சிவன் கவிதைகள் – Sivan Quotes in Tamil

By TAMIL KAVITHAI

Updated on:

sivan quotes in tamil
Sivan quotes in Tamil

ஊரே எதிர்த்தாலும், உலகமே உன்னை பகைத்தாலும், நட்பே நடு முதுகில் குத்தினாலும், உன்னுடைய மனைவி, மக்கள், சுற்றத்தார் வெறுத்தாலும்,இழி சொல் சொன்னாலும், ஈசன் எனும் தூண் உனை காக்கும்;கவலையே வேண்டாம்.


சிவன் நினைத்தால் நீ நினைக்காதது எல்லாம் நடக்கும்


நீ வேண்டியது கிடைக்க,வேண்டியது என்னவோ சிவன் அருள் தான்


நீ  என்ன நினைத்தாலும், சிவன் என்ன நினைக்கிறானோ? அதுவே நடக்கும்.


சிவன் பற்றிய கவிதைகள் || Powerfull Shiva Quotes in Tamil

சிவபெருமான் பற்றிய கவிதைகள், சிவபெருமான் தன்னுடைய திருவாய் திறந்து இதுவரை எந்த கவிதைகளையும் சொன்னதில்லை. ஆனால் சிவபெருமான் பேசிய மொழி என்று தமிழை தான் கூறுகிறார்கள். சிவன் பற்றிய கவிதைகள் என்று நாம் படிப்பவை எல்லாம் சிவனின் மீது தீராத பக்தி கொண்ட சிலரால் எழுதப்படும் வாக்கியங்களை. இறைவனான சிவபெருமான் மீது பக்தி கொண்டவர்கள் தன்னுடைய பக்தி சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழியே இந்த கவிதைகளாகும். எனவே சிவபெருமானை பற்றி சிவபக்தியுள்ளவர்களால் எழுதப்பட்ட இந்த கவிதைகளை படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைகீழாய் நீ நின்றாலும் தலையில் எழுதியது என்னவோ அதுவே நடக்கும்


 

Sivan quotes in Tamil

சிவனின் துணையிருக்க சிக்கல்கள் பற்றி கவலை உனக்கு எதற்கு?கையிலாயநாதர் கையில் கவலைகளை எல்லாம் கொடுத்துவிடு.


சுற்றி இருப்பவனுக்காக வாழதே!உனக்குள் இருப்பவனுக்காக வாழ்ந்து விடு.


அழிக்கும் தொழிலை கொண்ட சிவனை நம்பு, உன் துன்பங்களை எல்லாம் அழித்து உன்னை வாழ வைப்பான்


 

Sivan quotes in Tamil

சிவனேனு வாழ்ந்தாலும் சிவனின் ஆட்டம் விடாது


பற்றிய வினைகளை பாதியில் அறுக்க நெற்றி நிறைய திருநீரு பூசி நெஞ்சில் நமச்சிவாய எனும் நாமத்தை சொல்….


 

Sivan quotes in Tamil

சிவன் கொடுக்க நினைக்கும் பொழுது, தடுப்பவன் எவனும் இல்லை.


இவன் என்ன நினைப்பான்,அவன் என்ன நினைப்பான் என்று வாழாதே;சிவன் என்ன நினைப்பான் என்று வாழ்ந்து விட்டு போ….


பார்ப்பவன் ஆயிரம் சொல்லுவான் என்று பயந்து வாழாதே;படைத்தவன் என்ன செய்வான் என்று பயந்து வாழ்….


சிவனை போற்றும் வரிகள் || சிவன் அன்பு மற்றும் காதல் கவிதைகள்

இந்த உலகில் படைக்கும் கடவுளாக பிரம்மாவும், காக்கும் கடவுளாக திருமாலும், அழிக்கும் கடவுளாக சிவபெருமானும் விளங்குகிறார்கள். ஆனால் அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் கோடி கோடியாய் குவிந்துள்ளனர். ஏன் இப்படி? ஒரு அழிக்கும் கடவுளுக்கு இவ்வளவு பக்தர்கள் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் தோன்றலாம். ஏனென்றால் சிவன் வினைகளை அறுப்பவன் அதாவது உங்களுள் இருக்கும் தீய வினைகளை அறுத்து நல்வினை படுத்துபவன். ஜென்ம ஜென்மங்களாய் உங்களைத் துரத்தும் தீய வினைகளை எல்லாவற்றையும் அழித்து அவற்றிலிருந்து உங்களை விடுவிப்பவன் ஆகிறான் எனவே தான் சிவபெருமானுக்கென்று தனிப்பெரும் கூட்டம் இருக்கிறது.

ஈசனின் துணையிருந்தால் இமய மலையும் உன் காலடியில்….


நமச்சிவாயா எனும் நாமத்தை சொன்னால்;நினைத்தது நடக்கும்;கேட்டது கிடைக்கும்…


 

Sivan quotes in Tamil

நமச்சிவாயா எனும் நாமத்தின் முன்னால் எந்த தீவினையும் பலிக்காது…


ஆயிரம் ஆபத்துகள் வந்தாலும் ஆபத்தாண்டவனாக வருவது… நமச்சிவாய மந்திரமே…


சிவனை நம்பினோர் சோதிக்கப்படுவார்கள்;ஆனால் கைவிடப்படுவதில்லை.


