- Short Life Quotes In Tamil
- Positive life quotes in tamil
- Sad life quotes in tamil
- Positive Tamil Quotes in one line
- Life quotes in tamil for instagram
- Life quotes in tamil for students
- Life success motivational Quotes In Tamil
- Life quotes In tamil one line
- New life quotes in tamil
- pain life quotes in tamil
- change new life quotes in tamil
உண்மை யாருக்கும் அஞ்சாது; நேர்மை யாருக்கும் அடங்காது
அன்பு ஒன்றே எல்லோருக்கும் புரியும் மொழி
நம் வாழ்க்கையின் சிறந்த அனுபவங்கள் நாம் செய்யும் தவறுகள்
தோல்வி எனும் படிக்கட்டுகளை ஏறினால் தான் வெற்றி எனும் மேடையை அடைய முடியும்
உன்னை பார்த்து சிரித்தவர்கள், உனக்காக அழுதால் உன் வாழ்க்கை அர்த்தமானதாகும்
சிலர் அன்பை தருகிறார்களோ?இல்லையோ? ஆனால் அனுபவத்தை மட்டும் தந்துவிடுகிறார்கள்…
கரடு முரடான பாதை தான் மலை உச்சியை அடையும் அதுபோலத்தான் வாழ்க்கையும்
கவலைகளை மறந்து வாழுங்கள், மறைத்துக்கொண்டு வாழாதீர்கள்
எல்லோருக்கும் பிடித்தவராக இருக்க அந்த இறைவனாலேயே முடியவில்லை,பிறகு நீங்கள் ஏன் முயற்ச்சிக்கிறீர்கள்…
நல்லவர்களாக இருக்க நாம் நினைக்கலாம்,நல்லவர்களாக வாழ காலம் விடுவதில்லை.
உனக்கு பிடித்த வாழ்க்கையை நீ வாழு,மற்றவர்களுக்கு உன்னை தானாக பிடிக்கும்
அன்பை பிச்சை கேட்காதே…அதுபோல் அன்பை கொடுக்க தயக்கம் காட்டாதே…
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால், உன்னை நினைக்க யாரும் இருக்க மாட்டார்கள்
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் பாடத்தை ஆயிரம் ஆசிரியர்கள் வந்தாலும் கற்றுக்கொடுக்க முடியாது…
அனுபவமே சிறந்த ஆசிரியர், உன் தவறுகளே சிறந்த அனுபவங்கள்
மனிதனின் குணமும் நீரின் குணமும் ஒன்று தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்ளும்
ஒரு நல்லவனால் எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க முடியாது…
குழந்தைகளை பார்த்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்,யாரைப் பற்றியும் கவலைப்படாமல்…வாழ
நாம் நேசிக்கும் மனிதர்களை விட நம்மை நேசிக்கும் மனிதர்களுக்கு முதலுரிமை கொடுங்கள்…
அடுத்த நொடியில் அடங்கியிருக்கும் ரகசியமே வாழ்க்கையின் சுவாரசியம்
எதிர்காலம் என்னவென்று முன்பே தெரிந்தால் வாழவேண்டும் என்றே ஆசையே யாருக்கும் வராது.
இந்த உலகத்தில் உனக்கொரு இடத்தை உருவாக்குவதை விட,உனக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கிக்கொள்…
உடைந்தால் காயப்படுத்தும் கண்ணாடியை போலத்தான் மனிதர்களும்….
நமக்கான நேரம் வரும் என்று காத்திருக்காதே!காலம் யாருக்காகவும் காத்திருக்காது…
நீ அவமான பட்ட இடத்தில் ஒருநாள் அங்கிகரிக்கப்பட்டால் அதுவே உன் சாதனை
உன் சாதனை உலகிற்கு நீ யார் என்று காட்டும்;நீ பட்ட அவமானம் உனக்கு நீ யார் என்று காட்டும்.
அசிங்கப்பட்டதை நினைத்து ஆத்திரப்படாதே….. அதுதான் வாழ்க்கையில் உன்னை சிங்கமாக மாற்றப் போகிறது.
மனம் உடைந்து பேசும் வார்த்தைகள் அணையை உடைத்து வரும் நீரைப் போலத்தான் அழிவைத் தரும்
நீ விழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை, எழுந்து வர வேண்டும் என்ற எண்ணம் உன்னில் இருக்க வேண்டும்
தோல்வியின் பின்னால் தான் வெற்றி ஒளிந்து கொண்டிருக்கிறது.
வேண்டாம் என்று முடிவெடுத்த பின் தூக்கி தான் எறிய வேண்டும் எதையும், அருகில் வைத்துக் கொண்டு அவஸ்தை படக்கூடாது
வாழ்க்கை என்னும் ஒரு வார்த்தை லட்சக்கணக்கான வார்த்தைகளுக்கு அர்த்தத்தை கற்ப்பிக்கிறது.
