நட்பு கவிதைகள் – Natpu Kavithaigal

By TAMIL KAVITHAI

Updated on:

நட்பு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத உறவும், நினைக்க நினைக்க மகிழ்ச்சியை தரும் உறவும் நட்பாக தான் இருக்க முடியும். ஏனென்றால் பள்ளி காலம் முதல் கல்லூரி காலம் வரை, ஏன் சிலருக்கு தங்களுடைய வேலை நாட்களில் கூட நண்பர்கள் துணை நிச்சயம் தேவைப்படுகிறது.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒரு நல்ல பள்ளியை தேர்ந்தெடுப்பது போல நல்ல ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது போல தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். ஏனென்றால் நாம் யாருடன் அதிகமாக பழகுகிறோமோ அவர்களுடைய எண்ணத்தின் பால் வீழ்வது உண்மை. எனவே நல்ல சிந்தனைகளுடனும் நல்ல குண நலன்களுடனும் உள்ள நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களுடைய விருப்பமாகும். அதே சமயம் ஒவ்வொருவரும் தங்களுடைய நண்பர்களாக யார் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவெடுப்பதிலும் கவனம் இருக்க வேண்டும்.

அப்படி நல்ல நண்பர்கள் கிடைத்தால் அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான மாற்றங்கள் நிகழும் என்பதை எல்லாம் இந்த கவிதைகளின் மூலம் தமிழ் கவிதை வலைதளமானது மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது படித்து மகிழுங்கள்.

கர்ணனை போன்ற நண்பர்களை சம்பாதியுங்கள் ஆண்டவனே எதிர்த்தாலும் உங்களை விட்டு செல்லமாட்டான்…

Friendship Quotes in Tamil-natpu kavithai

ஜாதியும் மதமும் செத்து போகும் இடமாக நட்பு ஒன்றே திகழ்கிறது….

என் அழுகையின் பின்னால் ஆயிரம்பேர் இருக்கலாம்ஆனால் என் சிரிப்பின்பின்னால் நிச்சயம்என் நண்பனே இருப்பான்…

எதையோ எதிர்பார்த்து பழகும் உறவுகளுக்கிடையில் எதையுமே எதிர்பார்க்காமல் எப்பொழுதும் துணை நிற்கும் நட்பு கிடைத்தால் அவனை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகில் யாருமில்லை.

Friendship Quotes in Tamil-natpu kavithai

Natpu Kavithai in Tamil:நட்பு கவிதை

நல்ல நண்பர்கள் தான் ஒரு நல்ல வாழ்க்கையின் அடையாளமாக உள்ளனர். ஒரு கஷ்டம் என்று வந்தால் இறைவனிடம் சென்று முறையிடுவதை விடவும் நண்பர்களிடம் சொல்லி ஆறுதல் படுபவர்களே இங்கே அதிகம். எனவே தான் நட்புக்கு அன்றும் இன்றும் என்றும் உலக அளவில் பேராதரவு உள்ளது.

குழந்தையின் நட்பு தொடங்கி வாலிபம் முதல் திருமணம் வரை வயதான காலத்தில் பகிர்ந்து கொள்ள என அனைத்து தளங்களிலும் நட்பின் முகவரியே ஆதரவாகிறது. எனவேதான் இந்த பதிவில் நட்பு கவிதைகளை வரிசைப்படுத்த விரும்புகிறது இந்த வலைப்பதிவு.

நம்ம கூடவே வருவாங்கன்னு நினச்சி பழகும் உறவுகளை விட நமக்கு ஒன்னுன்னா ஓடி வரும் நண்பர் கூட்டம் உயர்ந்தது தான் இந்த உலகில்.