 

Sivan quotes in Tamil

ஆபத்து எவனால் வந்தாலும், தடுப்பது சிவனாகத்தான் இருக்கும்


ஆயிரம் துன்பம் வந்தாலும் அனைத்தையும் அழித்து உன்னை காப்பவன் சிவனே…


சிவன் துணையிருக்க; மற்றவர் மீது பயம் எதற்கு


ஆயிரம் கதவுகள் மூடினாலும்,அண்ணாமலையாரின் இதயம் திறந்தே இருக்கும்


 

Sivan quotes in Tamil

கேட்டால் கொடுப்பவர்கள் ஏராளம்,நினைத்தாலே கொடுப்பது சிவ நாமம் “நமச்சிவாய”


Meaningful lord shiva quotes in tamil || inspirational shiva quotes tamil

அழிக்கும் கடவுளான சிவபெருமானால் வாழ்ந்தவர்களே ஏராளம். ஏனென்றால் தவறுகளுக்கான தண்டனைகளையும் கொடுத்து அதிலிருந்து நம்மை விடுவித்து காக்கும் ஒரே தெய்வம் சிவபெருமானாக மட்டும் தான் இருக்க முடியும். சிவனை நம்பினோம் எக்காலத்திலும் சஞ்சலத்திற்கு ஆளாக மாட்டார்கள் அப்படியே துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்தாலும் இறுதியில் சிவ நாமமே அவர்களை காக்கும். சிவனால் துளைத்தேன் என்று சொல்பவர்களே இந்த பூமியில் வாழ்கிறார்கள். அதுபோல் தீயவர்களையும் சிவன் ஒரு போதும் நீண்ட நாட்களுக்கு நல்லபடியாக வாழ வைத்ததில்லை. அவர்களின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டிடுவார்.


மனம் நிறைய நமச்சிவாய மந்திரம் நிறைந்திருந்தால்,போகும் இடம் எங்கும் மகிழ்ச்சி காத்திருக்கும்


எவன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் , ஆனால் சிவன் சொன்னால் மட்டும் தான் நடக்கும்


 

Sivan quotes in Tamil

இந்த ஜென்மத்துடன் முடிந்து போகும் மனிதர்களின் உறவு,ஈரேழு ஜென்மங்கள் தொடரும் ஈசனின் உறவு


முடிவே தெரியாமல் பயணிக்கிறேன்,முடிவில் எனக்கு நீ வழிகாட்டுவாய் என்ற நம்பிக்கையில்


தோல்வியை பற்றிய கவலை இல்லை,துவண்ட என் நெஞ்சத்தில் நமச்சிவாய எனும் நாமம் இருக்கும் வரை


தீவினை அறுத்து!ஊழ்வினை உடைத்து நல்வினை காட்டும் நமச்சிவாயம் எனும் மந்திரம்


 

Sivan quotes in Tamil

எது வந்தாலும் எதிர்த்து நில் எம்பெருமான் துணையோடு….


அவன் பார்ப்பான்; இவன் பார்ப்பான் என்றில்லை;சிவன் பார்ப்பான் என்று பயந்து வாழ்


சிவன் தாமதமாக கொடுத்தாலும் தாராளமாகவும் தரமானதாகவும் கொடுப்பார் எதையும் (சோதனையும் கூட)


சிவன் இருக்கிறான் என்ற பயத்தில் சிவனேனு வாழ்ந்து விடுங்கள்….


 

Sivan quotes in Tamil

Positive lord shiva quotes in tamil || motivational lord shiva quotes in tamil

சிவபெருமானை பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு நாள் என்பது யாருக்கும் போதாது. அவருடைய அடியையும் முடியையும் பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்ற பிரம்மாவும் திருமாலும் தோற்றுப் போய் தான் திரும்பினார்கள். ஏனென்றால் இந்த பூமியோடு இரண்டற கலந்து காற்றிலும் நீரிலும் ஆகாயத்திலும் கலந்திருப்பது ஈசனின் திருவருளே. அவனுடைய அருள் இல்லாமல் பூமியில் பூக்களும் பூக்காது. அதே சமயம் ஈசனின் ருத்ர தாண்டவத்தை இந்த பூமியும் தாங்காது. அவன் நினைத்தால் நடக்காதது என்று எதுவும் இல்லை. ஒரு உயிர் இந்த உலகில் எப்போது பிறக்க வேண்டும் என்பதையும் அந்த உயிர் இந்த மண்ணில் இருந்து எப்பொழுது நீங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்வது சிவனே.


