யாருக்கு வேண்டும் அனுதாபம்? – Moral Stories in Tamil

By TAMIL KAVITHAI

Updated on:

ஒரு சிற்றூருக்கு பேருந்து ஒன்று வந்தது அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்கினான் கால்களில் உயர்ரக பூட்ஸ் அணிந்திருந்தான். உயர்ந்த தரத்தில் உடைகளும் உள்ளாடைகளும் கையில் கட்டி இருந்த கடிகாரமும் என மிடுக்காய் இருந்தான். சட்டையை பேண்டினுள் மடித்து இன் பண்ணி இருந்தான் இடையில் மிகவும் அழகான பெல்ட் ஒன்றையும் அணிந்திருந்தான் அந்த ஊரில் கோட் அணிந்து வந்த முதல் ஆல் அவனாகத்தான் இருப்பான் என்பது எல்லோருடைய கண்களுக்கும் தெரிந்தது.

அவனுடைய உடைகளில் இருந்து சென்ட் வாசம் அனைவருக்கும் பலமாக அடித்தது. தலையில் அவன் தேய்த்து இருந்த என்னை மிகவும் வாசனையாக இருந்தது. முகத்தில் உயர் ரக பவுடர் அடித்திருந்தான் கண்களில் சன் கிளாஸ் மாட்டிக் கொண்டு கைகளில் கிளவுஸ் கூட போட்டு இருந்தான். கையில் ஸ்டைலாக ஒரு சூட்கேசையும் வைத்திருந்தான்.

எனவே அவனுக்கு மனதில் தான்தான் மிகவும் அழகான மனிதன் என்பது போல எண்ணம் இருந்தது பேருந்தை விட்டு இறங்கியதும் மெல்ல நடந்தான் யாராவது நம்மை பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டுக் கொண்டு நடந்தான். அவன் எதிர்பார்ப்பது போலவே அனைவரும் அவனையே கவனித்தார்கள்.

தான் அழகாக இருக்கிறோம் அற்புதமாக இருக்கிறோம் என்பதில் அவனுக்குள் மிகவும் பெருமையாக இருந்தது எனவே அவன் அழகை அவனே வியந்து கொண்டு மிகவும் நளினமாக நடந்து வந்தான்.

எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவனுக்கு அந்த ஊர் புதிதாக தான் இருந்தது இதுவரை அந்த ஊருக்கு அவன் வந்ததே இல்லை.

எனவே இங்கே தங்குவதற்கு லாட்ஜ் எங்கே இருக்கிறது என்று அங்கே பக்கத்தில் இருந்த வழக்கடையில் சென்று விசாரிக்கலாம் என்று நடந்து வந்தான் அப்பொழுது கீழே திடீரென விழுந்து விட்டான் அதற்கு காரணமும் இருந்தது அவன் மேலே பார்த்துக் கொண்டு நடந்து வந்தானே தவிர கீழே சற்றும் பார்க்கவில்லை.

அந்த இடத்தில் கீழே ஒரு வாழைப்பழ தோல் கிடந்தது அந்த வாழைப்பழத் தோலை அவன் கவனிக்காமல் அதன் மேல் கால் வைத்தது தான் தாமதம் உடனே வழுக்கி விழுந்து விட்டான். விழுந்த வேகத்தில் சூட்கேஸ் ஒரு பக்கம் சென்று விழுந்தது அதனுடைய கால் கை பரப்பியபடி பல்லாண்டு கிடந்தான் ஈரமன்னால் அவனுடைய உடைகள் முழுவதும் அழுக்காக்கப்பட்டன.

கருப்பு கண்ணாடி கீழே உடைந்து விழுந்தது அவன் அணிந்திருந்த டை ஒரு பக்கம் சரிந்தது கோட்டு ஒரு பக்கம் விலகியது எத்தனை அழகாக வந்தானோ அத்தனைக்கும் எதிர் மாறாக அசிங்கமாக தற்பொழுது கீழே விழுந்தான்.

சிறிது நேரத்திற்குள் அவனைச் சுற்றி ஒரு சின்ன கூட்டம் கூடிவிட்டது. பார்த்து வந்திருக்கக் கூடாதா தம்பி என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டார். இன்னொருவர் அவன் கையைப் பிடித்து தூக்கி விட்டார். மற்றும் ஒருவர் அவன் மேல் ஒட்டி இருந்த மண்ணை தட்டி விட்டார். வேறொருவர் அங்கு வந்து கை பெட்டியை எடுத்து அவரிடம் பவ்யமாக நீட்டினார்.

இன்னொருவர் அவன் கருப்பு கண்ணாடியை துடைத்துவிட்டு அவனிடம் நீட்டினார். பாவி பயல் எவனோ வாழைப்பழத்தை தின்னுவிட்டு தோலை தெருவிலேயே எரிந்து விட்டான் என்றார் ஒருவர்.

இந்த காலத்து பசங்களுக்கு எல்லாம் பொறுப்பே இல்ல எப்படி பழத்து தின்னுட்டு தோலை தெருவுல போட்டு போயிட்டாங்க பாருங்க அப்படின்னு ஒருவர் சொல்லிக்கிட்டே சென்றார்.

சார் சார் அடிக்கடி ஏதாவது பட்டதா சார் என்றால் ஒருவர்

சார் கையையும் காலையும் நன்றாக உதறுங்கள் சார் என்றார் ஒருவர்

ம் ச் பாவம் என்றால் இன்னொரு கிழவி

பார்த்து போங்க சார் என்றால் இன்னொரு வாலிபன்.