நட்பு என்ற பந்தம் இங்கு இல்லையென்றால் தாய் தந்தை இருந்தும் இங்கு பலர் அனாதையே

Friendship Quotes in Tamil-natpu kavithai

அம்மாவிற்கு பிறகு என்னை பற்றி எல்லாம் தெரிந்தவன் என் நண்பன் தான்…சில நேரங்களில் அம்மாவிற்கும் தெரியாத ரகசியங்கள் தெரிந்தவனும் என் நண்பன் தான்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாங்கி பிடிக்க நண்பன் என்ற உறவு இல்லையென்றால் இரும்பு மனிதனுக்கும் இதயம் நொருங்கி தான்போகும்….

எட்டி மிதிக்கும் உறவுகளுக்கிடையே எதையும் எதிர்பார்க்காத நட்பு அதிசயமே

Friendship Quotes in Tamil-natpu kavithai

வரையறைகள் இல்லாத உறவாக இருந்தாலும் வரம்பு மீறாத உறவாக நட்பு எப்பொழுதுமே சிறந்து நிற்கும்….

Tamil Quotes About Friendship – நட்பு கவிதை:

நட்பு என்ற வார்த்தையில் ஒரு வாழ்க்கையே அடக்கி விட முடியும் என்பதற்கு உதாரணங்களும் எடுத்துக்காட்டுகளும் இந்த உலகில் நிறையவே இருக்கின்றன நட்பால் உயர்ந்தவர்கள் ஏராளம். சில நேரங்களில் காதலை விடவும் நட்பு உயர்வாக கருதப்படுகிறது ஏனென்றால் நட்பு உண்மையிலேயே உயர்வானது தான்.

தோல்வியிலும் வெற்றிலும் துன்பத்திலும் இன்பத்திலும் துரோகத்திலும் உடன் இருக்கும் நட்பிற்கு எப்பொழுதுமே முதல் மரியாதை தான்.

நண்பனின் தங்கை எனக்கும் தங்கை தான் என்ற எண்ணத்தில் உயர்ந்து நிற்கிறான் நண்பன்.

இளமை காலம் இனிமையாக கடந்து செல்ல நட்பு வட்டம் நம்மைச் சுற்றி இருந்தால் போதும்.

Friendship Quotes in Tamil-natpu kavithai

நட்பு என்ற வார்த்தை இந்த உலகில் உலவும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை.

கஷ்டம் வந்தா கடவுள் கிட்ட போறவங்கள விட நண்பர்கள் கிட்ட போறவங்க தான் அதிகம்.

மகிழ்ச்சி என்ற வார்த்தையின் முகவரி நட்பு தான்

நண்பனுக்கு ஒரு கவிதை:

நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் உடன் இருக்கும் நண்பனுக்கு வாழ்த்துச் சொல்லக் கூட நமக்கு தோன்றுவதே இல்லை. ஏனென்றால் அதை அவன் எதிர்பார்ப்பதும் இல்லை.

எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி இந்த மண்ணில் ஒரு உறவு நம் உடன் இருக்கும் என்றால் அது நட்பு ஒன்று மட்டுமே எனவே தான் நண்பனுக்கும் கோயில் கட்ட வேண்டும் என்ற ஆதரவு குரல்கள் எழுகிறது இன்றளவும்.

Friendship Quotes in Tamil-natpu kavithai

வாழ்க்கையின் ஏதோ ஒரு நிலையில் நட்பு தான் எல்லாத்தையும் விட மேலான ஒரு உறவு என்று மனிதனுக்கு நிச்சயம் தோன்றும்

என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்று புலம்புவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

எவ்வளவு சண்டை போட்டாலும் பிரிவும் முறிவும் வராத ஒரே உறவு நட்பு மட்டும் தான்

Friendship Thoughts in Tamil:

துரியோதனன் தவறானவன் என்று தெரிந்தும் தன்னுடைய இறுதி மூச்சு வரை அவன் அருகிலேயே இருந்து அவனுக்கு அரணாக வாழ்ந்து மடிந்த கர்ணனின் உள்ளத்தில் இருந்த உறவு தான் என்ன அதுதான் நட்பு நண்பனுக்கு ஒன்னுனா உயிரையும் கொடுக்க இன்னொரு நண்பனால் மட்டுமே முடியும்.

