பணம் பற்றிய தத்துவங்கள்-Panam Quotes in Tamil

By TAMIL KAVITHAI

Published on:

இந்த உலகமே சுழல்வது பணத்தால் தான் என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை. ஒவ்வொருவரும் தான் வாழ்வதற்கான பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதன் சுழற்சியாய் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளாக இருப்பது பணம் சம்பாதிப்பது மட்டுமே. இதில் வெகு சிலரே சற்று மாறுபடுவார்கள். பணம் என்னும் வார்த்தையால் மாறிப்போனவர்களின் வாழ்க்கை எத்தனையோ? பணத்தால் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள்! விழுந்தவர்கள் இருக்கிறார்கள்! பணத்தை தேடி அலைபவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்! பணத்தால் அவமானப்பட்டவர்கள் அவதிப்பட்டவர்கள் அவஸ்தைபட்டவர்கள் ஏராளம் அவர்களுடைய மனக்குமுறல்களை சில கவிதைகளாகவும் தத்துவங்களாகவும் இந்த பதிவானது தருகிறது.

Sad Panam quotes in Tamil

பணத்தால் எதையும் வாங்கலாம் மகிழ்ச்சியை வாங்க முடியாது

Panam Quotes in Tamil

சம்பாதிக்காத எந்த ஒரு ஆணையும் பெண்கள் மதிப்பதில்லை

பணத்தால் வாங்க முடியாத ஒன்று இந்த உலகில் இருக்கும் வரை, நீங்கள் பணக்காரர் அல்ல.

பணம் மனிதன் கண்டுபிடித்த ஏழாம் அறிவு,அது இல்லாமல் மற்ற ஆறையும் பயன்படுத்த முடியாது

பணக்காரனின் இல்லம் திறந்திருக்கும்;இதயம் பூட்டியிருக்கும்

Panam Quotes in Tamil

பணக்காரனுக்கு மரியாதை இல்லை, அவனிடம் இருக்கும் பணத்திற்கு தான் மரியாதை.

Kasu Panam Quotes in Tamil

ஒவ்வொரும் தங்கள் வாழ்க்கையில் பணத்தால் ஏதேனும் ஒரு அனுபவத்தை பெற்றிருப்பார்கள் அதுவே அவர்களை மேலும் மேலும் பணத்தைத் தேடி ஓட செய்கிறது அது நல்ல அனுபவமாகவும் இருக்கலாம் கெட்ட அனுபவமாகவும் இருக்கலாம் சொல்லப்போனால் பணத்தால் அவர்கள் மரியாதையை பெற்றிருக்கலாம் அதே சமயம் அந்தப் பணம் இல்லாமல் மரியாதை கிடைக்காமல் போய் இருக்கலாம் எனவேதான் ஒவ்வொருவருக்குள்ளும் பணத்தின் மீதான ஈர்ப்பு என்பது அதிகமாகவே இருக்கிறது… அதை எப்படியாவது அடைந்தே ஆக வேண்டும் என்ற ஆசையும் குணாதிசயமும் அவர்களை எந்த வழியில் வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற ஒரு மனநிலைக்கு கொண்டு செல்கிறது.

Panam Quotes in Tamil

நிறைய பணத்துடன் ஏழையாக வாழ விரும்புங்கள்.அதுவே நிம்மதியான வாழ்க்கை

பணம் இருப்பவன் பட்டு மெத்தையில் தூங்குகிறான். பணம் இல்லாதவன் பாய் விரித்து படுக்கிறான். ஆனால் உறக்கத்திற்கும் பணத்திற்கும் சம்பந்தமில்லை என்று உணர்பவன் எவனோ? அவனே பணக்காரன்.

பணத்தை வைத்து ஒரு நல்ல நாயை வாங்கலாம் ஆனால் அதை நம் இஷ்டத்திற்கு வாலாட்ட வைக்க முடியாது.

