திருமணநாள் வாழ்த்து கவிதைகள் – WEDDING ANNIVERSARY WISHES IN TAMIL:
திருமணம் என்னும் பந்தம் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையின் ஆதாரமாக அமைகிறது. ஒருவரின் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் இந்த திருமண பந்தத்தின் மூலமாகவே நிலைக்கிறது. எவ்வளவு சொத்துகள் இருந்தாலும் வசதிகள் இருந்தாலும் வாழ்க்கைத் துணையில் ஏதேனும் குறை இருந்தால் வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கைத் துணையோடு மகிழ்ச்சியோடு வாழ்கிறீர்கள் என்பதையே இந்த வலைப்பதிவு நம்புகிறது. எனவே திருமண நாளன்று அவர்களுக்காக பகிர்ந்து கொள்ளும் சில கவிதை வரிகளை இங்கே நாங்கள் பதிவிட்டுள்ளோம்.
மனதில் இருக்கும் காயங்கள் மறையும் இடமாக மனைவியும் காணும் கனவுகள் கை சேரும் இடமாக கணவனும் இருந்துவிட்டால் இல்லறம் என்பது நல்லறமாகும்…இதயம் என்பது இன்னொரு ஜென்மம் வாழும்…இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்து கவிதைகள் – படிக்க
பூவின் வாசம் காற்றில் கலந்து இடத்தை மணக்கச் செய்வதை போல் இருவரின் காதலால் இந்த இல்லமும் மணந்து மகிழ்ச்சியில் நெகிழட்டும்….இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
உயிர் வாழும் வரை உடலோடு ஒன்றிய உயிராய் ,இரண்டற கலந்து வாழ்வை வளமாக்குங்கள்….திருமணநாள் வாழ்த்துக்கள்
காதலால் இணைந்த உள்ளங்கள்! கடமைகளால் நிறைந்த வாழ்க்கையை,வெற்றிகரமாக வாழ்ந்து வெளிச்சத்தை உங்கள் வசமாக்குங்கள்….
இன்று போல் என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியோடும் இல்லத்தில் அன்போடும் வாழ்க்கை பூரண வளங்களோடும் செழித்திருக்க இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
அன்பால் இணைந்த இந்த அழகிய உறவு ஆலமரம் போல் வேர்விட்டு ஆயிரம் ஆண்டுகள் வாழ இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
எல்லா வளங்களையும் பெற்று நலமுடன் வாழ்வாங்கு வாழ இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
மனதில் மகிழ்ச்சியுடனும் மாசற்ற அன்புடனும் ஆயுள் முழுவதும் நல்ல நட்புடனும் நலமுடன் வாழ இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
நல்ல காதலர்களாக, நல்ல நண்பர்களாக,நல்ல கணவன் மனைவியாக காலத்தை அன்பால் நிரப்பி …வாழ்க்கையை வசந்தமாய் மாற்றுங்கள் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
இணையாய். துணையாய் ரயில் தண்டவாளங்கள் போல் இணைந்தே பயணியுங்கள் இந்த இணையற்ற வாழ்க்கையில் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
மூங்கிலில் காற்று நுழைந்து இசையாவதைப் போல ஒருவருள் ஒருவர் இணைந்து இனிய இசையாய் இணைபிரியா நிழலாய் இந்த வாழ்க்கையை வாழுங்கள் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
நீ, நான் என்ற எண்ணங்கள் மறைந்து நாம் என்ற எண்ணம் மனதில் உறைந்து நமக்காக என்ற எண்ணத்தால் இந்த வாழ்க்கையில் வளர்ந்து, செழிந்து நலமுடன் வாழ இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
இளமையில் இனித்து, இனிதே தொடங்கப்பட்ட இந்த திருமண பயணம் முதுமையிலும் முடிவில்லாமல் முற்றிலுமாய் அன்பை கொட்டி கொடுக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்….
