அண்ணன்-தங்கை பாசம் கவிதைகள் BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

By TAMIL KAVITHAI

Updated on:

அண்ணன்-தங்கை கவிதைகள் 

ஒரு அண்ணனாக தன் தங்கையை எவ்வளவு நேசிக்கிறான் என்பதை உணர்த்துவதற்கு உதவும் விதமாக இங்கே கவிதைகள் பதிவிடப்படுகிறது.தொப்புள் கொடி உறவுகளுக்கு எப்பொழுதும் தனி பாசமும் நேசமும் உண்டு.இதைத் தான் பெரியவர்கள் தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழியின் மூலம் கூறியுள்ளனர்.அப்படிப்பட்ட தொப்புள் கொடி உறவுகளான ஒரு அண்ணன் தங்கைக்கு இடையே உள்ள உறவை அழகாக எடுத்துக்காட்டும் வகையில் இங்கே கவிதைகள் அமைகின்றன.
அன்பான கணவனுக்கு காதல் கடிதம்

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

அண்ணன் தங்கைக்கு எழுதும் கவிதை(Brother To Sister quotes in Tamil)

அம்மாவிற்கு பிறகு 
என்னை புரிந்து கொள்ளும் 
ஒரு பெண் என் தங்கை

அண்ணன் தங்கை பாசம் கவிதைகள்;


ஒரு அண்ணனுக்கு வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும் அல்லது மகிழ்ச்சி வந்தாலும் அதை முதலிடம் தன் தங்கையிடம் சொல்லவே நினைப்பான்.ஏனேன்றால் உடன் பிறந்நு‌ ஒவ்வொரு நொடியும் உடனே இருந்து சண்டை பிடித்து சமாதானம் ஆகி அண்ணனின் நிழலில் வளர்ந்த மரம் தங்கை ஆகிறாள்.

அண்ணன் என்ற வார்த்தை 
அழகானது, என் தங்கை 
நீ அழைக்கும் போது தான்

QUOTES FOR SISTER FROM BROTHER;


எந்த பிரட்சனை வந்தாலும் அண்ணா என்று உரிமையோடு என்னை அழைக்கும் பொழுது அண்ணா என்ற வார்த்தை அமிர்தமாகிறது என் காதுகளுக்கு

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

எனக்கு எதுன்னாலும் 
என் அண்ணன் வருவான் 
என்று நம்பும் தங்கையின் 
நம்பிக்கையே அண்ணனின் பலம் 

பாசமுள்ள தங்கைக்கு ஒரு கவிதை;

தங்கைக்கு நான் தான் எல்லாம் என்ற ஒரு எண்ணமே அண்ணனின் பலமாகிறது இங்கே

.எவ்வளவு சொத்தும் சுகமும் இருந்தாலும் உடன் பிறந்தவளை கண்ணீர் சிந்த விடாமல் பார்த்துக் கொள்பவன் யாரோ அவனே உண்மையான பணக்காரன்.

தன்னை விட சிறியவளாயினும்
தங்கத்தை விட உயர்ந்தவளாக
அண்ணனின் உள்ளத்தில்  
உயர்ந்து நிற்பவளே தங்கை

தங்கைக்கு ஒரு கவிதை;

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

எவ்வளவு சொந்தங்கள் சூழ்ந்திருந்தாலும் செல்லாமாய் டேய் அண்ணா என்று அழைக்கும் தங்கையை தேடும் அண்ணனின் மனது அழகானது.

குழந்தையை போல் சேட்டை செய்யும் தங்கை எப்பொழுதும் அண்ணனுக்கு முதல் குழந்தையே.

என்னை புரிந்து கொள்ளாமல்
சண்டையிடுபவள் என் மனைவி;
என்று என்னை புரிந்து கொண்டு
சண்டையிடுபவள் என் தங்கை

Brother and sister quotes in Tamil;


அண்ணனாக பிறந்தவன் அன்னையின் அன்பை அன்னையில்லாது வேறு ஒருவரிடத்தில் பெற‌ முடியும் என்றால் அது அவனது தங்கையிடமே…

எவ்வளவு தான்‌ சண்டை போட்டாலும் சமாதானம்‌ என்ற வார்த்தை தேவைப்படாத ஒரு இடம் தங்கை

உடன் பிறந்தால் மட்டும் தங்கை
அல்ல;உள்ளத்தால் அன்பை 
உணர்ந்து அண்ணா என்று 
என்னை அழைத்தால் அவளும் 
என் தங்கையே 

அண்ணன் ஆசையாய் தங்கைக்கு எழுதும் கவிதை:


இங்கு பெரும்பாலான பெண்கள் அண்ணா என்று அழைப்பது அவர்களுடைய தொப்புள் கொடி உறவை அல்ல;பாசப்பிடிப்பினால் உருவான ஏதோ ஒரு உறவை தான்.