உன்னால் முடியாது என்று சொல்பவர்களின் மனதில் அவர்களால் அது முடியாது என்ற எண்ணமே நிறைந்திருக்கும்
வலிகளை அனுபவித்த பின்பு தான் வாழ்க்கைக்கு சரியான வழிகளை தேர்ந்தெடுக்க முடிகிறது .
வாழ்க்கை இப்படியே இருந்தால் நல்லா இருக்கும்! என்று சிலரும் இப்படியே வாழ்க்கை போய்விடுமா? என்றும் சிலர் நினைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்
போட்டி போட்டும் வாழ வேண்டாம்,போராடியும் வாழ வேண்டாம் ஒற்றை வாழ்க்கையை போற்றி மனநிறைவோடு வாழுவோம்
அன்பை தேடி அலையாதே!அன்பை கொடுத்து பழகு,தானாக அன்பு தேடி வரும்
முகமூடி போட்ட மனிதர்களாகவே வாழ்கிறோம் அதை கழட்டும் வரை நாம் எல்லோரும் நல்லவர்களே!
சிந்தித்து வாழும் உங்கள் வாழ்க்கையில் சிரிக்க மறந்து விடாதீர்கள்
அவ்வளவு தான் வாழ்க்கை என்று பயந்து வாழாதீர்கள்! இன்னும் எவ்வளவோ? இருக்கிறது என்று துணிந்து வாழுங்கள்
நேரத்திற்கு தகுந்தவாறு பேசுபவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்காதீர்கள்
நேர்மை அற்றவர்களிடம் இருக்கும் செல்வம் நிலைக்காது…
வாழ்க்கை இருட்டாக இருக்கிறது என்று பயப்படாதே… உன்னை சூரியனாய் மாற்று! வாழ்க்கை வெளிச்சமாகும்
நீ தேடி அலையும் வாழ்க்கை உன்னையும் தேடி அலையும், சந்திக்க சற்று தாமதம் ஆகலாம்.
எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் நாம் வாழ்வதே வீண்
மனசாட்சிக்கு உண்மையாக இருக்கும் ஒருவனுக்கு மற்றவர்களின் உபதேசம் தேவைப்படுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இமயம் உங்கள் காலடியில்
காணமல் போனவர்களை தேடு; கண்டும் காணாமல் போனவர்களை அல்ல
உன்னை குப்பை என்று வீசியவர்கள் முன்னால் நீ கோபுரம் என்று உயர்ந்து காட்டு
தூக்கி வீசியவர்களை இதயத்தில் தூக்கி சுமக்காதீர் கள்
இது சரியா என்று கேட்கும் வரை யாரும் தவறுகளை உணருவதில்லை
தப்பு செய்துவிட்டோம் என்று பயப்புடவதை விட திருத்திக் கொளாவோம் என்று மாற்றுவதே சிறந்தது
தவறு செய்வது தவறானது அல்ல;செய்த தவறை திருத்தி கொள்ளாதது தான் தவறு
எண்ணிக்கை வாழ்க்கையை முடிவு செய்வது இல்லை எண்ணங்கள் தான் முடிவு செய்யும்
தெளிவான சிந்தனையே விரைவான வெற்றிக்கு அடித்தளம்
என் மேல் நம்பிக்கை இல்லையா என்று மற்றவர்களை பார்த்து கேட்கும் முன் உங்களை பார்த்து கேளுங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்
நாம் செய்த தவறு தெரிந்து விடுமோ என்று பயப்புடுபவர்கள் தவறு செய்வதற்கு பயப்புடுவதில்லை
உலகின் மிக உயர்ந்த ஆயுதம் நம்பிக்கை
துரோகத்தால் வீழ்ந்தவர்கள் வேண்டுமானால் வரலாற்றில் இருக்கலாம் ஆனால் துரோகத்தால் வாழ்ந்தவர்கள் இல்லை
புரிந்து கொள்ளாதவர்களால் ஒரு பிரச்சனை தான் ஆனால் தவறாக புரிந்து கொண்டவர்களால் பல பிரச்சனை
ரொம்ப நாள் கழித்து தான் புரிந்தது,நல்லா இருக்கனும் னு நான் சேர்த்து வைத்த எதுவும் நிம்மதியா வாழ்றதுக்கு உதவாது என்று
வேண்டும் என்று நினைத்தால் ஆயிரம் வழிகள் கிடைக்கும் வேண்டாம் என்று நினைத்து விட்டால் ஆயிரம் காரணங்கள் கிடைக்கும்
ஏமாந்தவர்கள் கூட நன்றாக இருப்பார்கள் ஆனால் ஏமாற்றியவர்கள் ஒருநாளும் நன்றாக இருக்க முடியாது
என்ன நடந்தாலும் உன்னை நம்பி வந்தவரை உள்ளம் நோகச் செய்யாதே
கடினமான சூழ்நிலைகளை கடக்க சில எளிய தீர்வுகளே உதவும்
மனம் வைத்தால் மாற்றம் உண்டு
தீ காயத்தை விட அதிக எரிச்சலை கொடுக்கும் பக்கத்து வீட்டுக்காரனின் புதிய கார்
யாருக்காவும் உன்னை மாற்றிக்கொள்ள விருப்பம் இல்லாத போது உனக்காக மாற வேண்டும் யாரிடமும் எதிர்பார்க்காதே…
நீ நம்பியவர் எல்லாம் கை விடும் பொழுதும் உன் நம்பிக்கையை மட்டும் கைவிடாதே…
எதையோ எதிர்பார்த்து நாம் செய்யும் உதவி நமக்கு ஏமாற்றத்தையே தரும்
உனக்கு பிடிக்குமா என்று யோசி மற்றவர்களுக்கு பிடிக்குமா என்று யோசிக்காதே!