தாயாய் ,தந்தையாய், நல்ல நண்பனாய், உற்ற தோழியாய், யாவுமாய் நின்று இந்த உறவினை இனிதே நகர்த்திச் சொல்ல மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஆணும் பெண்ணும் அனைத்துமாய் இருந்து ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது என்பது உலக அதிசயங்களில் ஒன்றே! அந்த அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழ்ந்திட… இனிய நல்வாழ்த்துக்கள்
காற்றின் தாளத்திற்கு ஏற்றவாறு தள்ளாடும் இலைகளைப் போல ஒருவரின் அன்பின் பால் மற்றொருவர் இணைந்து தள்ளாடும் வயது வரை துணை கொள்ளுங்கள் இனிய நல்வாழ்த்துக்கள்
கணவனும் மனைவியுமாய் காதலெனும் மொழி கொண்டு வாழ்க்கை என்னும் கடலை குடும்பம் என்னும் படகோடு இதயங்கள் இன்புற்று இசைப்பட வாழ்ந்து இல்லறத்தின் இன்பம் காணுங்கள் இறுதிவரை….
இன்பத்தையும் துன்பத்தையும் இல்லறத்தில் பகிர்ந்து கொண்டு, இல்லையோர் துன்பம் என்று இறுதிவரை வாழ்ந்து மகிழுங்கள்!
இறைவனின் நல்லசியுடன் இணைந்த இதயங்கள் இனிதே இன்புற்று வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து இவ்வையகத்தில் வசந்தத்தைக் கண்டு இதயம் இறக்கும் வரை இணைந்து பயணித்து பெற்றெடுத்த செல்வங்களுக்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டுங்கள் இனிய திருமண நன்னாள் நல்வாழ்த்துக்கள்
Wedding anniversary wishes in tamil for wife
மனைவி என்பவள் ஆணுக்கு ஒரு முதுகெலும்பை போன்றவள். சரியான பெண் தனக்கு துணைவியாக அமைந்து விட்டால் ஒரு ஆணால் வாழ்க்கையின் எந்த உயரத்தையும் எளிதாக அடைய முடியும் எனவே அத்தகைய மனைவியை பெற்றவர்கள் அவர்களுடைய திருமண நாளிற்கு தங்களுடைய மனைவிக்கு அன்பு பரிசாக தங்கள் வாய் மொழியால் சிறு கவிதை ஒன்றை வழங்கி அவர்களை கௌரவப்படுத்த விரும்பினால் கீழே பதிவிடப்பட்டுள்ள கவிதை தொகுப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உயிருள்ள வரை உடலும் நிழலுமாய் இணைந்தே நடப்போம்…இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
நீயும் நானும் நாம் ஆனா நாளை பண்டிகையாக பார்க்கிறேன்…என் காதல் மனைவிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
உன் விரல்பிடித்த நொடியில் தான் பிடித்துப் போனது இந்த வாழ்க்கை….இதயம் நிறைந்த என்னவளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
மறக்க நினைக்காத நினைவும், வெறுக்க நினைக்காதே உறவும் என்றுமே நீதான்….உள்ளத்தில் நிறைந்த இனியவளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
உன் காதலன் என்பதை விட உன் கணவன் என்ற போதை தான் பிடித்திருக்கிறது எனக்கு…. என் உள்ளம் நிறைந்த உயிரானவளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
உயிராய் உன்னை நேசிக்கிறேன் என்பதை,நீ உறவாய் கிடைத்த இந்த நன்னாளில் தெரிவித்துக்கொள்கிறேன்! என் இனியவளுக்கு திருமண நாள்வாழ்த்துக்கள் 🌹🌹 🌹
எனக்கென்று ஒரு உலகம் உன்னால் தான் வந்தது,என் உலகத்தின் ஈர்ப்பு விசை நீயே,உன்னால் தான்நான் சுழல்வது…என்னவளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
எல்லாமுமாக நீ இருக்கிறாய்,,என்ற நம்பிக்கையில் தான் என் வாழ்க்கையே நகர்கிறது!என்னவளுக்கு இனியதிருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