சுமையை தூக்கி வைப்பான்,அவனே உன்னையும் தூக்கி சுமப்பான்;நம்பிக்கையோடு நமச்சிவாய எனும் மந்திரத்தை சொல்லிடு… நிழலாய் உன்னை காப்பான்


சொத்தும் சுகமும் நீ செத்தால் வராது; நீ செய்த இருவினை(நன்மை/தீமை) மட்டுமே உடன் வரும்


 

Sivan quotes in Tamil

காயத்தை ஆற்றும் அருமருந்து கையிலாய நாதரின் திருநீறு


சிவனை நம்பியவர்கள் ஒருநாளும் கெட்டதில்லை


பிரச்சனைகளை கண்டு ஓடிக்கொண்டே இருக்காதே…. சிவனோடு சேர்ந்து நில்; வெற்றி உனக்கே…


இருளைக் கண்டு பயந்து ஓடாதே;ஒளியாக அவன் உன்னை பாதுகாப்பான்…


இழந்ததை விட, ஈசன் அதிகமாகவே தருவான்


சிவனை வழிபட்டால் ஜீவன் போகும் வரை பாதுகாப்பான்


 

Sivan quotes in Tamil

உன் பிரச்சனைகளை சிவனிடத்தில் விட்டு விடு,அமைதியாய் இரு…ஈசன் ஏதோ ஒரு ரூபத்தில் உன்னை காப்பான்…


சிவனை நம்பு,தானாக வரும் தெம்பு


Karma sivan quotes tamil || wallpaper sivan quotes in tamil

சிவனின் அருளை பூரணமாக பெற்றவர்கள் இந்த பூமியில் மிகவும் நேர்த்தியானதொரு வாழ்க்கையை வாழ்வார்கள். சிவனால் கெட்டவர்களும் இல்லை சிவனால் அழிந்தவர்களும் இல்லை. சிவன் சோதிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் தன் மனைவி மக்கள் என்று யாரையும் விடுவதில்லை. எல்லோருக்கும் சோதனைகளை கொடுத்துக் கொண்டே தான் இருப்பார் ஆனால் ஒருபோதும் அவர்களை தன்னந்தனியே விட்டுவிட்டு செல்ல மாட்டார். நம்பியவர்களை நமச்சிவாயம் எனும் மந்திரம் ஒரு நாளும் கைவிட்டதில்லை. ஈசனின் திருவடியை கதி என்று நம்பியவர்கள் காலம் முழுவதும் கண் கலங்காமல் வாழ்வார்கள்.


தீவினை அறுத்து உனக்கு நல்வினை தருவது நமச்சிவாய எனும் மந்திரம் மட்டுமே….


 

Sivan quotes in Tamil

உன்னுள் இருக்கும் ‘தான்’ என்ற அகங்காரத்தை ஈசன் முன் விட்டு விட்டால்,தானாக உனக்கு நல்லது நடக்கும்


நம்பிக்கையற்ற நேரத்தில் நமச்சிவாய எனும் நாமம் நம்பிக்கையாகும்….


ஆயிரம் தவறுகள் செய்தாலும் ஆபத்தாண்டவனாக வருபவன் அண்ணாமலையான் ஒருவனே….


நித்தம் ஈசனை நினைத்தால் துக்கம் உங்கள் வாழ்வில் ஒருபோதும் வராது…


ஈசனின் திருவடியே சொர்க்கம் என்று நினைப்பவர்களுக்கு சோதனைகள் எது வந்தாலும் தாங்கிப் பிடிக்க அவனே வருவான்


 

Sivan quotes in Tamil

நமச்சிவாயத்தை நம்பியிருந்தால்,நல்லதே நடக்கும்…


அடியும் முடியும் இல்லாத அவனை நினைத்தாலே சோதனையும் வேதனையும் தீர்ந்து விடும்….


எவ்வளவு தான் துன்பம் வந்தாலும் எனை ஆளும் ஈசனின் கருணையால்,தீவினை யாவும் தீர்ந்து போகும்.


அழிப்பதை தொழிலாக கொண்டாலும் மன்னிக்கும் மனதை கடலாக பெற்றவரே எம்பெருமான் ஈசன்;எனவே தவறுகள் ஆயிரம் செய்தாலும் வாய்ப்பு ஒன்றை வழங்கி வாழ வைக்கும் தெய்வம் ஈசன் ஒருவனே….


Self confidence shiva quotes in tamil || life lord shiva quotes in tamil

இமயமலையில் ஓய்வு கொள்ளும் சிவபெருமான். வாழும் இடமே நம் தமிழ்நாடு தான் ஆம் எல்லோரும் சிவனை கைலாய மலையான இமயமலையில் தேடுவார்கள் ஆனால் உண்மையில் சிவபெருமான் வாழும் இடமே நம் தமிழ்நாடு தான் அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை மற்றும் ராமேஸ்வரம் தான். இந்த இரண்டு இடங்களில் தான் சிவபெருமான் அதிகப்படியாக இருக்கிறார் என்று எல்லோராலும் கூறப்படுகிறது .இமயமலையில் சில காலம் அவர் ஓய்வெடுக்க மட்டுமே செல்வார் என்பது பண்டிதர்களின் கூற்றாகும்.

வாக்ழ்க்கை பற்றிய தத்துவ கவிதைகள் படிக்க – Life Quotes in Tamil

 

Sivan quotes in Tamil

TAMIL KAVITHAI

Leave a Comment