தீண்டாமை எனும் கொடிய நோயால் சிறு வயதிலிருந்து சுற்றி இருந்த சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டு பின்பு அதை எல்லாம் தாண்டி கல்வியால் மட்டுமே நம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு படித்து, தன்னைப் போல் பாதிக்கப்படும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிய புண்ணிய ஆத்மா அம்பேத்கர் அவர்கள் ஆவார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே உருவாக்கிய மாமேதை திரு அம்பேத்கர் அவர்கள் தான். இந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக இந்த இந்திய நாட்டில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் சரிசமமான உரிமைகளானது வழங்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மிகவும் கட்டுக்கோப்பான ஒரு சட்ட திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் திரு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆவார். அவர்களுடைய பொன்மொழிகள் அவருடைய சிறந்த கருத்துக்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
சுயமரியாதையை அழித்து எந்த இனத்தையும் வளர்க்க முடியாது
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஏழைக்கு தரும் கல்வி உயர்வானது
“பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்.”
மனிதநேயத்தை வளர்ப்பதே மனிதர்களின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்.
எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதை விட,எவ்வளவு சிறப்பாக வாழ்கிறோம் என்பதே முக்கியம்.
ஒன்றும் செய்யாமல் கருவேலமரம் போல் வாழ்வதை விட, ஒரு பெரிய காரணத்திற்காக இளமையில் இறப்பது சிறந்தது.
மதம் மனிதனுக்கானது, மதத்திற்காக மனிதன் அல்ல.
அம்பேத்கர் புரட்சி வரிகள் || அம்பேத்கர் சிந்தனைகள்
அம்பேத்கரின் சிந்தனைகளால் கவரப்பட்டு அவரை பின்தொடர்ந்தவர்கள் ஏராளம். ஏன் இன்றளவும் அம்பேத்கரை தெய்வமாக பார்ப்பவர்கள் உண்டு. ஏனென்றால் அண்ணல் அம்பேத்கர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று ஏழைகளுக்கும் ஜாதி அடிப்படையில் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலமானது அமைந்திருக்க வாய்ப்பில்லை எனவே தான் அவருடைய சிந்தனைகளை இந்த பதிவில் தமிழ் கவிதை வலைப்பதிவானது பதிவு செய்ய விரும்புகிறது.
இன்று தீண்டாமை எனும் கொடிய நோயும் ஜாதி அடிப்படையிலான பார்வையும் குறைந்திருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணமே அண்ணல் அம்பேத்கர் தான்.
வரலாற்றை மறப்பவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது.
விதியை நம்பாமல். உங்கள் பலத்தை நம்புங்கள்.
அறிவு ஒரு மனிதனின் வாழ்க்கையின் அடித்தளம்.
கல்வி என்பது ஆண்களுக்கு எவ்வளவு அவசியமோ அதே அளவு பெண்களுக்கும் அவசியம்.
பாதுகாப்பான எல்லையை விட பாதுகாப்பான ராணுவம் சிறந்தது.
ஒருவரின் கல்வி ஏழைகளின் நலனுக்கு கேடு விளைவித்தால்,அவன் சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடு.
ஒருவன் கற்ற கல்வியை விட அவனுடைய பண்பு முக்கியமானது.
சாதி பொது உணர்வைக் கொன்றுவிடும்.
Ambedkar birthday quotes in tamil || டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள்
பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு சமூகத்தின் உடைய முன்னேற்றமானது கணக்கிடப்பட வேண்டும் என்பதே அம்பேத்கர் அவர்களின் கருத்தாகும்.
ஏனென்றால் பெண்மை வளராமல் எதுவும் இங்கே வளர்ச்சியடைய போவதில்லை என்பதை நன்கு உணர்ந்து இருந்தார் அம்பேத்கர்.ஏனென்றால் சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை முதலில் பெண்களிடம் இருந்து தான் களைய முடியும் என்பதையும் நம்பியவர் அம்பேத்கர் ஆவார்.