உன்னை நேசிப்பவர் இடத்தில் அன்பாய் இருப்பதை காட்டிலும் நேர்மையாய் இரு
தோல்வி பயத்தையும் பாடத்தையும் சேர்த்து கொடுக்கும் பயத்தை எடுத்துக் கொண்டவர்கள் பாதியில் போகிறார்கள் பாடத்தை கற்றுக் கொண்டவர்கள் வெற்றியை அடைகிறார்கள்
வாழ்க்கை உனக்கு பிடிக்காததை உனக்கு வழங்குகிறதா?அதை கெட்டியாக பிடித்துக் கொள், உனக்கு பிடித்தது அதன் பின்னால் கிடைக்கும்
வலிகளை தந்து வாழ்க்கை சிரிக்கிறது உனக்கான வழிகள் இதில் தான் இருக்கிறது என்று
தேடுவது எல்லாம் கிடைத்து விட்டால் தேடுவதையே நாம் விட்டு விடுவோம்
தேவையான இடத்தில் பேசிவது நல்லது.மற்ற இடங்களில் மௌனமே சிறந்தது
போதும் என்ற மனமிருந்தால் ஓடவேண்டும் என்ற தேவை இல்லை
உழைக்கும் வயதில் உட்கார்ந்திருந்தால் உட்காரும் வயதில் உழைக்க வேண்டி வரும்
நோயற்ற வாழ்க்கையே அமைதியான வாழ்க்கை
ஆபத்துக்கு உதவியவர்களை ஆயுள் உள்ள வரை நினை
சிரிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி வாழ்க்கைக்கு தேவையானது தான் ஆனால் அழும்போது கிடைக்கும் புரிதல் அவசியமானது
தேவைக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் நம் பிள்ளைகளை நாமே சோம்பேறி ஆக்கி விடுவோம்
குறை சொல்பவர்களுக்கு தெரிவதில்லை அவர்களிடத்திலும் குறை இருக்கும் என்று
கவலைகளை மறந்து காலம் சொல்லும் வழியில் உங்கள் கனவுகளை காணுங்கள்
உங்களுடைய எண்ணங்கள் தான் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் அழகாக்கும்
திறமையை விட உங்கள் குணமே உங்களுக்கு வெற்றியை தரும்
புகழுக்கு பின்னால் செல்லாதீர்கள் உங்கள் கடமையை சரியாக செய்யுங்கள் புகழ் உங்களை தேடி வரும்
நாளை நாளை என்று இன்றைய நாளை இழக்காதீர்கள்
நீ விதைப்பது எதுவோ அதையே பெறுவாய்
முட்டி முளைக்கும் விதை போல் முயற்சியை கை விடாதீர்கள் முடிக்கும் வரை
தேர்வில் வெற்றியோ தோல்வியோ தேர்வு எழுதினால் தான் கிடைக்கும்,பரிட்சைக்கே பயந்தால் எதுவும் கிடைக்காது
மனிதனுக்கு புரிய வைப்பதை விடவும் புரிந்து கொள்வதே கடினம்
விமர்சனம் செய்வதால் எதுவும் கிடைக்கப் போவதில்லை விதியின் வழியில்
தோல்விகளை படிகளாக்கி வெற்றி எனும் கோபுரத்தை அடைந்து விடுங்கள்
வாழ்க்கை போடும் கணக்கை எந்த கணக்கு வாத்தியாராலும் தீர்க்க முடியாது.