Panam Quotes in Tamil

உண்டியலில் விழும் காசில் தான் உயிர் வாழ்கிறார்கள் கடவுள்களும்

இரத்த சொந்தங்கள் கூட அத்துப்போவது இந்த பணத்தினால் தான்!

நம்ம வாழ்வதற்கு பணம் குறைவாகத் தான் தேவைப்படுகிறது; மற்றவர்கள் போல வாழ்வதற்கு தான் பணம் அதிகமாக தேவைப்படுகிறது.

Panam Quotes in Tamil

பணப் பற்றாக்குறையே எல்லாத் தீமைக்கும் அடிப்படை

Pain Money Quotes in Tamil || Relative Money Quotes

பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக சொந்தக்காரர்களின் மத்தியில் சரியான மரியாதை கிடைக்காமல் எத்தனையோ பேர் மனதிற்குள்ளேயே புலம்பி கொண்டிருக்கிறார்கள். ஏன் உறவுக்காரர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்? ரத்த சொந்தங்களே இன்றைய காலகட்டத்தில் பணம் இல்லாத நேரத்தில் நெருங்குவதற்கு கூட யோசிக்கின்றனர். பணமில்லாமல் இன்றைய காலகட்டத்தில் எதையும் எளிதாக பெற முடியாத சூழலே நிலவுகிறது. பணம் தரும் வலி கொடியது.

Panam Quotes in Tamil

பேராசை ஒரு நிதி பிரச்சினை அல்ல. அது ஒரு மனப் பிரச்சினை.

பணம் இல்லாதவனுக்கு பணம் மட்டுமே பிரச்சனை: பணம் இருப்பவனுக்கு மனம் முழுவதும் பிரச்சனை

இவன் பணக்காரன் என்பதை விட, நல்லவன் என்ற பெயரே உயர்ந்தது

Panam Quotes in Tamil

கையில் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் இதயத்தில் பணத்தை வைக்க கூடாது

பணம் ஒரு கருவி மட்டுமே. நீங்கள் விரும்பும் இடத்திற்கு இது உங்களை அழைத்துச் செல்லும், ஆனால் அது உங்களை ஆக்கப்பூர்வமாக மாற்றாது

ஒரு சிறிய சிந்தனை மற்றும் ஒரு சிறிய கருணை பெரும்பாலும் பெரிய பண ஒப்பந்தத்தை விட மதிப்புடையது.

Selfish Money Quotes in Tamil || Uravugal Panam Kavithai

Panam Quotes in Tamil

பணம் சுயநலத்தை வளர்க்கிறது. தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற மனநிலையை அதிகப்படியான பணம் உருவாக்கிறது. அதிலிருந்து மாறுபட்டு வெகு சிலர் மட்டுமே இல்லாதவர்களுக்கும் அதை கொடுக்க வேண்டும், அவர்களும் வாழ்க்கையில் வளர வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர். பணம் அதிகமாக புழங்கும் இடம் எப்பொழுதும் தவறானதாகவே இருக்கும். ஏனென்றால் நல்வழியில் அவ்வளவு எளிதாக பணத்தை சம்பாதித்து விட முடியாது அது மிகவும் கடினமான பாதையாகும்.

பணம் இல்லாதவர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே பிரச்சனையாக இருக்கும்;ஆனால் பணம் இருப்பவர்களுக்கு எல்லாமே பிரச்சனையாக இருக்கும்.

பணம் மட்டும் போதும் என்று நினைக்காதீர்கள்; போதும் என்ற மனநிலையோடு பணத்தை வைத்து இருங்கள்

இந்த உலகத்தில் இருப்பதெல்லாம் இரண்டே ஜாதி தான் ஒன்று பணம் சம்பாதிப்பவன்; மற்றொன்று பணத்தை இழப்பவன்.