ஒரு பெண்ணினைத்தாள் எதையும் சாதித்து விடுவாள் கரைக்க முடியாத கல்லையும் கரைத்து விடுவாள் எல்லாவித மாற்றங்களுக்கும் பெண்ணே தொடக்கமும் மாவால் என்பதை உணர்ந்து இருந்தார் அம்பேத்கர்.
விஷத்தை அமிர்தமாக மாற்ற முடியாது.
அரசியலமைப்பு என்பது வெறும் வழக்கறிஞர்களின் ஆவணம் அல்ல, அது வாழ்க்கையின் வாகனம்.
அலட்சியம் என்பது மக்களைப் பாதிக்கும் மிக மோசமான நோயாகும்.
இந்த உலகில் சுயமரியாதையுடன் வாழ கற்றுக்கொள்.
சட்டம் அனைத்து உலக மகிழ்ச்சியின் உறைவிடம்.
அரசியல் சாசனம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை பார்த்தால், அதை முதலில் எரிப்பவன் நானே.
சுயமரியாதை வாழ்க்கைக்கு, சுய உதவியே சிறந்தது
ஏழைகள் தங்களின் துன்பங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்ற முட்டாள்தனமான நம்பிக்கையை எவ்வளவு சீக்கிரம் நீக்கிவிடுகிறார்களோ அவ்வளவு நல்லது
அம்பேத்கர் மூன்று முழக்கங்கள் || அம்பேத்கர் அரசியல் தத்துவம்
அரசியல் ரீதியாக தாழ்த்தப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கான நீதியை சட்டரீதியாக பெற்று கொடுத்தவர் அம்பேத்கர் ஆவார். அதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து இறைநிலை அடைந்தவர் அம்பேத்கர் ஆவார். அவருடைய புரட்சிகர சிந்தனைகளை பதிவிடுவதில் பெருமை கொள்கிறது நம் வலைப்பதிவு.
இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவர் அண்ணல் அம்பேத்கர் ஏனென்றால் இன்று நாம் பின்தொடரும் ஒவ்வொரு அரசியலமைப்புச் சட்டமும் திரு அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்டவை ஆகும் அவர்
அன்றைய காலகட்டத்தில் இருந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் அம்பேத்கர் அவர்களுடைய சட்டமானது இருந்தது. இன்றளவும் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் மக்களால் பின்பற்றப்படுகிறது. சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆனாலும் இவருடைய சட்டமானது இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருப்பதே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
அரசியல் அதிகாரம் அனைத்து சமூக முன்னேற்றத்திற்கும் முக்கியமாகும்.
சமாதானப்படுத்துதல் என்பது ஆக்கிரமிப்பாளரின் அதிருப்திக்கு ஆளான அப்பாவிகளுக்கு எதிராக கொலை, தீ வைப்பு மற்றும் கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் அவரை விலைக்கு வாங்குவதாகும்
மனித வாழ்க்கை, கடலில் சேரும் போது தன் அடையாளத்தை இழக்கும் ஒரு துளி நீர் போன்றது அல்ல.இந்த சமுதாயத்தில் அவன் சுதந்திரமானவன். அவன் பிறந்தது சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மட்டும் அல்ல, தன் சுய வளர்ச்சிக்காகவும் தான்..