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

காலத்துக்கும் கடன்பட்ட உறவு தான் என்று தெரிந்தும் உடன்பிறந்தவளை உறவாய் பார்க்க மறுக்கிறது உள்ளம்;உயிரல்லவா அவள்…


தங்கையின் நினைவை தன் மகளிடம் சொல்லி தீர்க்கும் வரை எந்த ஒரு அண்ணனுக்கும் தங்கை உறவின் மீது உள்ள ஆசையும் தீர்வதில்லை; தங்கை மீது உள்ள பாசமும் குறைவதில்லை

ஒரு ஆணுக்கு தன்னை
சுமந்தவளும்;சுமப்பவளையும் 
தவிர பிற பெண்கள் அனைவரும்
உடன் பிறந்தவளே…

தங்கைக்கு தமயன் எழுதும் கவிதை:


உடன் பிறந்து என் உயிரோடு உறவுள்ள வரையும் என் உயிருள்ள வரையும் என் இதயத்தில் இணையாய் நல்ல உறுதுணையாய் வாழும் என் தங்கைக்கு எதையும் தருவேன்… காலம் உள்ள வரை உனக்கு கடமை செய்வேன்.

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

அண்ணா என்று அழைக்கும் 
போது உன் அடிமையும் ஆவேன்.

என் இனிய தங்கைக்கு;


அண்ணா என்ற உறவின் அற்புதம் உடன் பிறந்த இளையவள் ஒருத்தி இருந்தால் தான் வெளிப்படும்.

காலம் மாறிக்கொண்டே இருந்தாலும் அண்ணன் அவன் தங்கைக்கு செய்யும் கடமைகள் இங்கே ஒரு போதும் மாறியதில்லை.எவ்வளவு பனிச்சுமை இருந்தாலும் தங்கைக்காக தள்ளி வைக்க தோன்றும் அண்ணனுக்கு இயல்பாகவே.

அண்ணன்
என்பவன் திருமணத்திற்கு
முன்பு ஒரு பெண்ணின்
பாதுகாவலனாகிறான்.அண்ணன்
இல்லாத பெண்ணிற்கு அண்ணா 
என்ற வார்த்தையே பாதுகாப்பாகிறது.

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

அண்ணன் கவிதைகள்;

கட்டிய கணவன் கூட கைவிடும் இந்த காலக்கட்டத்தில் எந்த ஒரு தருணத்திலும் உடன் பிறந்த தமயன் உதறமாட்டான் தங்கை எனும் உறவை.அத்தகைய உன்னதமான உறவை பெண் பிள்ளைகள் எப்பொழுதும் உயர்வாகத் தான் நினைப்பர்.

கடமை செய்ய காலம் முழுவதும் காத்திருக்கும் ஒரு உறவு அண்ணன்.

என்னை உள்ளத்தில் தாங்கும்
உன்னைப்போல் ஒருவன் 
இன்னும் இந்த உலகில் 
பிறக்கவில்லை அண்ணா

ஆசை அண்ணனுக்கு ஒரு கவிதை;


திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு பெண்ணும் பிறந்த வீட்டை நினைத்து மறுகுவது சாதாரணம் தான்.ஆனால் அந்த நினைவுகளில் பெரும்பாலானவை தன் தந்தையை பற்றியதாக தான் இருக்கும்.அதற்கு பிறகு அதிகபட்சமாக நினைவுகள் தன் அண்ணனை பற்றியதாக தான் இருக்கும்.

ஒரு பெண்ணுக்கு அண்ணன் என்ற உறவு திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பாகவும் திருமணத்திற்கு பின்பு பாருக்கு மதிப்பாகவும் இருக்கும். 

உன்னோடு சண்டையிட்ட 
நினைவுகள் கண்ணீர் துளியை 
தந்தன, என் திருமணத்திற்கு பிறகு. 
அது ஆனந்த கண்ணீரா?
அழுகையாக? என்று எண்ணிப்
பார்க்க நேரமில்லை இங்கே

அண்ணனுக்கு ஆசையாய் தங்கை எழுதும் கவிதை;


உன் ரகசியங்கள் அனைத்தும் நான் அறிவேன் அண்ணா, ஆனால் உன் ரகசியங்கள் என்னிடம் ரகசியமாய் இருக்காது என்பதை என்று நீ உணர்வாய்..?

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

எப்பொழுதும் பள்ளி முதல் கல்லூரி வரை என்னுடைய பாடிகார்ட் நீ தான் னா!

உன் ரகசியங்களை வீட்டில் என்னிடம் 
மட்டும் ரகசியமாய் சொல்லி
செல்வாய்,என்னிடம் சொன்னால்
அது ரகசியமாய் இருக்காது என்று
தெரிந்தும்

Brother and sister quotes in Tamil

என் அண்ணனுக்கு ஒரு கவிதை;


பெரிய பொண்ணா வளந்துட்டன்னு நீ என்னிடம் காட்டிய சின்ன இடைவெளி தான் அண்ணா எனக்கு காட்டியது.

