காதலிக்காத மனிதர்களை இந்த உலகத்தில் எட்டாவது அதிசயமாக நாம் சேர்த்து விடலாம். ஏனென்றால் காதலிக்காத மனிதர்கள் என்று யாருமே இல்லை இந்த உலகில்… பள்ளி வயது முதல் கல்லூரி வயது வரை ஏதேனும் ஒரு காதல் இதயத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது நாம் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்தப் பதிவு காதலிப்பவர்களுக்காகவே சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. தமிழ் காதல் கவிதைகள் எனும் தலைப்பில் கீழே பதிவிடப்பட்டுள்ள ஒவ்வொரு கவிதைகளையும் வாசித்து நேசித்து நீங்கள் நேசிக்கும் நபர்களிடம் பரிமாறிக் கொண்டு உங்களுடைய அன்பை ஒரு அழகான பயணமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
கண்களை நனைக்கும் காதலுக்கு தெரிவதில்லை இரவும் பகலும் 🥹
உன் அருகில் வாழ்ந்தால் மட்டும் சுகமல்ல; உன் நினைவில் வாழ்ந்தாலும் சுகம் தான்
நாம் விரும்புபவர்கள் நம்மையும் விரும்பினால் அது பேரின்பம் தான்
என் கனவுகள் முழுவதும் நிரம்பி வழிவது உன் நினைவுகள் மட்டுமே
ஒட்டுமொத்த பூமிக்கும் ஒற்றை நிலவு இரவை அலங்கரிப்பதை போல், என் இரவை அலங்கரிக்கும் நிலவு நீயே
என்னுடன் நீ இருந்தால் நிமிடங்கள் நீளமாகும்… வாழ்க்கை வசந்தமாகும்
உயிராக உன்னை நேசிப்பதால், உரிமையாய் நடப்பதை காட்டிலும் உண்மையாய் இருப்பதை விரும்புகிறேன்
உன்னை நேசிப்பதால் உலகமே புதியதாக தெரிகிறது….
அழகை மட்டும் ரசிக்க ஆயிரம் பேர் கிடைக்கலாம் காதலை உணர உன்னால் மட்டுமே முடிகிறது…..
உன் நினைவுகள் தரும் போதையில் என் நினைவு இழந்து போகிறேன்….
தென்றலும் மின்னலும் கைகோர்த்து நடந்தால் உன்னை போலத்தான் இருக்குமோ?
உன்னை பார்க்காத நாள் வேண்டுமானால் என் வாழ்க்கையில் இருக்கலாம் ஆனால் உன்னை நினைக்காத நாள் என் வாழ்க்கையில் இல்லை…
Love Quotes in tamil text || Heart melting Love Quotes In Tamil || feeling kadhal kavithai
காதலித்து பார் இரவின் நீளம் புரியும் என்றார் வைகறை கவிஞன் வைரமுத்து அவர்கள். காதல் எப்பொழுதும் சிறப்பு தான் ஏனென்றால் காதல் மட்டும் தான் இந்த உலகை நகர்த்திச் செல்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் கொள்வது மட்டுமல்ல காதல். இங்கே ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் அன்பே பிரதானமான காதலாகிறது. அந்த காதலே ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
காதல் கவிதைகளை தேடி அலையும் அனைவருக்கும் இந்த பதிவு அவசியம் தேவைப்படும் ஒன்றாகும் .
எதையதையோ தேடி அலைந்தேன் வாழ்க்கைக்கு உதவும் என்று,நீ வந்த பிறகு புரிந்து கொண்டேன் இனி என் வாழ்க்கையே நீதான் என்று
கடவுளிடம் வேண்டினேன் நல்ல வாழ்க்கை வேண்டும் என்று, உன்னை அனுப்பி சொன்னார் கடவுள்! துணை நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று.
உன் அன்பிற்கு முன்னால் என் அடங்காத கோபமும் அமைதியாகி போகிறது
நீ என்னை பிரிந்தால் பிரிந்து போவது என் உயிரும் தான்
யோசித்து பார்த்தேன் என் சின்ன இதயத்தில் உன் மீது இவ்வளவு பெரிய காதல் எப்படி வந்தது என்று?
