தில்லையாடி வள்ளியம்மை வரலாறு – History of Thillaiyadi Valliyamai

By TAMIL KAVITHAI

Published on:

தென்னாப்பிரிக்க நாட்டில் தமிழ்நாட்டு பெண்மணி ஆங்கிலேயர்களுக்கு எதிராக அற வழியில் போராடி உயிர் நீத்தார் என்ற வீர வரலாற்றை இந்த பதிவானது விளக்குகிறது. ஆம் தில்லையாடி வள்ளியம்மை எனும் பெயர் பெற்ற வீரமங்கை தென்னாப்பிரிக்காவில் ஒரு சட்டத்தை அதாவது மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து போராடி தன்னுடைய இன்னுயிரை இழந்தார்.அவருடைய வரலாறை இந்த பதிவில் நாம் விவரிக்கலாம்.

தில்லையாடி வள்ளியம்மையின் பிறப்பும் பெற்றோரும்:

முனுசாமி மற்றும் மங்கலம் என்ற மணமக்களுக்கு 1898 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்த குழந்தையே வள்ளியம்மை ஆவார் இவரது தந்தை யார் முனுசாமி அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த நெசவாளி ஆவார் அதேபோல் தாயார் மங்கலம் அம்மாள் தில்லையாடி எனும் ஊரில் பிறந்தவர் பிற்காலத்தில் வள்ளியம்மைக்கு தில்லையாடி வள்ளியம்மை என்று பெயர் வருவதற்கு அவருடைய தாயாரின் சொந்த ஊரே காரணமாகிறது.

நெசவுத் தொழிலில் பெரிதளவு லாபம் இல்லாமல் போனதால் வறுமையில் வாடினார்கள் முனுசாமி மற்றும் மங்கலம் அம்மாள். அதனால் தன்னுடைய குடும்பத்துடன் அவர் தென்னாப்பிரிக்காவிற்கு வேலை தேடிச் சென்றார்.

அங்கே ஜோன்ஸ் ஸ்பர்க் என்ற நகரில் ஒரு சிறிய அளவிலான துணிக்கடை ஒன்றை நடத்தினார். இந்த நிலையில்தான் வீரமங்கையான வள்ளியம்மை பிறந்தார்.

வள்ளியம்மை அறப்போராட்டத்தில் ஈடுபட காரணம்:

1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டின் திருமண பதிவு சட்டத்தின் படியும் கிறிஸ்துவ மத சட்டத்தின்படியும் திருமணம் நடைபெற்றால் மட்டுமே அந்த திருமணமானது செல்லும் அப்படி இல்லை என்றால் மற்ற வழியில் நடைபெற்ற திருமணங்கள் எதுவும் செல்லாது என்ற சட்டத்தை அந்த நாட்டு அரசனது கொண்டு வந்தது.

அப்பொழுது அங்கிருந்த காந்தியடிகள் இந்த சட்டத்திற்கு எதிராக அறவழியில் தலைமை ஏற்று போராடத் தொடங்கினார் ஏனென்றால் இந்த சட்டமானது இந்தியர்களின் வாழ்வுரிமையை தென்னாப்பிரிக்காவில் முழுவதுமாக பறிப்பதாக இருந்தது.

காந்தியடிகளின் கருத்தின் பால் கவரப்பட்ட வள்ளியம்மை அவருடன் இணைந்து அறப்போராட்டத்தில் முழுவதுமாக முனைப்புடன் பங்கேற்றார். வால்க்ரெஸ்ட் எனும் இடத்தில் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திங்கள் கிழமை 23ஆம் நாள் அறப்போராட்டம் ஒன்று நடைபெற்றது அதில் வள்ளியம்மையும் கலந்து கொண்டிருந்தார் அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்க அரசானது வள்ளியம்மையை கைது செய்தது.

தில்லையாடி வள்ளியம்மையின் சிறைவாசம்:

CompressJPEG.Online 1 85kb 9513

அப்பொழுது மூன்று மாதம் மட்டும் வள்ளியம்மைக்கு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. சிறையில் மிகவும் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டார் வள்ளியம்மை அத்தோடு மண்ணும் கல்லும் கலந்த உணவே அவருக்கு வழங்கப்பட்டது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் வள்ளியம்மை உயிருக்கு போராடிய நிலையிலே சிறையில் இருந்து வெளியே வந்தார் வள்ளியம்மை.

வள்ளியம்மையின் நாட்டுப்பற்று:

வள்ளியம்மை சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை பார்ப்பதற்காக காந்தியடிகள் வந்தார் அப்பொழுது சிறையில் அனுபவித்த கொடுமைகளால் காய்ச்சல் அதாவது தீவிர காய்ச்சல் வந்து உடல் மெலிந்து நைந்து கிடந்தார் வள்ளியம்மை. வள்ளியம்மையை பார்த்து கண்கலங்கி நின்றார் காந்தியடிகள்.

உடல் மெலிந்து கிடந்த வள்ளியமையை பார்த்து இந்த சிறை தண்டனைக்காக நீ வருந்துகிறாயா? என்று கேட்டார் காந்தியடிகள். அந்த நிலையிலும் வள்ளியம்மை நான் மீண்டும் கூட சிறை செல்ல தயாராக இருக்கிறேன் என்று பதில் அளித்தார். கொடிய அடக்குமுறை சிறைவாசத்திற்கு ஆளான பிறகும், நோயின் கடுமையனால் துன்புற்றிருந்த அந்த நிலையிலும் வள்ளியம்மை தனது உரிமைப் போராட்ட உணர்வில் இருந்து சிறிதும் மனம் தளர வில்லை.