ஏழேழு ஜென்மத்திலும் உன்னை பிரிய மாட்டேன் என்று உறுதி கூறி கரம் கோர்க்கும் கணவன் மனைவி கூட பிரிந்து போகும் இந்த காலத்திலும் ,பிரிவு என்ற சொல்லே இல்லாத நட்பு அனைத்திலும் அழகானது தானே… இந்தஅகிலத்தில்

Friendship Quotes in Tamil-natpu kavithai

ஆண்-பெண் என்ற எந்த பேதமும் பாராட்டாத உறவு நட்பு மட்டுமே…..

நட்பு எவ்வளவு உயர்வானது என்று நாம் கஷ்டப்படும் பொழுதுதான் தெரியும்.

நட்பு கவிதை – Natpu Kavithai in Tamil:

ஏண்டா? இதை செய்ற அவனுக்கு, அப்படின்னு கேட்டா? அவன் என் நண்பன்டா! என்ற ஒரே வார்த்தை பதிலாகிறது. வேற எந்த உறவிலும் இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்கவே முடியாது கேட்பதும் அரிதாகவே உள்ளது எனவே தான் நட்புக்கு இன்றளவும் தனி மரியாதை.

பெற்றோர் கூட தங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் இடத்தில் மிகவும் அன்புடன் இருப்பார்கள் பரிவுடன் இருப்பார்கள் ஏனென்றால் தன் பிள்ளையை தங்களை விட அதிகமாக கவனித்துக் கொள்வது அவர்களுடைய நண்பர்கள் தான் என்பதை உணர்ந்துதான்.

நட்பில்லா வாழ்க்கை வண்ணங்கள் இல்லாத வானவில்; வந்தும் பயனில்லை,அதுபோல் தான் நட்பில்லாமல் வாழ்ந்தும் பயனில்லை.

இங்கு பல நல்ல காரியங்களின் பின்னால் நட்பு என்ற உணர்வு ஒளிந்திருக்கிறது.

நட்பு என்பது இறைவன் கொடுக்கும் வரம் அல்ல;இறைவனுக்கே கிடைக்காத வரம்

Friendship Quotes in Tamil-natpu kavithai

Status ஐயும் savings ஐயும் பார்த்து பழகும் உறவுகளுக்கிடைய குணத்தையும் மனதையும் பார்த்து பழகும் நட்பு சிறந்ததே

Uyir Natpu Kavithai in Tamil – Girls Friendship Quotes in Tamil:

வாழ்க்கையின் வேர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குவது நட்பு எனும் நீருற்று…..

வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் இளைப்பாற நண்பனின் நிழல் நிச்சயம் தேவை….

Friendship Quotes in Tamil-natpu kavithai

மலரின் வாசமாய் மதியின் ஒளியாய் உடலின் நிழலாய் ஒட்டியிருப்பது நம் நட்பு….

எத்தனை வயதானாலும் மரியாதை மட்டும் கிடைக்காது, நண்பர்களிடத்தில்…

தேவைக்கு பழகும் தேவையில்லாத உறவுகளை விட, எதிர்பார்ப்பில்லாமல் எதார்த்தமாய் பேசும் நட்பு உயர்வானது…

இலக்கணம் இல்லாத உறவும், தலைக்கணம் கொள்ளாத உணர்வும் நண்பனுடையது….

Best Friendship Quotes in Tamil – நட்பு கவிதை:

Friendship Quotes in Tamil-natpu kavithai

மாமன் மச்சான் என்ற வார்த்தையில் ஒரு நட்பு, மலையளவு சோகத்தையும் மறக்கவைக்கிறது…

முகமோ முகவரியோ முடிவோ இல்லாதது தான் நட்பு

இந்த உலகில் மிகவும் வலிமையான தோள்கள் நண்பனுடையது.