இவ்வளவு நாள் வாழ வேண்டும் என்று ஆசை இல்லை ஆனால் ஒவ்வொரு நாளும் உன்னோடு வாழ வேண்டும் என்ற ஆசை மட்டுமே உள்ளது.
உனக்காக எதையும் இழக்க தயாராக இருக்கும் என் இதயம்;என்ன நடந்தாலும் உன்னை இழக்க தயாராக இல்லை.
காதலில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எந்த நிலையிலும் கைவிட்டுவிடாமல் வாழ்வதும் முக்கியமாகும்.
உன் காதல் என்னிடம் இருந்தால் காற்றில்லா பூமியிலும் நான் உயிர் வாழ்வேன்
கவலைகள் ஆயிரம் இருந்தாலும் கடவுளை பார்க்கும் போதெல்லாம் உனக்காக மட்டுமே வேண்டுகிறது உள்ளம்.
காரணமே இல்லாமல் பிடித்து போனது என் காதல் தேவதை உன்னை மட்டும் தான்
மனதை கவரும் காதல் கவிதைகள் || True love quotes in tamil || kadhal kavithaigal in tamil
காதல் எங்கே எப்போது மலரும் என்று யாருக்கும் தெரிவதில்லை சிறிய அன்பில் தொடங்கி பெரிய காதலாய் முடிகிறது நண்பர்கள் எனும் போர்வையில் ஆரம்பித்து காதலர்கள் எனும் பார்வையில் முடிகிறது இன்றைய காதல்.
அப்படிப்பட்ட காதலர்களுக்கு கவிதைகளை பரிசளிப்பதே இந்த பதிவின் நோக்கமாகும்.
உன்னில் தொலைந்தேன் என்று உலகம் சொல்லும் வரை உணரவில்லை நான்….
இன்பத்திலும் துன்பத்திலும் உன்னோடு இரண்டற கலந்து வாழவே விரும்புகிறேன்
ஆயிரம் பேரை நான் நேசித்தாலும் உயிராய் என்னை நேசிக்க உன்னை போல் யாராலும் முடியாது.
அழகு முக்கியமில்லை என்பதே காதலில் அழகானது…
நீ காட்டும் அன்பை விட உன் கோபமே என் மீது அளவில்லா காதலை காட்டுகிறது
அன்பை கொடுக்க நினைப்பவரிடத்தில் அழகை எதிர்ப்பார்க்காதே….அழகை எதிர்ப்பார்ப்பவரிடத்தில் அன்பை கொடுக்க நினைக்காதே…
மொழியால் நீ பேசும் வார்த்தைகள் என் இதயத்தை அடையும் முன் உன் விழி பேசும் காதல் என்னை கவிழ்த்து விடுகிறது
நீ கிடைப்பாய் என்று தெரிந்தால் எதையும் இழக்க எனக்கு சம்மதமே…
என் கண்கள் பார்க்கும் உன் அழகை விட என் இதயம் உணரும் உன் காதலே உயர்ந்தது.
என்னை மன்னித்து என் மீது அன்பு செலுத்து என்று கேட்டேன்;அதை மறந்து என் மீது பேரன்பு செலுத்தினாய்
இந்த உலகத்தில் உன்னைப்போல் யாருமில்லை என்பதை விட உன்னை தவிர என் உள்ளத்தில் யாருமில்லை என்பதே உண்மை….
One Side Love Quotes In Tamil || உருக்கமான காதல் கவிதைகள்
காதலியை பார்க்காமல் ஏங்கித் தவிக்கும் ஒவ்வொரு காதலனுக்கும் அதேபோல் காதலனை பார்க்காமல் ஏங்கித் தவிக்கும் ஒவ்வொரு காதலிக்கும் இந்த காதல் கவிதைகளே காலத்தை கடத்தும் வழியாக இன்று வரை இருக்கிறது. வருடம் தோறும் காதலின் நிறம் வேண்டுமானால் மாறிக்கொண்டே இருக்கலாம் ஆனால் காதலை வெளிப்படுத்தும் முறையில் கவிதைக்கு என்று தனி இடம் உண்டு.
நான் வாழும் வரை உன்னோடு வாழ வேண்டும் என்பது மட்டும் அல்ல என் ஆசை, நீ வாழும் வரை மட்டும் நான் வாழ்ந்தால் போதும்….
