தமிழ் மொழியின் சிறப்பு – கட்டுரை

By TAMIL KAVITHAI

Published on:

Special essay about Tamil language-tamil mozhiyin sirappugal

தமிழ் மொழி என்பது எப்பொழுதும் எந்த காலத்திலும் இளமையானதும், எளிமையானதும் ஏன் இனிமையானதும் கூட! மக்களுக்கும் தனக்கும் வளமையை தரக்கூடிய மொழியும் நம் தமிழ் மொழியே! ஆகும். காலங்களுக்கு ஏற்ப தன்னைத் தானே தகுதிப்படுத்திக் கொள்ளும் மனித பண்புகளை உள்ளடக்கிய ஒரு உயிர் மொழி நம் தமிழ் மொழியே! நினைக்கும் பொழுதே நம் இதயத்தை இனிக்க செய்வதும் நம் தமிழ் மொழியே! உலக பழமையான மொழிகளில் அதாவது செம்மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியின் சிறப்புகளையும் பெருமைகளையும் இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

மனித இனமானது தன்னுடைய பரிணாம வளர்ச்சியின் முதல் கட்டமாக உருவாக்கிய சில உத்திகளில் ஒன்று தான் இந்த மொழி என்ற பழக்கங்களும். தங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் வெளிப்படுத்துவதற்காக மனித இனம் உருவாக்கிய ஒரு கருவியே மொழிகள் என்பது ஆகும்.

மனித இனத்தை மற்ற உயிரினங்களிடமிருந்து பிரித்து காட்டுவதும் பிற உயிர்களிடமிருந்து மேம்படுத்தி காட்டுவதும் மொழி என்ற தனித்துவமே ஆகும். மொழி மனிதர்களை சிந்திக்க வைக்கிறது சிந்தித்ததை செயல்படுத்தவும் தூண்டுகிறது அதோடு மற்றவர்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தி ஒரு ஒரு ஒருமைப்பாட்டிற்குள் இந்த மனித இடத்தை வளப்படுத்த உதவி இருக்கிறது என்பதே உண்மையாகும்.

இவ்வளவு சிறப்புகளை கூடிய மொழி எனும் வடிவமானது நாடுகளுக்கு ஏற்ப கண்டங்களுக்கு ஏற்ப தன்னுடைய பரிணாமத்தை மாற்றிக் கொண்டே சென்றுள்ளது. அதனால் தான் இந்த உலகில் மொத்தம் 6000 மொழிகளுக்கும் மேலாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் எத்தனை மொழிகள் பேச்சு வடிவம் ஆகவும் எழுத்து வடிவமாகவும் உள்ளன என்பதே!

மேலே குறிப்பிட்டுள்ள 6 ஆயிரம் மொழிகளில் இலக்கண வளத்தையும் இலக்கிய வளத்தையும் பெற்ற மொழிகள் என்றால் வெகு சிலவே அவற்றில் பேச்சு வடிவம் எழுத்து வடிவமும் இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்து செழிந்து இந்த உலகத்தின் தொன்மை மொழிகளில் ஒன்று என்று சான்றுகளுடன் தன்னை நிரூபித்துக் கொண்ட ஒரே மொழி என்றால் அது நம் தமிழ் மொழி ஆகும்.

நம் தமிழ் மொழி செம்மொழி என்று அதாவது 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூமியில் பயன்பாட்டில் உள்ள மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாக உள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள நம் தமிழ் மொழியின் பார் போற்றும் கவியான பாரதியார் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகளுக்கு அர்த்தம் என்னவெனில் நான் அறிந்த மொழிகளில் தமிழ் மொழி போலே இனிமையான மொழி என்று ஒன்றை வேறு எந்த மொழியை பேசும்பொழுதும் படிக்கும் பொழுதும் தனக்கு தோன்றவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நம் பாரதியார் அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ளது போலவே மற்றும் ஒரு வரியை நம் தமிழ் மொழியின் பெருமையை உணர்த்துவதற்காக பாடியுள்ளார்!

