அப்பாக்களுக்கு நன்றி கூற வாழ்த்து அட்டை தேடி வந்திருக்கும் பிள்ளைகளே உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் அப்பாவினுடைய தியாகமும் உழைப்பும் ஒளிந்து இருக்கிறது என்பதை உணர்ந்து, இன்று ஒரு நாள் மட்டும் அவருக்கு வாழ்த்து சொல்லாமல் ஒவ்வொரு நாளும் அவரை மதித்து வாழ்ந்து அப்பாக்களுடைய இந்த தியாக வாழ்வை போற்றுங்கள்!

அப்பா எனும் புத்தகத்தை புரிந்து கொள்ள முடியவில்லை; அவரை புதைக்கும் முன்பு வரை
மேலும் அப்பாக்களை பற்றிய மிகச்சிறந்த கவிதைகளை படிக்க
Fathers Day wishes in Tamil From Daughter:
ஒவ்வொரு பெண்ணிற்கும் அப்பா என்பவர் முதல் நண்பனாகவும் முதல் ஹீரோவாகவும் முதல் காதலாகவே தெரிபவர் . அப்படி மகள்களுடைய ஹீரோக்களுக்காக இங்கே சில கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன…
காய்த்து போன என் அப்பாவின் கைகளால் தான் என் வாழ்க்கை பூத்துக் கொண்டிருக்கிறது.
அப்பா! இது வெறும் வார்த்தை அல்ல; வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டி…இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

பிள்ளைகளால் இயங்குவது தான் அப்பாக்களின் உலகம் அப்பாக்களால் தொடங்குவது தான் பிள்ளைகளின் உலகம்
பெண்ணின் முதல் காதல் அவளுடைய அப்பா தான்
ஒவ்வொரு தைரியமான பெண் பிள்ளைக்கு பின்னாலும் ஒரு சிறந்த அப்பா இருக்கிறார்.
பெண் பிள்ளைகளால் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை அப்பா
பெண் பிள்ளைகளை இந்த உலகிலேயே அதிக அளவில் நேசிக்கும் ஒரு ஆண் அவளுடைய அப்பா தான்

தன்னுடைய நலனை கடைசியாக வைப்பது தான், அப்பாக்களுக்கு தெரிந்த தியாகம்
Father’s Day wishes in Tamil text||Father’s day wishes in Tamil From Son
அப்பாக்களை புரிந்து கொள்ளாத சில மகன்களுக்கு இந்த பதிவு பகிரப்பட வேண்டும் என்பதே இந்த பதிவு எழுதப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று. அப்பாக்களின் தியாகம் கண்ணீர் வலி என அனைத்தையும் இந்த பதிவு உணர்த்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அறுபதாம் கல்யாண வாழ்த்து கவிதைகள் படிக்க
கல்லாக நிற்கும் கடவுளை விட எனக்காக கல் உடைக்கும் என் அப்பா உயர்ந்தவர் தான்

அப்பாக்களின் அழுகை இந்த உலகம் கேட்காத ஒன்று
அப்பாக்களின் அன்பு என்றாலே அலட்சியமாகத்தான் தெரியும் அப்பா யார் என்று உணரும் வரை!
கடவுளுக்கு தெரியுமா? என் ஆசை என்ன என்பது ஆனால் என் அப்பாவிற்கு தெரியும்!
நான் நிற்க வேண்டும் என்பதற்காக நிலமாக என்னை தாங்கிக் கொண்டிருந்தவர் என் அப்பா!

பிள்ளைகளின் வெற்றியின் பின்னால் அப்பாக்களின் வியர்வையும் வேதனைகளும் அடங்கியுள்ளது
பிரசவ வலியை விட கொடுமையான பல வலிகளை பிள்ளைகளுக்காக தாங்கிக் கொண்டவர் அப்பா
சூரிய ஒளி கூட மேகங்களால் மறைந்து விடும் என்னை சுற்றிய அப்பாவின் அன்பு ஒரு நாளும் மறைந்ததில்லை
Father’s Day Kavithai in tamil||Special Happy Father’s day in Tamil

அப்பாக்களுக்கு வாழ்த்து சொல்ல சிறந்த வார்த்தைகளால் தொகுக்கப்பட்ட இந்த கவிதை பதிப்பு உங்களுக்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறோம்.
இரவு பகலாக வேலை செய்து எனக்கு இந்த நல்ல வாழ்க்கையை கொடுத்தவர் என் அப்பா தான்
ஒரு குடும்பத்தை பின்னால் இருந்து நகர்த்துபவள் அம்மா; முன்னாள் இருந்து காப்பவனே அப்பா!- இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
அப்பாக்களின் உழைப்பும் தியாகமும் தான் பிள்ளைகளின் மிகப்பெரிய சொத்து-இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

கோபம் கூட அன்பின் மாற்று வடிவமே என்று அறிந்து கொள்ளப்பட்டது அப்பாக்களிடமிருந்து தான் – இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
பிள்ளைகளின் சிறுவயதில் அப்பா ஹீரோவாக தெறிவார்;பருவ வயதில் அப்பா எதிரியாக தெறிவார்; வாலிப வயதில் அப்பா நண்பனாக தெறிவார்; சற்று வயது கூடும் போது அதே அப்பா தான் வழிகாட்டியாக தெறிவார். இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
சிறந்த மனிதர்களுக்கு பின்னால் மிகச் சிறந்த அப்பாக்களும் ஒளிந்து இருக்கிறார்கள்;இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
அப்பாக்களின் தியாகங்களால் இயங்குவது தான் பிள்ளைகளின் உலகம் -இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
குடும்பம் பற்றிய கவிதைகள் படிக்க

