம் துன்பம் என எல்லாவற்றையும் கடந்து நிலையானதொரு வாழ்க்கையை வாழ துணை செய்யட்டும்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மண்ணையும் காற்றையும் மாசுபாட்டில் இருந்து காப்போம்! அளவோடு பட்டாசு வெடித்து அன்பை பகிர்வோம்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இன்றோடு இருள் முடிந்து உங்கள் வாழ்க்கையில் நல்லொளி படர இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி அன்று வானம் ஒளியால் மின்னுவதை போல் உங்கள் வாழ்க்கையும் ஜொலிக்கட்டும்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
குடும்பத்தோடு குதுகலாமாய் சொந்த மண்ணில் மனநிறைவாய் பலகாரங்களின் சுவையில் இனிக்கட்டும் இந்த தீபாவளி தித்திப்பாய்!!! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நீங்கள் வெடிக்கும் வெடிச்சத்தம் சிவகாசிக்கே கேக்கட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் நிம்மதி எனும் தீப ஒளி நிறைந்து வழியட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்பால் இதயங்கள் நிறைந்து செல்வத்தால் இல்லம் நிறைந்து பண்பால் உங்கள் வாழ்க்கை நிறைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்பால் இணைந்த உறவுகளோடு அகம் மகிழ்ந்து மனம் நிறைந்து கொண்டாடுங்கள் இந்த தீபாவளியை இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எட்டுத் திக்கும் வாழும் எழுச்சி தமிழர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசுகளுடன் உங்கள் வேதனைகளும் வெடித்து சிதறட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்பு உள்ளங்களுக்கும் ஆசை உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மத்தாப்பு போல மனதில் மகிழ்ச்சி நிறைந்து வழிய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி திருநாளில் தீராத மகிழ்ச்சியும் திகட்டாத அன்பும் இல்லத்தில் நிறைந்திட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
சொந்த பந்தங்களோடு சுகமாக கொண்டாடுங்கள் இந்த தீபாவளியை…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
புத்தாடை உடுத்தி பட்டாசு கொளுத்தி இனிப்புகள் ருசித்து இனிதே கொண்டாடி மகிழுங்கள் இந்த தீபாவளி திருநாளை …இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு செத்துப்போன நரகாசுரனே எழுந்து வர வேண்டும்… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
கொட்டும் மழையில் வானை நினைக்கும் பட்டாசு மழையை வேடிக்கை பார்க்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
என் இஷ்டமான உறவுகளுக்கும் இதயத்தில் வாழும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வேற்று தேசத்தில் வேர் ஊன்றி வாழும் நம் தமிழ் சொந்தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உங்கள் முயற்சி எல்லாம் வெற்றியாக மலரட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வெளிச்சம் உங்கள் வீட்டை நிறைக்கட்டும்; மகிழ்ச்சி உங்கள் மனதை நிறைக்கட்டும்… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசு வாங்க காசில்லாமல் வெடிப்பவர்களை வேடிக்கை பார்த்து மனதை தேற்றிக்கொள்வதும் ஒரு வித சுகமே…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து இந்த தீபாவளியை இனிதே கொண்டாடி மகிழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இல்லாதவருக்கு கொடுத்து மகிழுங்கள் அன்பையும் இனிப்பையும்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி அன்று அம்மா செய்த இட்லியும் கரிக்குழம்பும் தெகட்ட தெகட்ட சாப்பிட்ட நினைவுகள் சுகமானவை…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஏற்றி வைக்கும் தீபம் போல் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