Panam Quotes in Tamil

பணம் இங்கு எல்லோருக்கும் கிடைப்பதில்லை, ஏனென்றால் ஒருவன் இழந்ததையே ஒருவன் பெறுகிறான்.

கருவறையிலிருந்து வெளியே வரவும் காசு தான்; எல்லாம் முடிந்து கல்லறைக்கு போகவும் காசு தான்;கலியுக கடவுளும் காசு தான்

பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பார்கள் இப்பொழுது பணம் பாராளுமன்றம் வரைக்கும் பாயும் என்பதே உண்மை.

பணம் சம்பாதிப்பதை விட பணத்தை செலவு செய்வது மிகவும் கடினம்.

Panam Quotes in Tamil

Panam Quotes in Tamil Images || Family Money Quotes in Tamil

ஒரு ஆணின் பாதி வாழ்க்கை, தன் குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்காகவே செலவிடப்படுகிறது. ஒரு ஆணின் வாழ்க்கை பயணமானது பணத்தை நம்பியே உள்ளது. ஒரு ஆண் இந்த பணத்தினால் நிச்சயம் பெரிதளவு அவஸ்தைப்படுகிறான் என்பதே உண்மை. வருமானம் இல்லாமல் அவனால் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியாது அந்த பணத்திற்காக தனக்கு பிடிக்காத ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஏராளமான ஆண்கள்.

ஒரு நாளாவது அவனை போல் பணக்காரனாக இருந்து விட வேண்டும் என்பது ஏழையுடைய எண்ணம்;ஒரு நாளாவது அவனை நிம்மதியாக இருந்துவிட வேண்டும் என்பது பணக்காரனினுடை எண்ணம்

Panam Quotes in Tamil

போதும் என்று சொல்ல முடியாது, இந்த பணத்தை யாராலும்

பணத்திற்கு மரியாதை இல்லை என்பார்கள்;ஆனால் பணம் தான் எல்லாம் என்பார்கள்

பணத்திற்கு கொடுக்கும் மதிப்பை யாரும் மனதிற்கு கொடுப்பதில்லை

உன்னுடைய மதிப்பை நீ பிறரிடம் கடன் கேட்கும் போதே அறிவாய்;பணத்தின் மதிப்பை இல்லாத போதே தெரிந்து கொள்வாய்

தவறான வழியில் சம்பாதிக்கும் பணம் தரும் வசதியை விட சரியான வழியில் கிடைக்கும் குறைவான பணம் சிறந்தது.

பணமே எனக்கு பிடிக்காது என்பார்கள்;ஆனால் அது மற்றவர்களிடம் இருக்கும் போது மட்டும்.

கொடுத்து உதவ மனம் இருக்காது,ஆனால் அவர்களிடத்தில் தான் பை நிறைய பணம் இருக்கும்

Panam Quotes in Tamil

தேவைக்கு அதிகமாக சேர்க்கும் பணம் உங்கள் தூக்கத்தை கெடுக்கும்

பணமும் மகிழ்ச்சியும் எலியும் பூனையும் போல் இருவரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது.

காசு இல்லாதவனுக்கு கடவுள் கூட காட்சி தர மறுக்கிறார்

Manithargal Panam Quotes in Tamil || feeling Panam Kavithai

Panam Quotes in Tamil

கடன் கேட்கும் பொழுது தான் ஒருவர் நம்மை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஏனென்றால் பணமே இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனுடைய மதிப்பை முடிவு செய்கிறது. குணம் இருந்தால் போதும் என்றது அந்த காலம். பணமிருந்தால் தான் வாழ்க்கை ஓடும் என்பது இந்த காலம். ஏனென்றால் பணத்தை அனைவரும் துரத்துகிறார்கள் ஆனால் எல்லோராலும் அதை பிடித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் பணம் காற்றைப் போல உங்களால் அதை பயன்படுத்தி மூச்சு விட முடிகிறது தவிர அதை சேர்த்து வைக்க எல்லோராலும் முடிவதில்லை.

