தமிழ்நாட்டின் மறக்க முடியாத மற்றும் மறுக்கவும் முடியாத தலைவர்களும் முதலில் நிற்பவர் ஐயா காமராஜர் அவர்களே ஊர் தோறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி என்று மாபெரும் கல்விப் புரட்சியை தொடங்கியவர் காமராஜர் ஐயா அவர்களே… சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தான் வேலைக்கு செல்கிறோம் என்று கூறிய சிறுவர்களின் வார்த்தைகளால் தாக்கப்பட்டு பின்பு மதிய உணவு என்ற மாபெரும் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் வயிறார ஒரு வேலையாவது உணவு உண்ண வேண்டும் என்று எண்ணினார்.
அத்தகு தலைமை பண்புடன் தாய் பாசத்தையும் ஊட்டியவர் காமராஜர் ஐயா அவர்கள் எனவே அவரைப் பற்றிய கவிதை துளிகள் இங்கே இடம்பெற்றுள்ளன இவற்றை படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஐயா காமராசர், படிக்காத மேதை என பாராட்டை பெற்றவர்;பல படித்த மேதைகளை உருவாக்க பாடுபட்டவர்
மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து மக்களின் மனதில் மாறாத இடத்தை பிடித்தவர்…
ஊர் தோறும் பள்ளிகளை திறந்து, பாமர மக்களை படிக்க வைத்த கல்வி தந்தை காமராசர் ஐயா!
கல்வி கண் திறந்தவர் என்று தமிழக மக்களால் புகழப்படும் ஒரே தலைவர் …. காமராசர் ஐயா
தனக்கென எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர்,தமிழ்நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்தவர்…
காமராசர் கட்டிய அணைகள் தான் இன்று தமிழகத்திற்கே உயிர் நீராய் இருக்கிறது…
கல்வி கண் திறந்த வள்ளல் கவிதை || Kamarajar kavithai in tamil 10 lines
காமராஜர் ஐயா காலத்தில் கட்டிய அணைகளால் மட்டுமே இன்றளவும் தமிழ்நாட்டின் பெரும்பாலான நீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன .தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு என்னவெல்லாம் தேவை என்பதை முன்கூட்டியே கணித்து அதற்காக மிகவும் தீவிரமாய் செயல்பட்ட ஒரே தலைவர் காமராஜர் ஐயா அவர்கள் மட்டுமே .அவர்களைப் பற்றிய இந்த கவிதைகளை வாசித்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தன்னலமற்ற தங்க மகன்,ஈடு இணையற்ற ஒரே தலைவர் ஐயா காமராசர் மட்டுமே…
தமிழ்நாட்டின் தங்கம்,இந்தியாவின் சிங்கம் என்றும் எங்கள் இதயத்தில் வாழும் காமராசர் ஐயா வாழ்க….
கதர் சட்டை அணிந்த காந்தி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்….கரை படியா கைகளுக்கு சொந்தக்காரர் ஐயா காமராசர்
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தலைமையாய் செயல்பட்டது காமராசர் ஐயா ஆட்சி தான்….
வரலாறு மறந்து போவதில்லை,வரலாற்றை எழுதியவர்களை….
கருப்பு காந்தி கவிதை || படிக்காத மேதை கவிதை
காமராசர் படிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிள்ளையும் படிக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு அதற்காக பாடுபட்டவர் தான் ஐயா. இன்று தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி ஆனது இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாகவே உள்ளது. இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் காமராசர் ஐயா விதைத்த விதைதான்.
ஏழை மாணவர்கள் எதனால் படிக்க வரவில்லை என்பதை கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் கொடுத்து அவர்களை படிக்க வைத்தவர் ஐயா காமராஜர் அவர்களே. அவருடைய வழியை பின்பற்றி அடுத்து வந்த தலைவர்கள் எல்லாம் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி பின்பு காலை உணவு திட்டம் வரை கொண்டு வந்ததால் இன்று தமிழ்நாட்டில் கல்வியின் வளர்ச்சியானது மிகவும் அதிகமாகவே உள்ளது.