ஜெயித்தவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு இடம் கொடுக்கிறது.விமர்சித்தவனுக்கும் வேடிக்கை பார்த்தவனுக்கும் எதிலும் இடமில்லை
நம்பியவர்கள் கைவிட்டாலும் உன் தன்னம்பிக்கை கைவிடாது
கனவு மட்டுமே கண்டால் எதுவும் செய்ய முடியாது.கண்களை திறந்து காரியத்தையும் செய்ய வேண்டும்
முரடனாக இருக்கலாம் ஆனால் திருடனாக தான் இருக்க கூடாது
மனிதனின் சுயநலமே இந்த உலகத்தின் பேராபத்து
பிரட்சனையை பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தால் உங்கள் மகிழ்ச்சி தூரத்தில் தான் இருக்கும்
உங்கள் கண்ணீரை துடைக்கும் கைகளை உள்ளத்தில் வாங்குங்கள்
உரிமையாய் பழக ஓர் உறவையாவது வைத்துக்கொள்ளுங்கள்
உறவுகளை உப்பை போல் பயன்படுத்துங்கள் தேவைக்கு அதிகமானால் கெட்டுப்போகும்
ஆடம்பரமான வாழ்க்கை பார்க்க அழகாக இருக்கலாம் ஆனால் அதில் அன்பு நிறைந்திருக்குமா? என்பது கேள்விக்குறி
ஒருவருக்கு பிடிக்க வேண்டும் என்றால் அழகாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்ல
தவறு செய்து வசதியாக வாழ்வதை விட,சரியான வழியில் சராசரியான வாழ்க்கையே போதுமானது.
பேராசையே அனைத்து பேரழிவுக்கும் காரணம்
வாழ்ந்து கெட்டவர்களின் வார்த்தைகள் வலிகள் மிகுந்தவை
பஞ்சு மெத்தையை போல் வாழ்க்கை பதுசாக இருக்க ஆசை இல்லை…பாறங்கல்லை போல் பாரமாக இல்லாமல் இருந்தால் போதும்.
காற்றோடு பட்டம் போல வாழ்க்கை போகும் வழியில் மனதை செலுத்துங்கள்
மரணத்தை கண்டு கூட பயம் இல்லை சில ஆறாத ரணங்களை கண்ட பின்
கல்லை செதுக்க உளியால் தான் முடியும் அதுபோல் உங்களை செதுக்க வலியால் தான் முடியும்
கல்லில் தெய்வம் இருப்பதை கண்டறியும் உளியை போல உனக்கான வழியை கண்டறிய சில வலிகள் தான் உதவும்
கடவுளின் அருளினால் ஆகாதது கூட உன் கடுமையான முயற்சியினால் உன் கைகளுக்கு கிடைக்கும்.
விடா முயற்சியே உன் வெற்றிக்கு முதல் படி
வாய்ப்புகளை பயன்படுத்துபவன் அதிர்ஷ்டசாலி வாய்ப்புகளை உருவாக்குபவன் புத்திசாலி
வாய்ப்புகளுக்கா உட்காராமல் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்;அது உங்களை உருவாக்கும்
புதைந்த பொருளை தோண்டினால் தான் கிடைக்கும் அதுபோலத்தான் உன்னுள் புதைந்திருக்கும் திறமையை தேடினால் தான் கிடைக்கும்
குறுக்குவழி என்பது ஒருவழி பாதை போல போகலாமே தவிர திரும்ப வரமுடியாது.
நேர்மையை கடைபிடிக்க கஷ்டமாக இருக்கலாம் ஆனால் அதுதான் நிரந்தரம்.
உனக்கான ஒன்று உன்னை விட்டு எங்கும் போகாது.
தொலைந்தால் தேடலாம் ஆனால் தேடியதை தொலைக்க கூடாது.
செய்யும் தொழிலை தெய்வமாக பார்த்தால் படும் கஷ்டம் எல்லாம் பஞ்சாக பரந்து போகும்.
இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டு எனக்கு எல்லாத்தையும் தாங்கிக் கொள்ளும் இதயத்தை கொடு என்று கேளுங்கள்
கெட்டதை தொட்டவனும் கெட்டான் நல்லதை விட்டவனும் கெட்டான்
தோல்வி வந்தால் முயற்சி செய்யுங்கள் வெற்றி வந்தால் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்
கண்டிப்பா இருப்பதை விடவும் சரியாக இருங்கள்
வெற்றியோ தோல்வியோ விளையாடி பாருங்கள்
வாழ்க்கையில் தவறான மனிதர்கள் தான் நமக்கு சரியானது எது காட்டுகிறார்கள்
அறிவால் உயர்ந்தவர்களை விட அலட்சியத்தால் அழிந்தவர்களே அதிகம்
உனக்கு உண்மையாய் இரு, சுற்றி இருப்பவர்களுக்காக அல்ல
வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள் தான் நிலையான வாழ்க்கைக்கு ஆதாரமாகிறது.
தோற்றத்தை பார்த்து எந்த முடிவையும் எடுக்காதே வெளியில் கரடு முரடான இருக்கும் பலாப்பழம் சாப்பிட இனிப்பாக தான் இருக்கும்.
சிலர் நியாபகமாய் சிலர் அனுபவமாய் கடந்து போகிறார்கள் வாழ்க்கையில்
கொடுத்தால் தான் கற்றுக்கொள்ள முடியும் அன்பை மட்டும்
இடைவெளியில் இனிக்கும் தேநீர் போல சிலரின் நினைவுகள் இனிக்கத் தான் செய்கின்றன.