என் வாழ்வில் வசந்தத்தை தந்த தேவதைக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
துணையாக நீ கிடைத்ததால் தான் துவளாமல் என் வாழ்க்கை இங்கே நகர்கிறது….வாழ்க்கை துணைக்கு வளர்பிறை வாழ்த்துக்கள் 🌹🌹🌹
துன்பங்களை மட்டுமே சுமந்த என் வாழ்வில் நல்ல துணையாக நீ கிடைத்ததால் மாறியது என் வாழ்க்கை….இனிய திருமண நாள்வாழ்த்துக்கள் உயிரே 🌹🌹🌹
உயிரோடு ஒன்றானவளுக்கு இனிய திருமண நாள்நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
வசந்தம் என் வாழ்வில் வந்தது உன் வரவால் தான் ,தேவதைக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
பூமிக்கு பாரம் என்று நினைத்திருந்தேன்என்னை…பூவிழி பார்வையில் புதியவன் ஆக்கினாய் என்னை….என்னவளுக்கு இனியதிருமண நாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
இல்லத்தில் நீ வந்த பிறகு தான், என் உள்ளத்தில் மகிழ்ச்சி என்ற மழையே பொழிந்தது இனிய திருமணநாள்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
எல்லாமுமாக நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில் என் வாழ்க்கை நகர்கிறது…இனிய திருமணநாள்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
நிலா இல்லாத வானமும் நீ இல்லாத என் வாழ்க்கையும் அழகாக இருக்காது…என்னவளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
என் வாழ்க்கையில் வசந்தம் என்பது உன்னால் வந்தது…மகிழ்ச்சி அது நீ தந்தது…இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
உயிரே…நீயும் நானும் என்ற வார்த்தை தான் நீளமான இந்த வாழ்க்கையை கடக்க உதவுகிறது….இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
அழகில் உன்னை விட ஆயிரம் பேர் இருக்கலாம்;ஆனால் அன்பால் என்னை அரவணைக்க நீ ஒருத்தி மட்டுமே !என் ஆயுள் முழுவதும்….இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 🌹🌹
நீயும் நானுமாய் வாழும் இந்த நாட்கள் நீளட்டும் என் ஆயுள் வரை இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் …
காதலி மனைவியாவதில் ஆச்சரியம் ஏதுமில்லை!ஆனால் மனைவி காதலியானால் கடவுள் தந்த ஆசிர்வாதம் அது ! என் இனிய காதலிக்குதிருமணநாள் வாழ்த்துக்கள் ❤️
நீ என்னோடு வந்தபிறகு என் வாழ்க்கை மலரின் வாசமாய் மணக்கிறது! இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
திருமண பந்தம் இனிப்பதும் கசப்பதும் இல்லத்தரசியின் கைகளில் தான் உள்ளது!நம் வாழ்க்கை இனிப்பாக இருப்பதற்கும் நீயே காரணம்…என் தேவதைக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
இளமையின் தேடலும் முதுமையின் தேவையும் என்றுமே நீ ஒருத்தி மட்டும்தான்….இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
மனம் நிறைந்த என் மண வாழ்க்கைக்கு காரணமான காரிகைக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
நிலவில்லாத வானும் நீயில்லாத என் வாழ்வும்அழகாக இருக்கப்போவதில்லை…இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
ஓயாத கடல் அலைகரையிடம் ஓடி ஓடி வருவதை போல் உன் அன்பின் நிழலில் மடி சாய, என் உள்ளம் தினம் தினம் ஓடி வருகிறது….இனியதிருமணநாள் வாழ்த்துக்கள் ❤️
நேற்று உன் நினைவில், இன்று உன் அருகில் என்றும் என் உயிரில் ஒன்றாக கலந்திருக்கும் உயிரானாவளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