நண்பன் வைத்த பட்டப்பெயர் தான் நினைவுக்கு வருகிறது,பட்டப்படிப்பு முடித்த பிறகும்.

நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும் ,நான் அழுதால் என் கண்ணீரிலும் எனக்காய் நிற்பவன் என் நண்பனே….

நட்பு எனும் முகவரியில் அடையாளம் செய்து கொள்ளவே ஆசை கொள்கிறது உள்ளம்.

எங்களுக்குள் பகிர்ந்து கொள்ளாதது என்று எதுவும் இல்லை…

நமக்கொன்னு னா நண்பன் வருவாங்குற நம்பிக்கை தாங்க நட்பு…

நாம செய்யுற தப்ப நம்ம கிட்ட மட்டும் சொல்லி புரிய வைக்கிற நட்பு கிடச்சுட்டா வாழ்க்கை வரம்தாங்க…

Friendship Quotes in Tamil-natpu kavithai

கடவுளுக்கு கூட இல்லாத ஒரு உறவு நட்பு;இதுவே மனித இனத்தின் சிறப்பு

Uyir Natpu Kavithai in Tamil – உயிர் நட்பு கவிதை:

நம்மில் இருக்கும் நல்லதை மட்டும் பார்ப்பவன் நண்பன்;நம்மிடம் இருக்கும் தீயவற்றை நம்மிடம் மட்டும் சொல்பவன் உண்மையான நண்பன்

வாழ்க்கையில் பெற்றவரின் துணை வீட்டு வாசலோடு நின்று விடுகிறது;நண்பனின் துணை வெற்றியின் வாசல் வரை நீளுகிறது…

நட்பில் சுகம் உண்டு;சுமைகள் இல்லை;வரம் உண்டு;வலிகள் இல்லை

Friendship Quotes in Tamil-natpu kavithai

நம்பிக்கை என்ற வார்த்தை பல நேரங்களில் நண்பன் என்ற வார்த்தையோடு ஒத்துப் போவதுண்டு

காலம் கடந்தும் நம்மை‌ நெகிழ வைப்பது நண்பர்களுடன் இருந்த தருணங்களே

இதயங்கள் இணைந்தால் அது காதலாகிறது.இந்த காதல் காலம் முழுவதும் தொடர இருவருள் இருக்கும் நட்பே பாலமாகிறது.

Friendship Quotes in Tamil-natpu kavithai

நட்பென்பது மலரல்ல வாடுவதற்கு நட்பென்பது கண்ணாடியல்ல உடைவதற்கு நட்பென்பது காதலுமல்ல பிரிவதற்கு நட்பென்பது இடைவெளியும் இடர்பாடுகளும் இல்லாத நீண்ட பயணம்….

வாழ்க்கையின் நீளமும் நட்பின் நீளமும் ஒன்று தான் பயணங்கள் முடிவதில்லை

நட்பின் துணையில் நகர்கிறது இங்கு பலரின் வாழ்க்கை

கண்ணை மறைக்கும் காதலை விடகற்றுக் கொடுக்கும் நட்பு உன்னதமானது

Friendship Quotes in Tamil-natpu kavithai

நம் வாழ்க்கையில் பலனை எதிர்பார்க்காமல் பங்களிப்பது நண்பர்கள் மட்டுமே…

நட்பின் முன்னால் ஏனோ அனைத்து உறவுகளும் தோற்று போகின்றன…

எவ்வளவு உறவுகள் இருந்தாலும் எதற்கெடுத்தாலும் இதயம் நாடுவது நண்பர்களை மட்டுமே…

எனக்கொன்னு னா என் நண்பன் வருவான் என்கிற நம்பிக்கை தாங்க நட்பு

Friendship Quotes in Tamil-natpu kavithai

விவரம் தெரிந்த பின் பெற்றோருடன் பேசியதை விட, நண்பர்களுடன் பேசியது தான் அதிகம்

School Friendship quotes in Tamil:

பள்ளியின் தேனீர் இடைவேளையில் தேன் முட்டாயும் தேங்காய் முட்டாயும் நண்பர்களுடன் வாங்கி தின்ற தேயாத நியாபகங்கள்…ஓயாத அலைகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தள்ளாடும் வயதில்….