எனக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கு உன்னிடம் நான் மொத்தமாக கேட்பது அது ஒன்றைத்தான்
நான் கேட்காமல் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ…
நான் இருக்கிறேன் என்று நீ சொல்லும் வார்த்தையில் சுழல்கிறது என் வாழ்க்கை
உன்னை நேசிக்கும் அளவுக்கு நான் யாரையும் நேசித்தே இல்லை….
என் மீது உள்ள நம்பிக்கையை விட உன் மீது இருக்கும் நம்பிக்கை உயர்ந்தது
எப்பொழுதும் உன்னையே நினைத்து ஏங்கும் என் இதயத்திற்கு தெரியாது நீ எனக்கு இல்லை என்பது…
உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது காரணமும் தெரியவில்லை காதலும் குறையவில்லை
உன்னோடு வாழ வேண்டும் என்ற ஆசை உயிரோடு என்னை வைத்திருக்கிறது
உன் மடியில் மரணம் கிடைத்தால் நரகத்திலும் நிம்மதியாய் இருப்பேன்
உயிர் காதல் கவிதைகள் || இதயம் தொட்ட காதல் கவிதைகள்
உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதற்குள் கல்லூரி காலமே முடிந்து போன எத்தனையோ காதல் கதைகள் இந்த மண்ணில் இன்னும் உலவிக்கொண்டு தான் இருக்கின்றது. ஏன் காதலை சொல்வதற்கு இவ்வளவு தயக்கம் இவ்வளவு பயம். உள்ளூற காதலில் தோற்றுவிடுவோமோ என்ற பயமே அதன் வெளிப்பாடாக காதலைக் கூட வெளிப்படுத்தாமல் மறைக்க முயல்வது. எனவேதான் சரியோ தவறோ காதல் கை கூடுகிறதோ இல்லையோ முதலில் காதலை வெளிப்படுத்துங்கள் உள்ளே வைத்திருக்கும் காதல் ஒரு நாளும் கைகோர்ப்பதில்லை.
உன் துணை ஒன்று இருந்தால் எத்துணை அவமானங்கள் வந்தாலும் தாங்கிவிடுவேன்
எல்லாவற்றையும் தாங்கி கொள்கிறேன் இறுதியில் நீ என்னை தாங்கி பிடிப்பாய் என்ற நம்பிக்கையில்
எவ்வளவு கோபம் வந்தாலும் உன்னை மட்டும் வெறுப்பதில்லை மனம்
உன் நிழல் உரசினால் கூட நித்திரை தொலைத்து போகிறேன்
நீ வருவாய் என்ற நம்பிக்கையில் தான் என் நாட்கள் போகிறது
உன்னோடு வாழவேண்டும் என்ற ஆசையில் தான் துடித்துக் கொண்டிருக்கிறது என் உள்ளம் நின்றுவிடாமல்
உன்னை விட அழகாய் ஆயிரம் பேர் இருக்கலாம் நான் தேடும் அன்பு உன் ஒருத்தியின் மட்டுமே இருக்கிறது
நீ என் காதலை ஏற்றாலும் மறுத்தாலும் நான் உன்னை நேசிப்பதை நிறுத்த போவதில்லை
நீ இரவா? பகலா? என்றெல்லாம் எனக்கு தெரியாது என் பகலில் நீ தான் சூரியன் என் இரவில் நீ தான் நிலவு
கிடைத்த வார்த்தைகளை எல்லாம் கூட்டி என் காதலை சொல்லி விட்டேன் நீ கிடைப்பாய் என்ற நம்பிக்கையில்
வறண்ட என் வாழ்க்கையில் கோடை மழையாய் குளிர்விக்க வந்தவள் நீ
நீ வேண்டும் காதல் கவிதை || உண்மையான காதல் கவிதை
நீயும் நானும் வேர் இல்லை; நீ இல்லாமல் நானே இல்லை என்று காதல் வசனங்கள் பேசியதெல்லாம் ஒரு காலம். நிறைவேறாத காதல்கள், ஒரு தலை காதல்கள், பிரிந்து போன காதலர்கள், சொல்ல முடியாத காதல் சொல்லியும் சேர முடியாத காதலர்கள் என எவ்வளவு காதல் கதைகள் இந்த மண்ணில் இதிகாசங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உங்களுடைய காதல் கதை எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
உன்னை பார்க்காமல் நான் இருந்தால் உன் முகம் மறந்து போகலாம்; உன் மீது நான் வைத்த காதல் இறந்து போகது.