எனக்காக எல்லாவற்றையும் இழந்தாய்,இனி நான் எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன்….இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்❤️
என்னோடு நீ நடந்தால் கல்லும் முள்ளும் கனவாய் போகும்…காதல் மட்டும் நிழலாய் தொடரும்❤️இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
உன்னால் தான் இந்த வாழ்க்கை உனக்காய் தான் இந்த வாழ்க்கை…இறுதி வரை இதயம் சுமக்க நினைப்பது உன்னை மட்டுமே….என்னோடு நடக்கும் என்னவளுக்கு…இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
Wedding anniversary wishes in tamil for Husband:
ஒரு பெண்ணினுடைய வாழ்க்கையை பொருத்தவரை குடும்பம் என்பது அவருடைய உயிரைப் போன்றது ஏனென்றால் ஒட்டுமொத்த குடும்பத்தின் பொறுப்புமே பெண்ணின் உடைய கைகளில் தான் இருக்கிறது அப்பேர்ப்பட்ட பெண்ணிற்கு வாய்க்கும் கணவன் ஆனவன் அவளுக்கு நல்ல நண்பனாகவும் துணையாகவும் கிடைத்துவிட்டால் அவளைப் போல் மகிழ்ச்சியான பெண் இந்த உலகில் யாரும் இல்லை என்பதாகவே அவள் உணர்வாள். அப்படிப்பட்ட மனநிலையில் உள்ள பெண்கள் தங்களுடைய திருமண நாளன்று தங்களுடைய கணவர்களுக்கு சொல்ல விரும்பும் கவிதை தொகுப்புகளை கீழே பதிவிட்டுள்ளோம் இதை படித்தும் பகிர்ந்தும் மகிழுங்கள் மனதார வாழ்த்துங்கள்…
மனைவியாக மாறிய பின் காதல் மறைந்து போகுமோ? என்ற அச்சம் கொண்டேன்;காதலி என்பவள் திருமணமாகும் வரை, மனைவி என்பவள் மரணம் எய்தும் வரை என்ற சொல்லிற்கு ஏற்ப …. மாறாத அன்பை பரிசளித்த என் மணவாளனுக்கு இனிய திருமண நள் நல்வாழ்த்துக்கள்…
வருடங்கள் ஓடி நம் வயது அதிகரிப்பதை போல,நம் அன்பும் காதலும் அதிகரிக்கிறது என்பதில் எனக்கு ஐயமில்லை, மாலையிட்ட நாள் முதல் தந்த மன நிறைவான வாழ்க்கைக்கு, இதயம் கனிந்த நன்றிகள் என் அன்பு கணவருக்கு…இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
குறைவில்லாத அன்பை கொட்டிக் கொடுக்கும், என் மனம் நிறைந்த மணவாளனுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
உன் கரம் பிடித்த நாள் முதல் என் கண்கள் நினைந்ததில்லை கண்ணீரில்…இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
மனைவியாய் உன் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனக்காய் நீயும் உனக்காய் நானும் நமக்கென நம்மக்களும் என நகரும் இந்த வாழ்க்கை சொர்க்கமாய் இருக்கிறது….
பூங்கொத்துகள் கொடுத்து புன்னகை மலர! வாழ்த்து சொல்வதை விடவும் வாசல் கதவை தாண்டும் பொழுது விழியோரம் தரும் ஒரு பார்வை ஆயிரம் மகிழ்ச்சிகளை அள்ளித்தரும், என் உள்ளத்தில்….ஏழு ஜென்மம் வேண்டாம் இந்த ஜென்மம் முழுவதும் உன் அருகில் இந்த வாழ்க்கை போதும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤️
வசதியான வாழ்க்கையை விட,உன்னோடு வாழும் வாழ்க்கை போதுமானது!என் கண்கள் மூடும் வரை உன் கண் முன் இருந்து விட வேண்டும் என்று இதயம் வேண்டுகிறது… இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
உன் விரல் இடுக்கில் ஒளிந்து கொள்ளும் வரம் ஒன்று கிடைத்தால் வாழ்க்கை முழுக்க எனக்கு வசந்தமே என் காதல் கணவருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்…
இதையும் படிக்கலாமே..
வாழ்க்கை பற்றிய தத்துவ கவிதைகள் – Life Quotes in Tamil