இதயத்தை லேசாக வைத்துக் கொள்ளுங்கள் காற்றடைத்த பலூனைப் போல் வானில் பறந்து செல்லலாம்
செவிக்கு முதலில் வேலை கொடுங்கள் பின்பு உங்கள் வாய்க்கு வேலை கொடுங்கள்
வாசலில் தோரணம் அழங்கரிப்பதை போல் உங்கள் முகத்தை புன்னகை அலங்கரிக்கட்டும்
நன்றாக இருக்கிறேன் என்று சொல்லுங்கள் நீங்கள் நிச்சயம் நன்றாக இருப்பீர்கள்
தொல்லைகளை நினைத்து தொலைந்து போகதீர்கள் தொடுவானம் தான் எல்லை என நினைத்து பறந்து போங்கள்
யார் இதயத்திலும் இடம்பிடிக்க ஆசை கொள்ளாதீர்கள் அது சிறைவாசமாக கூட ஆகலாம்
மலர்களின் நாசமாய் உங்களின் சிந்தனை அழகாகட்டும்
முயற்சி செய்யும் போது தோற்று விட்டால் என்ன செய்வது என்று யோசிக்காதீர்கள் ஜெயித்து விடுவோம் என்று நம்புங்கள்
காலம் வழி கொடுக்கும் என்று காத்திருக்காதீர்கள் காலம் வயதை மட்டுமே கூட்டும்
நீரை போல் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்ளுங்கள் வாழ்க்கை சுமூகமாக போகும்
கனவுகளுக்காக உங்கள் கடமைகளை கை கழுவாதீர்கள்…
காதலியிடமும் கடவுளிடமும் கருணையை எதிர்பார்க்காதீர்கள்
வாழ்க்கையும் ஒரு கண்ணா மூச்சு ஆட்டம் தான்,எல்லாவற்றையும் நீங்கள் தான் தேட வேண்டும்
மூச்சோடு உங்கள் முயற்சியும் தொடரட்டும் நினைத்தது கிடைக்கும் வரை
தொடர்ச்சியான பயிற்சியே யாரும் தொட முடியாத வெற்றியை பரிசாய் தரும்
மலை மேல் ஏற வேண்டும் என்றால் கல்லிலும் முற்றிலும் கால் வைத்து தான் ஆக வேண்டும்
கடவுளிடம் பிச்சை கேட்பதை விட கடுமையான உழைப்பே நீங்கள் வேண்டியதை பெற்றுத்தரும்.
மனிதனின் பேராசை தான் மனிதரின் அழிவிற்கு காரணம்
காற்றோடு கலந்த நம் மூச்சை பிரிக்க முடியாது அதுபோல் தான் பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது
மரணம் ஒருமுறை தான் ஆனால் தினம் தினம் ஆயிரம் முறை இறக்கிறார்கள் மனம் ரணமாகி போனதால்.
நினைவுகளினால் கொல்லப்படுவதை போல ஒரு மரணத்தை அதீத அன்பால் மட்டுமே தர முடியும்.
பேருந்து பயணம் போல் வாழ்க்கையும் நாம் இறங்க வேண்டிய நேரம் வரும் வரை மட்டுமே ஓட்டம்
காலாண்டரில் தேதியை கிழிப்பது போல சில நினைவுகளையும் கிழித்தெரியுங்கள்
கல்நெஞ்சக் காரர்களையும் கலங்க வைப்பதே வாழ்க்கையின் லட்சியம்.
நல்லதை மட்டும் நினைத்து பார் எதிர்காலத்தில் நினைத்து பார்க்க நல்ல விஷயங்கள் நிறையும்
சுமை என நினைத்த பின் வேண்டியதோ வேண்டாததோ எல்லாம் வீண் தான்
ஈசியானது என்று எதுவுமில்லை ஆனால் முடிக்க முடியாதது என்று எதுவுமில்லை
நேர்மையும் நேசமும் வாழ்வில் நிறைந்திருந்தால் வாழ்க்கை அழகாக இருக்கும்
பணத்திற்காக வரும் ஆயிரம் பேரை விட பாசத்திற்காக வரும் பத்து பேர் போதும்
உன் தவறுகளை திருத்தி விட்டு மற்றவர்களுடைய தவறை சுட்டிகாட்டு
சூரியனிடம் கடன் வாங்கி தான் நிலவு கூட வெளிச்சத்தை தருகிறது
வானவில் கொஞ்ச நேரம் தான் இருக்கும் அது போலத்தான் சிலரின் வருகைகளும்
உனக்காக யாரும் வாழ வேண்டாம் உன்னால் வாழ்ந்தால் போதும்
மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கட்டும்
இறைவன் கொடுக்கும் வழியில் இதயத்தை செலுத்துங்கள்
பொறுப்புகளை இல்லாத வாழ்க்கை நிறைவடையாது சொர்க்கத்தில்
பொறுப்புகளே உன்னை ஒழுங்கு படுத்தும்
தேவையற்ற சிந்தனைகளை தேதிகளை போல் கிழித்து விடுங்கள்
இறங்கும் நேரத்தில் கிடைத்த இருக்கை போல் தான் வாழ்க்கையும்
ஒரு காலத்தில் எப்படி இருந்தோம்; ஒரு காலத்தில் எப்படி இருப்போம் இது தான் வாழ்க்கை
நோய் இல்லாத வாழ்க்கையே குறைவில்லாத செல்வம்
அழகான இடங்களுக்கு சில கடினமான பாதைகள் தான் வழியாகும்
அடிக்கடி நினைப்பது தான் அதிகமாகும் அது இன்பமோ துன்பமோ
வளைந்து கொடுக்கலாம் அதற்காக ஒடிந்து விட கூடாது.