விடியலுக்காகத்தான் ஒவ்வொரு இரவுகளும் காத்திருக்கின்றன… உங்கள் வாழ்க்கையில் விரைவில் விடியல் வர இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசுகளை வெடித்து கொண்டாடுபவர்களுக்கும் வேடிக்கை பார்த்து மகிழ்பவர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி அன்று வானில் வெடிக்கும் பட்டாசுகளின் வெளிச்சத்தால் உங்கள் வீடும் மனதும் நிறையட்டும்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி ஒன்றே பிரதானமாய் மனதில் இருக்க மத்தாப்பு போல முகங்கள் மலர உங்கள் இல்லமும் உள்ளமும் ஒளியால் நிறைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தேவையில்லாமல் உங்களிடம் நிறைந்திருப்பதை இல்லாதவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பலகாரங்களை பகிர்ந்து கொள்வது போல் மற்றவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசு வாங்கும் பொழுது பணத்திலும் வெடிக்கும் பொழுது கையிலும் கவனம் இருக்கட்டும்…இல்லையென்றால் வீணாகி விடும் இரண்டும்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத மனிதர்களையும் வெடிக்காத பட்டாசுகளை கவனமாக அப்புறப்படுத்துங்கள் இரண்டும் ஆபத்தானவை…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசு சத்தமே காலையில் எல்லோர் வீடுகளுக்கும் கேட்கும் அலாரமாக…மாறும் மகிழ்ச்சிகரமான நன்னாளை மனநிறைவோடு கொண்டாடி மகிழுங்கள்
உங்கள் இதயம் எனும் சொர்க்கத்தில் எல்லோருக்கும் இடம் கொடுங்கள்… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வண்ண விளக்குகள் வீட்டை அலங்கரிப்பதை போல் நல்ல எண்ணங்களால் உங்கள் இல்லமும் உள்ளமும் நிறைந்து மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழுங்கள் இந்த தீப திருநாளை
பட்டாசுகளை குறைவாக வெடிப்போம்!சுத்தமான காற்றை நம் சந்ததிகளுக்கும் பரிசளிப்போம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசு வெடிக்கும் முன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் அதிகமாக வெடித்தால் சுற்றுச்சூழலுக்கும் நமக்கும் ஆபத்து என்று இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசுகளை வெடித்து கொண்டாடுங்கள் இந்த தீபாவளியை அதை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களுக்காக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு குறைவான வெடிகளோடு நிறைவாக தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
சொந்த ஊருக்கு போகனும்! இந்த தீபாவளி எப்படா? வரும்னு எதிர்பார்த்து காத்திருந்த அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எப்படா சொந்த ஊருக்கு போவோம்னு இருந்தவங்களுக்கு தான் தெரியும் தீபாவளி கொண்டாடுறத விட சொந்த ஊருக்கு போறோங்குற மனநிறைவு தான் கொண்டாட்டமேனு!…
பட்டாசு வாங்கி தரலையேனு 10 வயசு வரைக்கும் தான் ஃபீல் பண்ணுவோம் அதுக்கப்புறம் புதுப்படத்துக்கு போக முடியலையேன்னு ஃபீல் பண்ணுவோம்…அதாங்க தீபாவளி!
பொம்ம துப்பாக்கி கேட்டு அழுத நாட்கள் இன்னும் நீங்காத நினைவுகளாய் இதயம் சுமக்கிறது…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வெடிக்க பட்டாசு இல்லயே னு ஃபீல் பண்ண காலம் போய் பட்டாசு இருந்தும் வெடிக்க தோணலயே னு நினைக்கிற காலமும் வரும் இதாங்க வாழ்க்கை…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அப்பா எப்படா பட்டாசு பாக்ஸ் வாங்கிட்டு வருவாங்க னு வாசல்லயே…உட்காந்திருப்பதே தனி சுகம் தான்… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இல்லாதவருக்கு உங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டு, கொடுப்பதே சிறந்த பண்பு அனைவருக்கும் உணர்த்துங்கள் இந்த தீபாவளியில்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளிக்கு அதுரசம் சுடுமான்னு…மூணு மாசம் முன்னாடி ல இருந்தே கேட்டது இன்னமும் நியாபகம் இருக்கு… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஏற்றும் ஒளி எல்லோருக்கும் ஒரே மாதிரியான வெளிச்சத்தை மட்டும் தான் தருகிறது…. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி திருநாளில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகி எல்லாருடைய வாழ்விலும் நல்லது நடக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பக்கத்து வீட்ல பட்டாசு வெடிக்கிறத சந்தோஷமா…பார்த்து ரசித்த நாட்கள் மனதை நினைக்கிறது…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
கம்பி மத்தாப்பூ பிடிக்க அப்பா சொல்லிக் கொடுத்தது இன்னும் மறக்கவில்லை ..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி செலவுக்கு காசில்லாமல் அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பார்னு நான் அப்பா ஆனதுக்கு அப்புறம் தான் புரியுது…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