கொடுப்பவனிடம் பணம் இருப்பதில்லை;இருப்பவனுக்கு கொடுக்க மனமில்லை

பணம் இருப்பவன் நினைத்தால், தோல்வியை வெற்றியால் கலாம் வெற்றியை தோல்வியாக்கலாம்.

எலும்பு துண்டுக்கு நாய் வாலாட்டுவதை போல,பணத்திற்கு தலையாட்டுகிறார்கள் சில மனிதர்கள்

Panam Quotes in Tamil

கூட இருப்பவனும் குழி பரிப்பான்;கூடை நிறைய பணம் கிடைக்கும் என்றால்,கடைசியில் குழிக்குள் தான் போக போகிறோம் என்பது தெரியாமல்

பணத்தை தவறான வழியில் சம்பாதிக்கிறார்கள்;அதே சமயம் பணம் தவறானவர்களை உருவாக்குகிறது.

பணமும் சுதந்திரமும் ஒன்று அதை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

Panam Quotes in Tamil

கடன் வாங்குவது மது அருந்துவது போல்,போதை உடனே கிடைக்கும்;அதனுடைய பின்விளைவுகள் பொருமையாக வரும்.

நீங்கள் சம்பாதிப்பதற்கு முன்பு உங்கள் பணத்தை ஒருபோதும் செலவிட வேண்டாம்.

பணம் எப்போதும் இருக்கும் ஆனால் இருக்கும் பாக்கெட்டுகள் மாறும்

Panam Quotes in Tamil

தற்காலத்தில் விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்துவது பணம்.

Wrong Money Quotes in Tamil || Panam Kadan Kavithai

பணக்காரன் என்பது வெறும் பணத்தை மட்டும் சேர்த்து வைப்பதில்லை என்ற உண்மை எல்லோருக்கும் புரியும் நேரத்தில் பணத்தை தேட வேண்டும் என்ற ஆச எல்லோருக்கும் குறையலாம். ஏனென்றால் பணத்தை எவ்வளவு சேர்த்து வைத்தாலும் அது போதும் என்ற மனநிலையை தருவதில்லை. எனவே பணக்காரன் என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று அனைவரும் உணர்ந்து கொண்டால் மட்டுமே பணத்தின் மீதான மோகமானது குறையும். பணக்காரன் என்பதற்கு நிறைவான வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை, போதுமான அளவு பணம் என்றெல்லாம் கூட பொருளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

பல நல்ல குணங்கள் ஒரு தேவையை – (பணத்தின் தேவையை) சரி செய்ய போதுமானதாக இல்லை.

Panam Quotes in Tamil

பணம் இல்லாதவனை உலகம் மதிப்பதில்லை;பணம் இருப்பவனை உலகம் வெறுப்பதில்லை

காசில்லாதவன் வீட்டை நாய் கூட எட்டிப் பார்க்காது;பிரியாணி போட மாட்டார்கள் என்று அதற்கு கூட தெரியும்.

பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்று சொன்னவருக்கு ஷாப்பிங் எங்கு செல்வது என்று தெரிந்திருக்காது.

பணத்தை விட நேரம் மதிப்புமிக்கது. நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்கலாம், ஆனால் அதிக நேரத்தை சம்பாதிக்க முடியாது.

விதி எண்.1: பணத்தை இழக்காதீர்கள். விதி எண்.2: விதி ஒன்றை மறந்துவிடாதீர்கள்

பணம் மட்டுமே பதில் இல்லை, ஆனால் அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. வெற்றி என்பது மகிழ்ச்சி. வெற்றி என்பது நிறைவு; அது கொடுக்கும் திறமை.

Panam Quotes in Tamil

பணத்தால் வாழ்க்கையை வாங்க முடியாது.

நல்ல பழக்கவழக்கங்கள் பணம் செல்லாத இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

TAMIL KAVITHAI

Leave a Comment