குழந்தை கிருஷ்ணனின் குறும்பையும், புன்னகையையும், புல்லாங்குழல் இசையையும் நினைவுகூரும் இனிய திருநாள்தான் கோகுலாஷ்டமி. வீடுகளில் கண்ணனின் பாதச்சுவடுகளை வரைந்து, வெண்ணெய், சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைத்து, பக்தியுடன் கிருஷ்ணரை வழிபடும் அழகான நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது.
கோகுலாஷ்டமிக்கு வாழ்த்த Ai image வேண்டுமா? உங்களுக்காக gemini, ChatGPT,Canva மற்றும் பல Ai tools கான image prompt இதோ…- click here
உங்கள் குழந்தையை குட்டி கண்ணன் போல மாற்ற Ai prompt வேண்டுமா! இதோ பேபி கிருஷ்ண ai prompt –Click Here
இந்த இனிய நாளில் நம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ள சில அழகான கோகுலாஷ்டமி வாழ்த்து கவிதைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கோகுலாஷ்டமி வாழ்த்து கவிதைகள்

கிருஷ்ணன் கவிதைகள்
சின்னச் சின்ன பாதம் பதித்து,வீட்டுக்குள் கண்ணன் வரட்டும்…வெண்ணெய் போன்ற இனிய மனதில்,அன்பு என்றும் நிறைந்திருக்கட்டும்…புல்லாங்குழல் இசை போல,வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்…கோகுலத்து கண்ணன் அருளால்,எல்லா நலமும் கிடைக்கட்டும்!
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்

Gokulashtami wishes in tamil
மயில் இறகு சூடிய கண்ணன்,மனதில் என்றும் குடியிருக்கட்டும்…அவன் புல்லாங்குழல் இசையைப் போல,வாழ்க்கை இனிமையாக இருக்கட்டும்…துன்பங்கள் எல்லாம் விலகி,சந்தோஷம் வீட்டில் பெருகட்டும்…கண்ணனின் கருணை கிடைத்து,ஒவ்வொரு நாளும் சிறக்கட்டும்!
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
கிருஷ்ண ஜெயந்தி wishes
குறும்பு செய்யும் குட்டிக் கண்ணன்,குதூகலமாய் சிரிக்கட்டும்…வெண்ணெய் திருடும் அந்தக் கைகள்,நம் கவலைகளைத் திருடட்டும்…கண்ணனின் அழகிய புன்னகை,நம் இல்லத்தில் ஒளி தரட்டும்…அவனது அருளோடு வாழ்க்கை,அன்பும் அமைதியும் நிறைந்திடட்டும்!
இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!

குழந்தை கிருஷ்ணன் கவிதை
கண்ணன் பாதம் பதிந்த இல்லம்,மகிழ்ச்சியால் நிறைந்திருக்கட்டும்…அன்பு நிறைந்த குடும்பத்தில்,ஆனந்தம் என்றும் மலரட்டும்…கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போக,கண்ணன் துணையாக நிற்கட்டும்…நம் குடும்பம் முழுவதும் என்றும்,நலமுடன் வாழ்ந்திடட்டும்!
கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்!
கிருஷ்ண ஜெயந்தி விழா
நட்பில் இனிமை பெருகட்டும்,நாளும் மகிழ்ச்சி மலரட்டும்…கண்ணனின் அருள் கிடைக்கட்டும்,கவலைகள் எல்லாம் மறையட்டும்…புதிய நம்பிக்கை பிறக்கட்டும்,வாழ்வில் வெற்றி தொடரட்டும்…கோகுலத்து கண்ணன் அருளால்,உன் கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்!
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் நண்பா

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
கண்ணனை தேடி கோயிலுக்குச்செல்ல வேண்டியதில்லை…அன்பு இருக்கும் இதயத்திலே,அவன் என்றும் மறைவதில்லை…நம்பிக்கை இருக்கும் மனதிலே,அவன் துணை குறைவதில்லை…கண்ணன் அருள் இருக்கும் வாழ்க்கையில்,நல்லது என்றும் விலகுவதில்லை!
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்
ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்
வெண்ணெய் போல மனம் இனிக்க,வெண்மேகம் போல கவலை விலக,கண்ணன் போல புன்னகை மலர,கனவுகள் எல்லாம் நனவாக,அன்பு நிறைந்த உறவுகள் சூழ,ஆனந்தம் தினமும் பெருக,கண்ணனின் அருள் துணையுடன்,வாழ்க்கை அழகாக அமையட்டும்
அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்

கோகுலாஷ்டமி வாழ்த்து
குட்டிக் கண்ணனின் பாதம் போலஉங்கள் வீட்டில் மகிழ்ச்சி பதியட்டும்.அவன் புல்லாங்குழல் இசை போலஉங்கள் வாழ்க்கை இனிமையாகட்டும்.அவன் சிரிப்பைப் போலஉங்கள் நாட்கள் அழகாகட்டும்.அவன் அருளைப் போலஉங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கட்டும்.
இந்த கோகுலாஷ்டமி உங்கள் குடும்பத்தில் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம் மற்றும் நிம்மதி அனைத்தையும் கொண்டு வரட்டும்.
ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்