சுயமரியாதை இல்லாமல், நாட்டின் மீது அன்பு இல்லாமல் வாழ்வதை விட ஒரு மனிதனுக்கு அவமானம் எதுவும் இல்லை
நம் உரிமைகளுக்காக நம் கால்கள் தான் போராட வேண்டும்:போராட்டத்தின் மூலமே அதிகாரமும் கௌரவுமும் கிடைக்கும்
ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆளத் தகுதியற்றது என்ற மில்லின் கோட்பாட்டைத் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒவ்வொரு மனிதனும் ஒரு வர்க்கம் மற்றொரு வகுப்பை ஆளத் தகுதியற்றது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
பௌத்தம் பிரஜ்னா (மூடநம்பிக்கை மற்றும் அமானுஷ்யத்திற்கு எதிரான புரிதல்), கருணா (காதல்) மற்றும் சமதா (சமத்துவம்) ஆகியவற்றைக் கற்பிக்கிறது. நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இதைத்தான் மனிதன் விரும்புகிறான்
அம்பேத்கர் கவிதைகள் தமிழ் || அம்பேத்கர் புரட்சி தத்துவங்கள்
தீட்டு தீட்டு என்று ஒதுக்கியவரால் தீட்டப்பட்டது நம் இந்திய அரசியலமைப்பு சட்டமாகும். கருப்பு சட்டை போட்டு நீதிமன்றத்தில் வாதாடும் ஒவ்வொரு வழக்கறிஞரும் தன் குருவாக கொள்வது அம்பேத்கரையும் காந்தியையும் தான். ஏனென்றால் இருவருமே இந்த வழக்கறிஞர் தொழிலுக்கு குருவாகவும் கடவுளாகவும் காட்சியளிக்கின்றனர் நம் இந்திய நாட்டில்…
இந்தியாவின் வரலாற்றை நினைவு கூறும் போதெல்லாம் அண்ணல் அம்பேத்கரின் பெயரை யாராலும் தவிர்த்து விட முடியாது இன்று இந்தியா ஒரு கட்டுக்கோப்பான நாடாக திகழ்வதற்கு முக்கிய காரணமே அம்பேத்கர் தான்.
சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன்.
அரசியல் என்பதை மனித உடலாக வைத்துக்கொள்வோம், சட்டம் மற்றும் ஒழுங்கை மருந்தாக வைத்துக்கொள்வோம்.அரசியல் எனும் உடலுக்கு ஏதேனும் நோய் வந்தால் சட்டம் ஒழுங்கு எனும் மருந்து தேவைப்படுகிறது
சமூக சுதந்திரத்தை அடையாத வரை, சட்டம் வழங்கும் சுதந்திரத்தால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
கணவன்-மனைவி இடையேயான உறவு என்பது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்க வேண்டும்.
புத்தம் என்பது ‘கொல்ல விருப்பம்’ மற்றும் ‘கொல்ல வேண்டும்’ என்பதற்கு இடையேயான வேறுபாட்டைக் குறிக்கிறது.புத்தம் கொல்லும் விருப்பத்தைத் மட்டுமே தடை செய்கிறது.
(Principles)கொள்கை உங்களுக்கு செயல்பட சுதந்திரத்தை அளிக்கிறது. விதி(Rules) உங்களை உடைக்கிறது அல்லது நீங்கள் விதியை மீறுகிறீர்கள்
உலகில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை ஒருவர் எப்போதும் போற்ற வேண்டும்.
அராஜகம் மற்றும் சர்வாதிகார கப்பலில், சுதந்திரம் இழக்கப்படுகிறது.
சாதி அமைப்பு என்பது வெறும் தொழிலாளர் பிரிவினை மட்டும் அல்ல. இது தொழிலாளர்களின் பிரிவும் கூட
Ambedkar Quotes in Tamil:
ஒடுக்கப்பட்டவர்களுக்காக தன் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே அர்ப்பணித்தவர். ஒவ்வொரு நாளையும் அதற்காகவே செதுக்கியவர். இந்தியர்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கிய தலைவர்களுள் அம்பேத்கரும் ஒருவராவார். எனவே அம்பேத்கரின் சிந்தனைகளையும் பொன்மொழிகளையும் உள்வாங்கிக் கொண்டு தங்களுடைய வாழ்க்கை சிந்தனைகளுக்கு அதனை ஒவ்வொருவரும் மாற்ற வேண்டியது அவசியமாகும்.
மனித உடல் ஏன் இறந்து போகிறது? காரணம், மனித உடல் துன்பத்திலிருந்து விடுபடாத வரை மனம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு உற்சாகம் இல்லாவிட்டால் அவனது உடலோ மனமோ இறந்த நிலையில் இருக்கும்
அரசை அமைப்பவர்களுக்குள் ஒற்றுமை உணர்வு இல்லாமல் ஜனநாயகம் இயங்காது.