உன்னை பார்த்த நொடியில் என் வாழ்க்கை தொடங்கியதாக உணர்கிறேன்….உன் கைகள் கோர்த்தே என் வாழ்க்கை முடிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
நீயும் நானும் என்ற இந்த உரையாடல் என்று நாமாகும் என்று ஏங்குகிறேன்
நீயில்லாமல் போனால் நிலா இல்லாத வானம் போல் என் வாழ்க்கை வெறிச்சோடி போகும்…
நீ கிடைக்காமல் போனால் சூரியன் இல்லாத பூமியாய் என் வாழ்க்கை இருண்டு போகும்
வாழ்க்கையின் வழிநெடுக உன் வாசத்தில் வாழ விரும்புகிறேன்
பூத்து குலுங்கும் பூவெல்லாம் உன்னையே நியாபகப்படுத்துகிறது.உன்னை விட அவளின் சிரிப்பே அழகு என்று
நித்திரையில கூட என்னை நிம்மதியாக இருக்க விடுவதில்லை நீ
என் தேவை என் தேவதை நீ ஒருத்தி மட்டும் தான்
உன்னை நினைக்கவே கூடாது என்று நினைக்கும் பொழுதெல்லாம் கண்ணீர் மழையில் கண்கள் நினைகிறது….உன்னை நினைத்துக்கொண்டே வாழ வேண்டும் என்று நினைத்ததை எண்ணி
மரணம் கூட ஒரு முறை தான் கொல்லும் உன் நினைவுகள் என்னை தினம் தினம் கொல்கிறது
true love காதல் கவிதைகள் || இதயத்தில் உயிர் காதல் கவிதைகள்
காதல் வந்தால் கண்கள் குருடாகிவிடும் காதுகள் செவிடாகி விடும் வாய் ஊமையாகிவிடும் வார்த்தைகள் மௌனமாகிவிடும்… இறுதியில் இவை எல்லாம் செயல்படும் பொழுது காதல் இல்லாமல் போய்விடும் இதுதான் உண்மை. ஆம் காதலுக்கு எதுவும் தேவை இல்லை காதலிக்கிறோம் என்ற எண்ணமே பெரியது காதலே பெரியது.
உன் மடியில் மடிந்தால் மரணமும் எனக்கு சுகம் தான்
உன்னோடு நடந்தால் எனக்கு பாலைவனமும் எனக்கு பூஞ்சோலை தான்
எனக்கான காதலை தேடி அலைந்தேன்; காதல் என்பது வெளியில் கிடைப்பது அல்ல எனக்குள் வளர்வது என்று உன்னை பார்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன்
உன்னை நினைத்தபின் உலகம் என்ன நினைக்கும் என்ற நினைப்பே எனக்கு இல்லை
காதல் என்பது வீண்வேளை என்றேன் உன்னை பார்க்கும் முன்பு வரை
உன் அன்பெனும் எண்ணெய் வற்றாத வரை நானும் ஒரு அணையா விளக்கே
சின்ன சின்ன சண்டைகளால் பிரிந்து விடுவோமோ என்று பயந்து இருக்கிறேன் பிரியம் தான் அதிகமாக இருக்கிறது உண்மையில்
நீ என் அருகில் இல்லை என்றாலும் உன் நினைவுகள் என் நெஞ்சில் எப்பொழுதும் என்னுடனே இருக்கும்
காதலின் பாஷை கடினமாகத்தான் இருக்கிறது கற்றுக் கொள்ளும் வரை
சிறைவாசத்தில் வாழவும் தயாராக இருக்கிறேன் உன் இதயத்தில் அறை ஒன்று கிடைத்தால்
நாம் போட்டுக் கொண்ட சண்டைகள் தான் பொக்கிஷமாய் நினைவில் இருக்கிறது இன்று வரை
Romantic காதல் கவிதை || நீயே காதல் கவிதை
காதலால் சிலரின் வாழ்க்கை உயரத்திற்குச் சென்றுள்ளது. அதே காதலால் சிலரின் வாழ்க்கை ஒன்றும் இல்லாமல் போய் உள்ளது இதில் எதை நாம் தேர்வு செய்கிறோம் என்பதை பொறுத்து நம் காதலும் அமைகிறது. மனைவி அமைவதும் கணவன் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் என்பதைப் போல காதல் கூட இறைவன் கொடுக்கும் வரம் தான்.