பள்ளி பருவ நினைவுகள் எல்லாம் நியாபகமாய் இருப்பதற்கு நண்பர்களின் பங்கே அதிகம்….

பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் வாங்கி சாப்பிட்ட தேன்முட்டாயை விட இனித்தது…எங்கள் மகிழ்ச்சி தான்…

நண்பன் கவிதை – நட்பு கவிதை:

விட்றா மச்சான்னு சொன்னா…மறையாத வலிகள் என்று எதுவும் இல்லை நட்பில்….

நான் மகிழ்ச்சியாக இருந்த நொடிகளை நினைத்து பார்த்தால் அதில் பாதி என் நண்பர்களுடன் இருந்த நேரமாகத்தான் இருக்கிறது.

Friendship Quotes in Tamil-natpu kavithai

நம்பிக்கையை காப்பாற்றுபவனே நண்பன்..

காசும் பணமும்காணாமல் போனது கடந்தகால நண்பர்களை பார்க்கும் பொழுது…

நண்பனின் காதலியை தன் தங்கையாய் பார்க்கும் நண்பனின். கண்ணியமே உயர்வானது. உலகில்….

வெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட இருட்டில் நண்பர்களுடன் நடப்பது சுகமானது

இந்த உலகில். மதிப்பு மிக்க ஒன்று. உண்மையான நட்பே…

எல்லோரும் கைவிட்ட பிறகு நம்பிக்கை தரும் உறவு நட்பு மட்டுமே

Friendship Quotes in Tamil-natpu kavithai

நைட் 2 மணிக்கு Call பண்ணாலும் அத அட்டண்ட் பண்ணா அவன் நண்பனா மட்டும் தான் இருக்க முடியும்

வாழ்க்கையில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி துன்பத்தை பாதியாக்கும் நண்பர்கள் கிடைத்தால் அதுவே பெரிய வரமாகும்…

ஏன் பிறந்தோம் என்ற கேள்வி நண்பர்களுடன் இருக்கும்போது மட்டும் தோன்றுவதே இல்லை…

இங்கு பலரின் கண்ணீரை துடைப்பது நண்பர்களின் கரங்களே.

Friendship Quotes in Tamil-natpu kavithai

மச்சான் எனக்காக டா…என்றால் எதையும் செய்வான்…அவன் என் நண்பன்

உயிரை போக்கும் உறவுகளுக்கிடையே உயிரைக் கொடுக்கும் ஒரு உறவு நட்பு

பள்ளி நட்பு கல்லூரிக்கு செல்லும் போது பங்காளி என்றாகி விடுகிறது…

என் திறமையை எனக்கு அடையாளம் காட்டிய முதல் நபர் என் நண்பன்.

நான் அழும்போது என் கண்ணீரை துடைத்த கைகள் யாருடையது என்று என் கண்ணீருக்கு தெரியும் என் நண்பனுடையது என்று…

நண்பனின் தோள்களே உலகத்தில் வலிமையானவை…

அழுகை வந்தால் என் கண்ணீரை தாங்கும் கைகள் என் நண்பனுடையது…

நண்பர்களுடன் அரட்டை அடிப்பதை போல ஆனந்தம் வேறு எதிலும் கிடைப்பதில்லை…

ஆறுதல் சொல்லவும் அரவணைத்து செல்லவும் அரட்டை அடிக்கவும் நண்பர்கள் இல்லாதவர்கள் உண்மையில் அனாதைகள் தான்….

இளமைக் காலத்து. துன்பங்களை முதலில் பகிர்வது நண்பனிடத்தில் தான்….

TAMIL KAVITHAI

Leave a Comment