ஆட்சியில் இருக்கும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகள் இணைந்து செயல்பட்டால்தான் ஜனநாயக அரசு ஜனநாயகமாக இருக்க முடியும்
தேசத்தின் சுதந்திரம், அது உண்மையாக இருக்க வேண்டுமானால், அதில் உள்ள பல்வேறு வகுப்பினரின், குறிப்பாக அடிமை வகுப்பினராகக் கருதப்படுபவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்
அடிமைத்தனத்தை அழிப்பதற்காக தங்கள் நேரத்தையும், திறமைகளையும், அனைத்தையும் அர்ப்பணிப்பவர்கள் இறையருள் பெற்றவர்கள்.
சமத்துவமின்மை இந்து மதத்தின் ஆன்மா.
பௌத்தத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. பௌத்தம் என்பது சம உரிமையை அடிப்படையாகக் கொண்ட சாதியற்ற சமூகம். மறுபுறம், இந்து மதம் முதன்மையாக சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது; தனிமை, சமத்துவமின்மை மற்றும் சுரண்டலை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு
தற்போதைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க, ஒருவர் இயல்பான தன்மை, அகிம்சை (அஹிம்சை), சமத்துவம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இது புத்தர் போதித்த நித்திய உண்மை.
அம்பேத்கர் பற்றிய கவிதைகள்:
அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு முன் உதாரணமாகவே திகழ்கிறது. இன்றளவும் சில இடங்களில் சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது அதற்கெல்லாம் ஒரே தீர்வு அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளும் கருத்துக்களும் தான் எனவே இவற்றை படித்து பயன்படுவது மிகவும் முக்கியமாகும்.
வரலாற்றை உருவாக்குவதில் மனிதன் ஒரு காரணி அல்ல என்று கருதுவது மிகவும் தவறானது.
மனிதன் நெருப்பை உண்டாக்குவதற்கு எரிகல்லின் துண்டுகளை தேய்க்க வேண்டும்.
ஒரு தாவரத்திற்கு நீர் தேவைப்படுவது போல் ஒரு யோசனைக்கு இனப்பெருக்கம் தேவை. இரண்டும் இல்லையெனில் வாடி இறந்துவிடும்
எது எனக்கு அறிவுறுத்துகிறது, என்னை மகிழ்விக்கிறது
சமூக சுதந்திரத்தை அடையாத வரை, சட்டம் வழங்கும் சுதந்திரத்தால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
இழந்த உரிமையை பிச்சை எடுப்பதன் மூலம் பெறமுடியாது
மனிதன் அவனுடைய மனதால் உருவாக்க படுகிறான்
மனிதன் வாழ்வதற்காக உண்ண வேண்டும், அவன் இந்த சமுதாய நலனுக்காக உழைக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைத் தத்துவம் இருக்க வேண்டும், ஏனென்றால் ஒவ்வொருவரும் தனது நடத்தையை அளவிடுவதற்கு ஒரு தரநிலையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் தத்துவம் என்பது அளக்க ஒரு தரத்தை தவிர வேறில்லை
தத்துவத்திற்கும் மதத்திற்கும் இடையிலான வேறுபாட்டை இரண்டு வழிகளில் வைக்கலாம். தத்துவம் என்பது மதத்தை அறிந்துகொள்வதில் அக்கறை கொண்டுள்ளது, சத்தியத்தின் மீது அக்கறை உள்ளது. தத்துவம் நிலையானது. மதம் ஆற்றல் மிக்கது.
இந்த பூமியின் நல்ல விஷயங்கள் சொர்க்கத்திலிருந்து விழுவதில்லை, ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் அதற்கான முயற்சிகள் உள்ளன, அதைச் செய்பவர்களுக்கு மட்டுமே அந்த முன்னேற்றம் கிடைக்கும்
ஒருவர் தனது மனதையும் வலிமையையும் தன்னுடைய இலக்கை அடைய பயன்படுத்த வேண்டும்