தொலைந்தால் உன்னில் தொலைய வேண்டும்; இருந்தால் உன் அருகில் வாழ வேண்டும்; மடிந்தால் உன் மடியில் மரணம் வேண்டும்
நீ போகும்போது சொன்ன ஒரு வார்த்தை தான் நான் போகும் வரை என் நினைவில் இருக்கும்
குளிரில் நான் நடுங்கினால் உன் பார்வை தரும் போர்வையே என்னை வெதுவெதுப்பாக்குகிறது.
நாம் நேசிக்கும் எல்லோரும் நம்மையும் நேசிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை காதலில்…
நான் வாங்கி வந்த மலர் வாடிவிட்டது உன்னை பார்க்காத சோகத்தால்
இனிமே என்கிட்ட பேசாத! என்று நீ சொல்லும் போதெல்லாம் சிரித்துக் கொள்கிறேன் இது எத்தனையாவது முறை என்று
ஊடலும் கூடலும் உன் வருத்திட மட்டுமே என் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை
அன்பாய் நீ பேசினால் என் ஆயிரம் பிரச்சனைகளும் காணாமல் போகிறது கண நேரத்தில்
எவ்வளவுதான் அழுதாலும் வலிகள் மட்டும் குறைவதே இல்லை காதலில்
காதலியின் கண்ணும் துப்பாக்கி முனையும் ஒன்றுதான் தப்பிப்பது மிகவும் கடினம் தான்
உன் நினைவுகளுடன் யுத்தம் செய்து என் இதயம் போர்க்களம் ஆகிறது
அன்பு உயிர் காதல் கவிதைகள் || நீயே மனைவி காதல் கவிதை || romantic true love காதல் கவிதைகள்
காதலில் ஏமாற்றியவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதும் இல்லை ஏமாந்தவர்கள் வாழ்க்கையில் தோற்றதும் இல்லை. ஏமாற்றம் என்பது எல்லா நிலைகளிலும் ஏற்படுவது தான் ஆனால் அது காதலில் மட்டும் சற்று இதயத்தை இறக்கச் செய்து விடும். எனவே தான் காதல் தோல்வி மிகவும் கொடியது அதிலிருந்து வெளியே வருவது என்பது வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி படியை எட்டுவதற்கு சமமே.
நீ என்னை பார்க்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு காதலர் தினமே
கடலில் கரையும் ஒற்றை மழைத்துளியாய் உன் மனதில் கரையவே ஆசை கொள்கிறேன்
உலகிலேயே சொல்வளம் மிக்க மொழி தமிழ் தான் என்கிறார்கள் ஆனால் என் காதலைச் சொல்ல வார்த்தைகள் மட்டும் எனக்கு கிடைக்கவே இல்லை எந்த மொழியிலும்
காதலில் மௌனமே மிகப்பெரிய ஆயுதம்
உன் அமைதி எனக்குள் யுத்தத்தை நடத்துகிறது
உன் முகம் பார்க்கும் போதெல்லாம் நான் மொழி இழந்து போகிறேன்
கண்களில் தொடங்கிய கட்டிலில் முடிவதல்ல காதல்; கல்லறை வரை தொடர வேண்டும்
நீ இல்லா நேரங்களில் உன் நினைவுகள் எனக்கு பாரமாகிறது
என் இதயம் சுமக்கும் இனிய நினைவுகள் எல்லாம் உன்னோடு இருந்தவைதான்
வழித் தணைக்கு எத்தனை உறவுகள் வந்தாலும் என் வாழ்க்கை துணையாய் நீ ஒருத்தி மட்டும் தான் வரவேண்டும்
வழித்துணைக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் என் வாழ்க்கை துணையாய் நீ ஒருவன் மட்டும் தான் வரவேண்டும்.
காத்திருந்து நீ வராமல் போனதால் கனவில் என் காதல் தொடர்கிறது