மகளிர் தினத்தன்று மட்டும் பெண்களைக் கொண்டாடாமல் ஒவ்வொரு நாளும் உங்கள் அருகில் இருக்கும் பெண்களை மதித்து அவர்களின் உணர்வுகளை சுதந்திரப் படுத்தி அவர்களுக்கான மரியாதையையும் உரிமைகளையும் தந்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்க நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும் இந்த பதிவு நிச்சயம் பயன்பெறும்.

ஆதி சக்தியும் அவளே! அனைத்து சக்தியும் அவள் உள்ளே! மண்ணில் உயர்ந்தவள் பெண்ணே! மண்டியிடு என்றும் அவள் முன்னே!! இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

நீர் இன்றி அமையாது உலகு…பெண் இன்றி அமையாது நல்வாழ்வு…

ஓர் உடலில் இரு இதயத்தை சுமக்கும் வரம் பெற்று விலை மதிப்பற்ற செல்வமாய் வீட்டிற்கும் நாட்டிற்கும் இருப்பவள் பெண்…இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்

தாயாய் தங்கையாய் மனைவியாய் மகளாய்…தோழியாய் தேவதையாய்…மூத்தவளாய்…முகவரியாய்… உங்கள் வாழ்வில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

குடும்பம் எனும் ஒற்றை சொல்லில் ஒட்டுமொத்த கனவுகளையும் கை கழுவிய பெண்கள் எத்தனை கோடி….தியாகங்களின் தீபங்களுக்கு இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்….
சமையலறையின் நெருப்பில் வெந்தது விறகுகள் அல்ல! தன்னுடைய சிறகுகள் என்று அறியாமல் போனோர்…எத்தனை கோடி….அத்தனை அணையா தீபங்களுக்கும் சேர்த்து மதிப்பளிப்போம்….மகளீர் தினத்தில்…
தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு பிறர் கண்ணீரை துடைக்கும் பெண்களை போற்றுவோம் வணங்குவோம்…

“நீ இந்த உலகத்தின் சிறந்த பெண்மணி என் சினேகிதியே”!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் சிறகுகளற்ற பறவைகளாய் வாழ்ந்த மாதர்களுக்கு சிறகுகளை விரிக்க காலம் வழிவிடட்டும்….மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
உறவுகளை கட்டி காப்பதிலும் உணர்வுகளை கட்டுப்படுத்துவதிலும் உயர்ந்தவள் உணர்ந்தவள் பெண்ணே! ஒவ்வொரு பெண்ணும் மரியாதைக்குரியவளே….
பத்து மாதம் சுமந்தவளும் ஆயுள் முழுக்க சுமப்பவளும் உடன் பிறந்தவுளும் உறவாடும் தோழியும் உன் வாழ்க்கையின் உன்னதங்கள்….
சமூக அநீதிகளை சுமந்து சுமந்து சல்லடையாய் உடைந்த எங்கள் உள்ளங்களை உறுப்படுத்த உணர்வு கொள்ளுங்கள் மானிடமே…சோதனைகளின் விளிம்பில் எங்கள் சாதனைகளை தொடங்குகிறோம்…. நாங்கள்…
நீ சிறந்தவள் என்பதை யாருக்கும் நிரூபித்து காட்டவேண்டிய அவசியமில்லை…மகளீர் தின நல்வாழ்த்துக்கள்
குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு பெண்ணும் கொண்டாடப்பட வேண்டியவள் தான்…இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்
பொறுப்பான பெண்களின் பின்னால் சில பொறுப்பற்ற ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!
பாரதி தேடிய புரட்சிப் பெண்களை புதுயுகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
பெண்கள் இல்லாத பிரபஞ்சம் புல் முளைக்காத களர் நிலமே…இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வணக்கம்…எங்களின் பார்வையில் பெண்கள் எப்போதுமே அற்புதமானவர்கள் தான்…இந்த பகுதியில் கூடுதலாய் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாதர்களுக்கும் அன்பு தெரிவிக்கும் வகையில் இங்கே வாழ்த்து கவிதைகளையும் அதனூடே…அவர்களின் எண்ணங்களை தெரிவிக்கும் வகையில் சில கவிதைகளும் இங்கே பதிவிடப்படுகின்றன…
படித்தும் பகிர்ந்தும் இந்த கவிதைகளுக்கு உயிர் கொடுங்கள் நன்றி …