தமிழ்நாட்டின் பொற்காலம் என்று பொதுமக்களால் கொண்டாடப்படும் ஆட்சி ஐயா காமராசருடையது தான்…
வரலாற்றில் லஞ்சம்,ஊழல் என்ற வார்த்தைகள் எழுதப்படாத காலம் காமராசர் ஐயாவின் ஆட்சி தான்…
தன்னை தானே செதுக்கி கொள்ள வேண்டும் என்று எண்ணுவோர் மத்தியில் தமிழ்நாட்டையே செதுக்கியவர் ஐயா காமராசர்
தமிழ்நாட்டின் வரலாறு தலைநிமிர்ந்தது தங்கமகனான காமராசர் ஆட்சியில் தான்…
தனக்கென ஒரு இடம் கூட வாங்கிக் கொள்ளாமல்…மக்களின் மனதில் தனித்து வாழ்பவர் ஐயா காமராசர் அவர்கள்….
கல்வி தந்தை கவிதை || காமராசர் அரசியல் தலைவர் கவிதை
மாவட்டம் தோறும் தொழிர்பேட்டைகளை உருவாக்கி மக்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தியதும் ஐயா காமராஜரின் காலத்தில் தான் மக்களுக்கு என்னவெல்லாம் முக்கியம் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தியவர் ஐயா காமராஜர் தான்.
தமிழ்நாட்டின் பெயரை இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க தெரியப்படுத்தியவர் காமராஜர் ஐயா தான். எனவே தான் காமராஜர் ஐயாவிற்கு இந்திய அளவிலும் உலக அளவில் தனி இடம் உண்டு. வரலாற்று புத்தகங்களில் தனக்கான பக்கத்தை தானே எழுதிக் கொண்டவர் ஐயா காமராஜர் அவர்கள்.
ஏழைகளுக்கும் கல்வி எளிதில் கிடைக்க வேண்டும் என்று ஏணிப்படியாய் வாழ்ந்தவர் காமராசர்….
தமிழ்நாடு என்ற பெயர் வரலாற்றில் இடம்பெறும் போதேல்லாம் தலைவன் என்று இவர் பெயரும் இடம்பெறும்….. காமராஜர்
ஒன்பது ஆண்டுகளே ஆட்சியில் இருந்தாலும் ஒளிமயமான எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதைகளையும் விதைத்தவர் ஐயா காமராசர் அவர்கள்
தமிழ்நாடு இதற்கு மேல் இப்படி ஒரு தலைவனை பார்க்குமா என்பது கேள்விக்குறி தான்?
மாடுமேய்க்கும் சிறுவர்களை மாணவர்களாய் மாற்றிய பெருமை இந்த மகானுக்கே உண்டு…
கல்வி வளர்ச்சி நாள் கவிதை || கறைபடியா கரங்கள் கவிதை 30 வரிகள்
தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாமல் ஏன்? திருமணம் மனைவி மக்கள் என்று எவரையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தமிழ்நாட்டிற்காகவே தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கர்மவீரர் என்றால் அது காமராசர் ஐயா தான். தாய் நாட்டிற்காக எல்லாவற்றையும் விளக்க ஒரு தலைவனால் முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் ஐயா காமராஜர் அவர்களே எனவே தான் வரலாறு அவரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.
ஏதோ பிறந்தோம் ஏனோ வளர்ந்தோம் என்று இல்லாமல் எல்லோருக்கும் பயனுள்ளதான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் காமராஜர் ஐயா அவர்கள்…
படிக்க வந்தால் யார்? சோறு போடுவார்கள் என்ற ஒற்றை கேள்விக்கு பதிலாக தமிழ்நாட்டு குழந்தைகள் அனைவருக்கும் சோறு போட்டு படிக்க வைத்தவர்…
தமிழ்நாட்டை உலகறியச் செய்த பெருமை உத்தமர் இவர் ஒருவருக்கே உண்டு….
கல்வி எனும் செல்வத்தை அள்ளி கொடுத்தவர்;கல்வியே நல் எதிர்காலம் என்று சொல்லிக் கொடுத்தவர்…
ஊர்தோறும் தொடக்கப்பள்ளி என்று உறுதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டவர் ஐயா காமராசர்
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரே தலைவர் ஐயா காமராசர் அவர்கள்