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணாம, நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொன்னப்ப தான்னா புரிஞ்சிது நீ எவ்ளோ பக்குவப்பட்டிருக்கன்னு

அஞ்சு வயசுல அண்ணன் கூட
சைக்கிள் ல போனப்பவும் சரி,
பதினெட்டு வயசுல அண்ணன் கூட
பைக் ல போரப்பவும் சரி கெத்து
எப்பவும் ஒன்னு தான்;இது என்
அண்ணன்

SISTER TO BROTHER QUOTES IN TAMIL;

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

கோபம் உன் கண்ணை மறைத்தாலும் ஒரு நாளும் நீ என்னை மறந்ததில்லை.

அண்ணா.உன்னைப்போல் ஒரு தமயன் கிடைத்தால் எந்த தங்கையும் மகாராணியே.


யாரிடத்தும் என்னை விட்டுக்கொடுக்காதவன் என் அண்ணன்;எனக்காக எதையும் விட்டுக்கொடுப்பவனும் என் அண்ணன்.என்னை கடைசி வரை ஒரு உறவாய் பார்க்காமல் அவன் உயிராய் பார்ப்பவன் .

என்ன தான் கோவக்காரனா
இருந்தாலும் என் அண்ணன் என்
விஷயத்துல கொணமுள்ள
பாசக்காரன் தான்

Brother Quotes From Sister;

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

உனக்கு எதுன்னாலும் நான் முதல் ஆளாக வந்து நிற்ப்பேன்னு சொல்றது என் அப்பாவுக்கு அப்பறம் அண்ணா தான்.அதனால தான் அண்ணன் னா எப்பவும் பெண்களுக்கு ஒரு கெத்து.

பாசமலர் சிவாஜி கணேசன் அளவுக்கு இல்லைன்னாலும் என் அண்ணனும் கொஞ்சம் நல்லவன் தாங்க

என் வாழ்க்கையில் என் தந்தைக்கு
பிறகு நான் விரல் பிடித்து நடந்த
இரண்டாவது ஆண் என் அண்ணன்

அண்ணனுக்கு ஆசையாய் ஒரு கவிதை;

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL


தன்னை விட வயதில் மூத்தவனை அண்ணனாக பாரக்கும் குணாதிசியம் பெண்ணிடமும் தன்னை விட வயதில் இளையவளை தன் தங்கையாய் பார்க்கும் எண்ணம் ஒரு ஆணிடமும் இருந்துவிட்டால் அன்பிற்கு பஞ்சமில்லை இந்த அகிலத்தில்.

அண்ணன் என்ற உறவில்லாத ஒரு 
பெண் இந்த உலகில் இல்லை

அண்ணனுக்கு கவிதை


எல்லாவற்றிற்கும் உன்னிடம் சண்டை போடுவேன் வீட்டில், ஆனால் எனக்காக வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் நீ சண்டை போடுவாய்.உன்னை விட சின்னவள் என்பதற்காக என்னை ஒரு நாளும் குறைத்து எடை போடாதவன் நீ அண்ணா.

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

என் மனதின் ஆசைகளை முதலில் அறிமவனும் என் தவறுகளை முதலில் சுட்டிக் காட்டுபவனும் நீயே… 

அன்புள்ள அண்ணனுக்கு, அன்பு
காட்டும் போது அன்னையாகிறாய், 
கண்டிக்கும் பொழுது 
தந்தையாகிறாய், இவர்கள் இருவரும் 
இல்லாமல் போகும் தருவாயில் என் 
மரணம் வரை எனக்காய் நிற்கும் 
எல்லாமுமாகிறாய்

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

தமயனுக்கு கவிதை வரிகள்;

என் எல்லா முடிவுகளும் உன் தலையீடு இல்லாமல் நான் எடுத்ததே இல்லன்னா,நல்லதும் கெட்டதும் நீ சொல்லி தந்தாய்,என் தங்கச்சிக்கு ரொம்ப பிடிக்கும் னு நீ வாங்கிட்டு வர பானிபுபூரியை விட எனக்கு பிடிக்கும் னு வாங்கிட்டு வர உன்ன தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் னா

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

என் கண்ணீருக்கும் கவலைக்கும் 
அர்த்தம் அறிந்தவன் நீ;என் 
மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் 
தேவை அறிந்தவன் நீ;உயிருள்ள 
வரை உடன் நிற்கும் உறவும் நீ

BROTHER AND SISTER QUOTES IN TAMIL;

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

உன் மீது நான் வைத்திருக்கும் அன்பு காதலை விட உயர்ந்தது என்று எனக்கு மட்டும் தான் தெரியும் அண்ணா

அண்ணன்களின் அருமை தெரிய 
பெண்களுக்கு அவர்களின் மாமியார்
வீடு தேவைப்படுகிறது

BROTHERS AND SISTERS QUOTES IN TAMIL

TAMIL KAVITHAI

Leave a Comment