கேட்டால் கொடுக்கும் கடவுளை விட கேட்காமலே கொடுக்கும் என் அப்பா சிறந்தவர் தானே – இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
சில அப்பாக்களின் உண்மையான அன்பு அவர்கள் இருக்கும்போதே புரிந்து கொள்ளப்படுவதில்லை-இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Father’s Day wishes for whatsapp status in tamil||Kavithai happy father’s day
தந்தையர் தினமான இன்று உங்களுடைய whatsapp ஸ்டேட்டஸில் அப்பாக்களை பற்றிய மிகச் சிறந்த கருத்துக்களை காட்சி படங்களாக பதிவிட இந்த பதிவு நிச்சயம் பயன்படும்.
பிள்ளைகள் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் தன் கால்களின் வலியை வெளியே சொல்லாமல் இருப்பவர்கள் அப்பா!-இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

ரோஜா பூவை போலத்தான் என் அப்பாவும் அவருடைய அழகான மனதை முட்களுக்குப் பின்னால் மறைத்து வைத்திருக்கிறார்-இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
அப்பாக்களின் வலிகள், அப்பாவாக மாறும்போது மட்டுமே சில பிள்ளைகளுக்கு தெரிகிறது-இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
பிள்ளைகள் நன்றாக உறங்க வேண்டும் என்பதற்காக தன் உறக்கத்தை தொலைப்பவர் அப்பா-

பிள்ளைகளுக்காக எதையும் தியாகம் செய்யும் அப்பாக்கள், ஒருபோதும் பிள்ளைகளுடைய நலனை தியாகம் செய்வதில்லை
குடும்பம் என்னும் கோவிலை காக்கும் மிகப்பெரிய தூண் அப்பா
அப்பாவினுடைய கண்ணீர் பிள்ளைகள் அறியாத ரகசியம்
அப்பாவின் கனவு என்பது பெரிதாக ஒன்றும் இல்லை பிள்ளைகளின் வெற்றியே!

குடும்பத்திற்காக தன் குறிக்கோள்களை தியாகம் செய்வது அம்மாக்களும் தான்
பிள்ளைகள் விழுந்தால் தூக்கி விட மாட்டார்கள்; தானாகவே எழுந்து நிற்க கற்றுக் கொடுப்பவர்கள் தான் அப்பா
Emotional Father’s day wishes in Tamil||father’s Day tamil

தன் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள பல கஷ்டங்களை மனதிற்குள் பூட்டி வைப்பவர் தான் அப்பா
பிள்ளைகளின் முதல் ஆசிரியர் அப்பா தான்
பிள்ளைகள் கால் ஊன்றினால் தான் அப்பாக்களின் கால்கள் ஓய்வெடுக்கும்
தன் அனுபவங்களை பிள்ளைகளின் சொத்தாக மாற்றும் குணமுடையவர் அப்பா மட்டுமே

Emotional father and son Quotes in tamil
பிள்ளைகளுக்கு ஒரு கஷ்டம் என்றால் முதலில் ஓடி வருவது அப்பாக்களின் கைகளே
ஒரு மனிதன் ஆகப்பெரிய சொத்து அவனுடைய தந்தை தான்

வருடங்கள் ஓடினாலும் என் மீது மாறாத அன்பு வைத்திருப்பவர் வயதான என் அப்பாதான்
எத்தனை கோவில்கள் சென்றாலும் சாமியாக தெரிவது என்னவோ என் அப்பா தான்
என் நிழல் அறியாத ரகசியம் கூட அறிந்தவர் அப்பா
எனக்காக மட்டும் அல்ல, என் கனவுகளுக்காகவும் கஷ்டப்பட்டவர் என் அப்பா
அப்பாவினுடைய இடத்தை நிரப்ப யாராலும் முடியாது
தாய்மை என்பது உலக அளவில் ஒரே குணம் ஆகத்தான் தெரியும் ஆனால் அப்பா ஒவ்வொரு இடத்திலும் தனித்துவப் படுவார்
உழைப்பு எவ்வளவு பெரிய உயரத்தையும் கொடுக்கும் என்பதை கற்றுக் கொடுத்தவர் அப்பா
அப்பா உருவாக்கியது தான் என் வாழ்க்கை என்று நன்றாக யோசிக்கும் பொழுது தான் புரிந்தது
திருமண நாள் வாழ்த்து கவிதைகள் -படிக்க
என்னை திட்டிக்கொண்டே இருந்த என் அப்பா இன்று எனக்கு ஒரு தேவதையாக தெரிகிறார்.
என் உயரம் எதுவென்று எனக்கு காட்ட தன் தோள் மீது என்னை சுமந்தவர் என் அப்பா!
அப்பாவின் வார்த்தைகள் அபத்தமானவையாக தெரிந்தது; சில அனுபவங்களை பெரும் வரை
அப்பாவை ஆசிரியராக பார்க்கும் எந்த மாணவனும் நிச்சயம் தோற்பதில்லை
ஆண்டவனின் இதயத்தை விட அப்பாவின் இதயம் தூய்மையானது.
இரும்பை விட வலிமையான இதயம் என் அப்பாவினுடையது
அப்பாவின் அன்பில் நகர்கிறது இந்த அகிலம்
அப்பாவின் கடுமையான வார்த்தைகள் அவருடைய அன்பின் வெளிப்பாடு என்பது நான் தந்தையான பிறகே உணர்ந்தது.
அப்பாவின் அருகே இருந்தவரை ;ஆறுதல் சொல்ல யாரும் தேவைப்பட்டது இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறுவது உண்மை என்று உணர்கிறேன் இன்று! இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்







3 thoughts on “150+தந்தையர் தின வாழ்த்து கவிதைகள் -Fathers day wishes in tamil-2026”