மறதி இருந்தால் தான் மகிழ்ச்சி தங்கும் இதயத்தில்
குப்பை தேக்கி வைக்க இதயம் ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல
சரியான வழியை கண்டுபிடித்தால் வாழ்க்கை சுலபமாக போகும்
நினைவுச் சிறைகள் ஆபத்தானவை
கன்னி வெடிகளை காட்டிலும் கன்னியரின் கண்ணீர் சக்தி வாய்ந்தது
வாழ்க்கை எனும் வட்டத்தில் மேலும் கீழும் நிரந்தரமில்லை
மனதில் நிம்மதி இல்லை என்றால் நீ சேர்த்த சொத்துக்கள் வீண்
உலகத்தில் விலை உயர்ந்தது முன்பின் தெரியாத நபர்களிடம் காட்டும் அன்பும் கருணையும்
இறைவனின் குடும்பமே இரண்டானது ஒரு மாம்பழத்தால் தான்
கொண்டாடப்படும் பொய்களை விட பயன்படுத்தப்படாத உண்மைகள் உயர்ந்தவை
இடத்திற்கு ஏற்றவாறு தன் நறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மனிதர்களுக்கு பெயர் எதுவும் இல்லை
உண்மை எப்பொழுதும் ஒன்றுதான் பொய் மட்டும் தான் குட்டி போடும்
வீண் முயற்சி ஆவதும் விடாமுயற்சி ஆவதும் உன் பயிற்சியிலேயே உள்ளது
தூரப் பயணங்களின் போது தூக்கி எறியப்படும் வாட்டர் பாட்டில்களை போலத்தான் சிலரது வாழ்க்கையும்
நிகழ்காலத்தின் வெளிப்பாடுகளே எதிர்காலம்
நிகழ்காலம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் எதிர்காலம் குறித்த பயத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்
மனதை நிலையாக வைத்துக் கொண்டால் தேவையற்ற கவலைகள் எழுவதில்லை
பேராசைகள் நிராசையாகும் போது நிச்சயம் வலிக்கத்தான் செய்யும்.
உரிமையுள்ள இடத்தில் தான் உணர்ச்சிகள் வெளிப்படும்
தேங்கி நின்றால் அழுக்காகிவிடும் நீரும் வாழ்க்கையும்
மனசுல வச்சிக்காம பேசுறது நல்லது தான் ஆனா மனசே இல்லாம பேசுறது தான் நல்லது இல்ல.
அன்பை வெல்ல ஒரு ஆயுதம் இன்னும் உருவாக்கப்படவில்லை
தோல்வி இல்லாத வாழ்க்கை முன்னேற்றம் இல்லாத மனதையே குறிக்கிறது.
முன்னேறுவதற்கு உன் முயற்சி மட்டுமே போதும்
வாய்ப்புகளை பயன்படுத்துபவன் வெற்றியாளன் ஆகிறான் வாய்ப்புகளை உருவாக்குபவன் சாதனையாளர் ஆகிறான்
விளக்கங்களோடு இருந்தாலும் புத்தகங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை அது போல தான் சிலரது வாழ்க்கையும்
காதுகளை கூர்மையாக்கி வாயையை அடக்குங்கள் வாழ்க்கைக்கு உதவும்
சில்லறைகள் என்றால் சத்தம் போடத்தான் செய்யும் அதுபோலத்தான் சில மனிதர்களும்
மாற்றத்தை உன்னிடம் இருந்து தொடங்கு
முட்டாள்கள் இருப்பதால் தான் அறிவாளிகளுக்கே மதிப்பு இங்கே
நீ முட்டாள் என்று உன்னை அறிவாளியாக காட்டாதே
மனம் நோகமால் மனதில் நினைத்தது கிடைக்காது.