அங்கே இருந்த அனைவரின் அனுதாபமும் ஆறுதலும் கீழே விழுந்த இளைஞனுக்கு தெம்பையும் தைரியத்தையும் அளிப்பதை விட அவமானத்தை தான் ஏற்படுத்தியது. அசட்டு சிரிப்பாக ஒரு சிரிப்பை சிரித்து வைத்தால் எல்லா கேள்விகளுக்கும் அந்த சிரிப்பு ஒன்றே பதிலாக இருந்தது.

பின்னர் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெட்கத்துடன் விறுவிறு என நடையை கட்டினான்.

கூடியிருந்த கூட்டமும் மெல்ல மெல்ல கலைந்தது அனைவரும் கலைந்த பின்னர் அந்த வாழைப்பழத் தோல் தன்னைத் தாங்கிக் கொண்டிருந்த மண்ணிடம் கூறியது,

பாரேன் இந்த வேடிக்கையான உலகத்தை, இந்த உலகம் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை இதிலிருந்து நீ புரிந்து கொள்ள வேண்டும் மண்ணே என்றது.

நீ என்ன சொல்ல விரும்புகிறாய் எனக்கு புரியவில்லை என்றது மண்.

Moral of the Story – கதையின் நீதி

சிரித்துக்கொணடே வாழைப்பழத் தோல் கூறியது காலம் காலமாகவே “இந்த உலகத்தில் யார் ஒருவன் இன்னொருவனை நசுக்குகிறானோ அவனுக்காகவே இந்த உலகம் அனுதாபப்படுகிறது நசுக்கப்பட்டு வேதனையில் உயிருக்கு போராடுபவனுக்காக ஒருவன் கூட அனுதாபப்படவில்லையே? “

வாழைப்பழத் தோலின் எதார்த்த உண்மை மண்ணுக்கு புரிந்தது.

மூர்கனுடன் மோதாதே – Moral Stories in Tamil

ஒரு பெரிய காட்டில் ஒரு அழகான பறவை ஒன்று, ஒரு பெரிய மரத்தில் கூடு கட்டி தன்னுடைய குட்டி பறவைகளுடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் அந்த அடர்ந்த காட்டில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மழை நின்ற பாடில்லை. அவ்வளவு பெரிய மழையை அந்த காடு பார்த்ததே இல்லை. இருந்தாலும் அந்த மழையிலும் அந்தப் பெரிய மரத்தில் கூடு கட்டி இருந்த அந்தப் பறவையும் அதன் குஞ்சுகளும் அது இட்டு இருந்த முட்டைகளும் மிகவும் கதகதப்பாகவும் பாதுகாப்பாகவும் இருந்தனர்.

அப்பொழுது அந்த மழை காரணமாக அந்த மரத்தின் அடியில் ஒரு பெரிய குரங்கு ஒன்று ஒதுங்கியது. அந்த குரங்கை பார்ப்பதற்கே மிகவும் பாவமாக இருந்தது. குளிரில் நடுங்கிக் கொண்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அந்த குரங்கை பார்த்து மரத்தின் மேலே தன் கூட்டில் இருந்த பறவையானது குரங்கே உங்களுக்குத்தான் மனிதர்களைப் போலவே கைகள் கால்கள் எல்லாம் இருக்கிறது சிறிய பறவையாக உள்ள நாங்களே எங்களுக்கென்று ஒரு கூட்டைக் கட்டி அதனுள் மிகவும் பாதுகாப்பாக வாழ்கிறோம் இப்பொழுது பாருங்கள் இங்கே எப்படி மழை பெய்கிறது ஆனால் நாங்கள் எங்கள் கூட்டில் மிகவும் கதகதப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நீங்களும் எங்களைப் போலவே உங்களுக்கென்று ஒரு வாழ்விடத்தை அமைத்துக் கொண்டு நல்ல முறையில் வாழலாமே என்று கூறியது.

உடனே அந்த பெரிய குரங்கிற்கு சட்டென்று கோபம் வந்தது. அந்த பறவையை பார்த்து நான் உன்னை விட வலியவன் பெரியவன் எல்லா விதத்திலும் சிறந்தவன் என்னை பார்த்து நீ ஏளனம் செய்கிறாயா? என்று கேட்டுக் கொண்டு, விறுவிறுவென அந்த பெரிய மரத்தில் ஏறியது.

Moral Stories in Tamil

அந்தக் குரங்கு மரத்தில் ஏறி பறவையின் கூட்டை பிச்சுப் போட்டு அந்தப் பறவை இட்டு வைத்திருந்த முட்டைகளை எல்லாம் உடைத்து குடித்தது. அந்தப் பறவை இடம் இனி இதுபோல் என்னிடம் நடந்து கொள்ளாதே என்று கூறிவிட்டு சென்றது.

அந்தப் பறவை தன்னுடைய சிறிய பறவைகளுடன் அழுது கொண்டு அந்த மரத்தை விட்டு பறந்து சென்றது.

கதை சொல்லும் நீதி: Moral Stories in Tamil

மூர்க்கத்தனமான அதாவது பலம் வாய்ந்த முட்டாளுடன் வாதம் செய்யாதீர்கள் இரக்கம் காட்டாதீர்கள்.

TAMIL KAVITHAI

Leave a Comment