காக்கி வெடியிலும் கலர் சட்டையிலும் காசை கரியாக்காதீர்கள்….சிறுக சிறுக சேமித்தால் தான் பெரிய வாழ்வு வாழ முடியும்… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி அன்னைக்கு கரிக்கடைக்கு போன அப்பா இன்னும் வரலையேன்னு வாசலையே பார்த்துட்டு இருந்த நினைவுகள் அழகானவை…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளிக்கு முறுக்கு சுடு என்று அம்மாவிடம் அடம் பிடித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பக்கத்து வீட்டுல இருந்து டப்பா ல வர அதுரசத்துக்காக அக்காவோட சண்ட போட்ட நினைவுகள் எல்லாம் தீபாவளி அன்று வந்துஸபோகிறது….இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் இந்த நவீன வாழ்க்கையில் குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இந்த பண்டிகைகள் தான்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வெளியூர்களில் வாழும் உறவுகளை எல்லாம் ஒன்றிணைக்கும் இந்த தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
கொட்டும் மழையில் வாங்கிய பட்டாசுகளை வெடிக்காமல் அடுத்த வருடம் வெடித்துக் கொள்ளலாம் என்று எடுத்து வைத்த நியாபகங்கள் இனியவை தான்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
என்னவோ தெரியல!சின்ன வயசுல தீபாவளி கொண்டாடுவதும் இருந்த சந்தோஷம் இப்போ இல்ல…
எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட அம்மா இருந்த வரை தீபாவளி மகிழ்ச்சியாக இருந்தது…
முறுக்கு சுட்டுக் கொடுத்த அம்மாவிற்கு முத்தம் கொடுக்க மறந்து விடாதீர்கள்… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
செல்லும் வழி எல்லாம் செல்வம் சேரட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொரு நாளும் ஒற்றுமை எண்ணம் ஓங்கட்டும் வீட்டிலும் நாட்டிலும்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நம்பிக்கை எனும் ஆயுதத்தால் வெல்ல முடியாதது என்று எதுவும் இல்லை…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொரு நாளும் உன்னால் முடியும் என்ற நம்பிக்கை உயர்ந்து கொண்டே இருக்கட்டும்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
காட்டாறுகள் ஒரு பாதையில் செல்வதில்லை…அது செல்லும் இடத்தை எல்லாம் தன் பாதைகளாக மாற்றிக்கொள்ளும்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இதயத்தில் வாழும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியாய் வாழ இந்த நொடியே சிறந்த நேரம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
காலம் நேரம் பார்ப்பதில்லை காதல்:அதுபோலத்தான் கண்ணீரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து மன நிறைவாய் மத்தாப்பாய்… கொண்டாடுங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொரு நாளும் விடியலை தருவது போல் உங்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வெளிச்சத்தில் மலரட்டும்- இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எல்லோரும் எல்லாம் பெற்று, இல்லாமை என்ற நிலை எட்டி வாழ்வில் வண்ணங்கள் தீட்டி, வசந்தத்தை வாழ்வில் நீட்டிப்போம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பூக்கள் மலர்ந்தால் வாசனை கிடைக்கும் மனிதன் மனம் திறந்தால் வேதனை குறையும்-இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
காற்றை தென்றலாக பார்த்தால் ரசிக்கிறோம்!புயலாய் பார்த்தால் வெறுக்கிறோம்…அதுபோலத்தான் மனிதர்களும்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசுகள் வெடிப்பதில் கவனமாக இருங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இல்லாதவரும் இருக்கின்றனர் இந்த உலகில் என்பதை உணர்ந்து கொண்டாடுங்கள் இந்த தீபாவளியை…
இல்லார்க்கும் எல்லாம் கிடைத்து ஈகைப் பண்பை வளர்த்து…ஒவ்வொருவரும் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மனிதர்களோடு மட்டும் அல்ல அவர்களுடைய மனங்களோடும் பேசுங்கள்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எல்லோரும் நல்லா இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
காசை கரியாக்காமல்…அந்த காகிதமே பெரிய ஆயுதம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்…இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…
2 thoughts on “Diwali Wishes in Tamil – தீபாவளி வாழ்த்து கவிதைகள்”