உழைத்து முன்னேற நினைப்பவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே
தேவையற்ற நினைவுகளால் உங்களுக்கு நீங்களே சுமையாகி போவீர்கள்
காலம் கடந்தால் காயங்கள் தானாக ஆறும்
தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள் அப்பொழுது தான் அதை திருத்திக் கொள்ள முடியும்
ஏமாற்றறத்தையே வாழ்வில் கண்டதில்லை என்றால் நீங்கள் இன்னும் உண்மையாக யாரிடமும் பழகவில்லை என்று அர்த்தமாகும்
உண்மை எப்பொழுதும் கடைசியாக தான் நிற்கும் ஆனால் கடைசி வரை நிற்கும்
உன்னுடைய பாதையை நீயே தேர்ந்தெடு.
அடுத்தவனை நம்பி அகலக்கால் வைக்காதே
எடுத்தவுடன் மேல வர இறைவனாலும் முடியாது.
இல்லாதவருக்கு கொடுக்கும் பொழுது எல்லாம் வல்ல இறைவனும் நீயும் ஒன்றாகி போவாய் அவனுக்கு
நீ கடவுளாக மாறாலாம் இல்லாதவனுக்கு இயன்றதை செய்தால்
நாம் எல்லோரும் என்று நினைப்பது அன்பு ;நாம தான் என்று நினைப்பது ஆணவம்
வறுமையை விட சிறந்த ஆசான் யாருமில்லை
பெற்றது எல்லாம் பாதியில் போய்விடும் கற்றது மட்டுமே கடைசி வரை நிற்கும்
காற்றில் கலந்த வார்த்தைகளை கடைசி வரை நினைவில் வைத்துக் கொள்ளாதீர்கள்
கொடுப்பதற்கு எதுவும் இல்லையே என்று நினைக்காதீர்கள் அன்பாய் பேசுங்கள் அதுவே மிகப்பெரிய உதவியாககும்
மரணத்தை விடவும் கொடியது பிடித்தவரின் மரணம்
தேவை வந்தால் வேப்பிலையும் இனிக்கும் வேலை முடிந்தால் வெல்லமும் கசக்கும்
சாகும் அளவிற்கு தைரியம் வாழ்வதற்கு நிச்சயம் தேவையில்லை.வாழவேண்டும் என்ற எண்ணமே போதும்
நிம்மதியான வாழ்க்கைக்கு நியாபக மறதியே சிறந்த துணை
காரணம் சொல்லிக் கொண்டே இருப்பவர்களால் காரியம் சாதிக்க முடியாது.
கற்றுக்கொள்ள ஆயிரம் உண்டு காலத்திடம்
காயங்கள் ஆற்றிடும் வித்தையை காலத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
இறுதிக் காலத்திலும் இதயத்தை விட்டு போவதில்லை சில வார்த்தைகள்
ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டே இருந்தால் நிம்மதி இருக்காது.
சில்லறையின் அருமை பேருந்தில் தெரியும்
வாழ்க்கையை புரிந்து கொள்ளவில்லை என்றால் புதையலே கிடைத்தாலும் பிரயோஜனம் இல்லை
இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம் என்று இறுதிக்காலத்தில் எண்ணி விட கூடாது அப்படி வாழ்ந்து விடுங்கள்
மகிழ்ச்சியாய் வாழ பணத்தை விட பெரிய மனசு தான் தேவை.
கையேந்தி கிடைப்பது காசானாலும் காதலானாலும் பயனற்றது.
தோண்டினால் தான் புதையல் கூட கிடைக்கும்
கடினமான பாதைகள் தான் கனவுகளை அடைவதற்காக வழிகளை கொடுக்கும்
பஞ்சு மெத்தையில் படுத்திருந்தால் மட்டும் கனவுகள் நிறைவேறாது
அன்பை பொருளால் அல்ல வார்த்தைகளால் வெளிப்படுத்தினால் கூட பெரியது தான்
உன்னை மதித்தால் உரிமை எடு;மிதித்தால் உறவை விடு
கண்ணால் காண்பது பொய்யாகலாம் ஆனால் மனதில் உணர்வது என்றுமே உண்மையே
காத்திருந்தால் காதல் வேண்டுமானால் மலரலாம் ஆனால் வெற்றி மலராது
பெற்றவருக்கு பெருமை அவரின் அப்பாவா/அம்மாவா நீங்கள் என்பது தான்
மனதில் தோன்றுவதை பேசுவதில் தவறில்லை ஆனால் புதைந்து போன ஒன்றை தோண்டி பேசுவது தான் தவறு
மனமிருந்தால் பழகு இல்லையா?விலகு
நமக்கு நடக்கும் வரை நடப்பதெல்லாம் செய்தி தான்
யாரோ ஒருவர் செய்து முடிக்கும் வரை செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வருவதில்லை
இருப்பதை நினைத்து கர்வம் கொள்ளாதே காணாமல் போக ஒரு நொடி ஆகாது.