சிறையில் கடுங்காவல் தண்டனையை அனுபவித்த பிறகும் உடல் அளவிலும் மனதளவிலும் பல காயங்களைப் பெற்ற பிறகும் தன்னுடைய உரிமைக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் ஆனது ஒவ்வொரு பெண்ணிற்கும் இருக்க வேண்டும் என்பது வள்ளியம்மையின் வாழ்க்கையிலிருந்து ஒரு பெண்ணால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய நியதியாகும்.

தில்லையாடி வள்ளியம்மையின் இறப்பு:

மூன்று மாத கடுங்காவல் தண்டனையிலேயே தன்னுடைய வாழ்நாளை இழக்கப் போகிறோம் என்பது தெரியாமலேயே சிறைக்கும் சென்று அங்கு பல கொடுமைகளையும் அனுபவித்து உடலால் பல துன்பங்களை பெற்று இறுதியில் 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள் தன்னுடைய 16 வயதிலேயே இறப்பை தழுவி, வீரமங்கை, வீரப் பெண்மணி, பெண் குலத்தின் அடையாளம் ஆனார் வள்ளியம்மை.

என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் தில்லையாடி வள்ளியம்மையின் மரணமானது என்னை மிகவும் வருத்தியது எனக்கு வள்ளியம்மையின் மரணமானது பேரிடியாக இருந்தது என்று மிகவும் மனம் வருந்தி காந்தியடிகள் கூறினார்.

பெண்களுக்கு அணிகலன்கள் ஆக திகழ்வது துன்பத்தை தாங்கும் மனவலிமை தான் தன்மானம் நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாக தில்லையாடி வள்ளியம்மை திகழ்ந்தார் என்றும் நம்பிக்கை தான் அவருடைய ஆயுதம் என்றும் தில்லையாடி வள்ளியம்மை குறித்து இந்தியன் ஒபினியன் என்ற இதழில் காந்தியடிகள் எழுதியிருந்தார்.

தென்னாப்பிரிக்க வரலாற்றில் தில்லையாடி வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் எனும் நூலில் குறிப்பிட்டு இருந்தார். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றில் அவர் மேற்கொண்ட சத்தியாகிரக போராட்டங்களில் முதலில் களப்பலியாகி அவரை மகாத்மா என்ற உயர்நிலை நோக்கி திருப்பிய பெருமை தில்லையாடி வள்ளியம்மைக்கே உண்டு என்று அவரே குறிப்பிட்டிருந்தார்.

1915 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த மகாத்மா காந்தியடிகள் தமிழ்நாட்டில் தில்லையாடி கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த மண்ணை தன் கண்களில் ஒத்திக்கொண்டார் என்ற நிகழ்வு குறிப்பிடத்தக்கதாகும். தனக்கு முதல் முறையாக மிகப்பெரிய விடுதலை உணர்வு உருவாக காரணம் தில்லையாடி வள்ளியம்மை தான் என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறியுள்ளார்.

தில்லையாடி வள்ளியம்மைக்கு அரசு செய்த சிறப்புகள்:

தமிழ்நாட்டில் உள்ள தில்லையாடி எனும் ஊரில் வள்ளியம்மையின் புகழை நிலைநாட்டும் எண்ணத்தில் அவருடைய சிலையை தமிழக அரசானது நிறுவியுள்ளது. கோ ஆப் டெக்ஸ் நிறுவனமானது தன்னுடைய 600 வது விற்பனை மையத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என்று பெயர் சூட்டி அவருடைய பெருமையினை தெரியப்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பெண் புலிக்குட்டிக்கு தமிழக முதல்வர் தில்லையாடி வள்ளியம்மை நினைவாக வள்ளி என பெயரிட்டு அவருக்கு சிறப்பு செய்துள்ளார்.

இந்தியாவின் புனித மகள்’ என்று காந்தியடிகளால் புகழப்பட்டவர் தில்லையாடி வள்ளியம்மை ஆவார் நெல்சன் மண்டேலாவின் மிகத் தீவிர முயற்சியால் 1997 ஆம் ஆண்டு இவருடைய கல்லறை புதுப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

2015 ஆம் ஆண்டு தில்லையாடி வள்ளியம்மையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது அந்த தினத்தில் தான் இந்திய அரசானது தில்லையாடி வள்ளியம்மைக்கு என்று அஞ்சல் தலை வெளியிட்டு அவரை பெருமைப்படுத்தியது.

வெறும் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சிறுமி இன்றைய காலகட்டத்தில் 16 வயது என்பது ஒரு சிறுமியின் வயதாகும். 16 வயது சிறுமிக்கு இருந்த ஒரு சுதந்திர உணர்வு இந்தியா எனும் 30 கோடி மக்களை கொண்ட ஒரு மிகப்பெரிய நாட்டின் விடுதலைக்கு ஒரு பெரிய நெருப்பாக இருந்தது என்றால் அது மிகையாகாது. காந்தியடிகளின் வார்த்தைகளில் இருந்து தில்லையாடி வள்ளியம்மை எந்த அளவிற்கு விடுதலை உணர்வுடன் இருந்திருந்தார் என்பது அனைவருக்கும் நிச்சயம் புரிந்து இருக்கும்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் தில்லையாடி வள்ளியம்மையின் வாழ்க்கை வரலாறு ஆனது ஒரு தன்னம்பிக்கை தரும் நிகழ்வாகவே இருக்கும்.

தில்லையாடி வள்ளியம்மையின் புகழ் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் நிச்சயம் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

TAMIL KAVITHAI

Leave a Comment