நல்லது நடக்கும் என்று நம்பிக்கையில் இருங்கள் யாரையும் நம்பி இருக்காதீர்கள்
முடிவு எடுக்கும் முன் மூன்று காலங்களையும் யோசித்து எடுங்கள்
நம்பிக்கையற்ற நிலையில் விதியின் வழியில் பயணித்து போங்கள்
ஊனம் உடலில் இருக்கலாம் மனதில் இருக்க கூடாது
அறிவாளியை விட முட்டாள் ஆபத்தானவன்
தன் சோம்பேறி தனத்திற்கு மனிதன் வைத்த பெயர் தான் நேரம் சரியில்லை
நாம் சாப்பிடும் கசப்பான மருந்துகள் நமக்கு நன்மையையே தரும் அதுபோல் தான் நமக்கு நடக்கும் அவமானங்களும்
தெளிவு இல்லாத முடிவில் எப்போதும் முன்னேற்றத்தை காண முடியாது.
ஒரு நாள் நிச்சயம் எல்லாம் சரியாகும் ஒரே நாளில் சரியாகாது
கொடுப்பதால் எதுவும் குறைந்து விடாது
பிடித்ததை எப்பொழுதும் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள்
அழகாய் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் இருப்பதை அழகாய் பார்த்து கொள்ளுங்கள்
சிரித்தால் மகிழ்ச்சி உள்ளது என்று அர்த்தமில்லை.
பொறுமையும் நல்ல பண்பு தான்
எளிதில் நாம் இழந்து விட முடியும் ஆனால் எளிதில் சம்பாதிக்க முடியாது
தெளிவான சிந்தனை விரைவான வெற்றிக்கு வழி வகுக்கும்
காதலை விடவும் மனிதாபிமானம் பெரியது.
தூக்கி சுமந்த உறவுகளை தூக்கி எறியாதீர்கள்
வெற்றி மட்டும் மகிழ்ச்சியை கொடுப்பதில்லை
தோல்வியின் வலியை உணராமல் போனால் வெற்றியின் களிப்பை அனுபவிக்க முடியாது.
உண்மையோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் பொய் பாதியிலேயே போய் விடும்
உண்மை கடலை போல நிலையானது. பொய் ஆற்று நீரை போல நிலையற்றது
கடலில் முத்தெடுக்க மூச்சு பயிற்சி தேவை வாழ்க்கையில் ஜெயிக்க முயற்சி என்பதே மூச்சாய் தேவை
எல்லாவற்றையும் கடந்தும் சிலவற்றை மறந்தும் வாழ பழகிக்கொள்ளுங்கள்
ஏளனமாய் பார்ப்பவர்கள் எல்லாம் ஒருநாள் எப்படி என்று விருந்தும் பார்ப்பார்கள்
துன்பங்கள் வாழ்வில் இல்லை என்றால் தூக்கமும் வாழ்க்கையும் ஒன்றாக தெரியும்
நேசிக்காத வரை நெஞ்சிற்கு எந்த தண்டனைகளும் கிடைப்பதில்லை
சிரித்து வாழுங்கள் ஊர் சிரிக்க வாழ்ந்திடாதீர்கள்
வாழ்க்கையை ஓர் அனுபவமாய் பாருங்கள் தவறுகள் பெரிதாய் தெரியாது.
செய்த தவறுகளை திருத்திக் கொள்ள எல்லோருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை
எதை எப்போது வாழ்க்கை நம்மிடம் இருந்து பிடிங்கிக் கொள்ளும் என்று நமக்கு தெரியாது.இருக்கும் பொழுதே அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்
காலத்தின் கண்ணோட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றே
வெற்றி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தோல்வியின் படிப்பினையும் முக்கியம்
ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டால் அவதி பட்டுத்தான் ஆக வேண்டும்
அதீத ஆசை என்றுமே அவதியை தான் தரும்
மற்றவர்கள் நலனுக்காக யோசி உன்னுடைய நலனை இறைவன் பார்த்துக்கொள்வான்.
இறைவனின் பார்வையில் இருப்பவன் இல்லாதவன் என்ற பேதம் இல்லை
உன்னுடைய மதிப்பை உன்னுடைய நடத்தையே முடிவு செய்கிறது.
பெற்றவர்களின் கண்ணில் நீர் வழிந்தால் உன் வாழ்க்கை தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
உனக்காக கடைசி வரை இருப்பது உன்னை பெற்றவர்கள் மட்டுமே மறந்துவிடாதே
மற்றவர்களின் பார்வைக்காக வாழாதே உன்னுடைய பாதையில் வாழ்ந்து விடு
அறம் செய்தால் அகிலமே உன்னுடைய சொந்தம் ஆகும்
நல்ல நண்பர்களே உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பார்கள்
தோல்வியில் உடன் இருக்கும் உறவுகளை இறக்கும் வரை இதயத்தை விட்டு இறக்காதீர்கள்
உண்மை யாருக்கும் அஞ்சாது; நேர்மை யாருக்கும் அடங்காது
2 thoughts on “வாழ்க்கை தத்துவங்கள் – Life Quotes in Tamil”