நம் தமிழ் மொழியை பொறுத்தமட்டில் தொல்காப்பியமே நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான தொன்மையான இலக்கண நூல் ஆகும் அப்படி என்றால் தொல்காப்பியத்திற்கு முன்னதாகவே நம் தமிழ் மொழியில் நிச்சயம் இலக்கிய நூல்கள் இருந்திருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும் இதனை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் நம் தமிழ் மொழியை மிகவும் தொன்மையான மொழி என்றும் பழமையான மொழி என்றும் உலகில் மூத்த மொழி ஆதி மனிதன் பேசிய முதல் மொழி என்றும் கூறிக்கொண்டு வருகிறோம்.

இந்த உலகில் உள்ள மொழிகளுள் எல்லோராலும் எளிதாகவும் சுலபமாகவும் எழுதவும் படிக்கவும் பேசவும் கற்றுக்கொள்ளவும் மிகவும் எளிமையாக இருக்கும் மொழிகள் சிலவே அவற்றில் நம் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

நம் தமிழ் மொழியில் மிகவும் எளிதாக மொழி வழக்கானது உள்ளது எடுத்துக்காட்டாக நம் தமிழ் மொழியில் மூன்று வகையான எழுத்துகள் உள்ளன ஒன்று உயிர் எழுத்துக்கள் மற்றொன்று மெய்யெழுத்துகள் மற்றொன்று உயிர் மெய் எழுத்துகள் இதில் நான்காவதாக ஆயுத எழுத்து என்ற பிரிவும் உள்ளது.

Tamil mozhiyin sirappugal

ஆனால் பெரும்பாலும் உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் இவை மூன்றும் நாம் அறிந்து கொண்டாலே தமிழ் மொழியை மிகவும் எளிமையாக படிக்கவும் எழுதவும் முடியும். உதாரணமாக உயிரெழுத்துக்கள் 12யும் மெய்யெழுத்துக்கள் 18 ம் நாம் தெளிவாக படித்தோமானால் உயிர்மெய் எழுத்துக்கள் தானாகவே தோன்றுவிடும் அதாவது உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்தால் உயிர்மெய் எழுத்துக்களாக புணர்ச்சி வருகின்றன இதை புரிந்து கொண்டாலே தமிழ் மொழியை மிகவும் எளிதாக எழுதவும் படிக்கவும் முடியும்.

எ.கா : அ+ழ+கு =அழகு

அ- உயிர் எழுத்து 

ழ்+அ = ழ (உயிரும் மெய்யும் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள்)

க்+உ =கு (உயிரும் மெய்யும் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள்)

தமிழ் மொழியை பொறத்தமட்டில் எழுதுவதும் மிகவும் எளிமையானது தான். எழுதுவதற்கு எளிமையாக இருக்கும் வகையில் நம் தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் அதாவது பெரும்பாலான எழுத்துக்கள் அனைத்தும் வலஞ்சுழி எழுத்துக்களாகவே இருக்கிறது.

எ.கா : வலஞ்சுழி எழுத்துக்கள் – அ,எ,ஔ,ண,ஞ போன்றவை

இடஞ்சுழி எழுத்துக்கள் – ட,ய,ழ போன்றவை.

சீரான அல்லது சீர்மை என்ற வார்த்தைகளுக்கு நம் தமிழ் மொழியில் ஒழுங்கான என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு. சீரான அல்லது சீர்மையான மொழி என்பது பல கருத்துகளை உள்ளடக்கியதாகும் இதில் சிறப்பானது நம் தமிழ் மொழியுடைய சொல் சிறப்பு ஆகும்.

இந்த சீரான அல்லது சீர்மையான மொழி என்பதை ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினால் தான் புரியும் அதற்காகவே நம் தமிழில் உயர்திணை அஃறிணை என இரு வகை திணைகளை நாம் படித்திருப்போம்.

இதில் உயர்திணை என்பதன் எதிர்ச்சொல் தாழ்திணை என்று அமைய வேண்டும் ஆனால் நம் தமிழ் மொழியில் தாழ்தினை என்று சொல்லாமல் அஃறினை என்று பெயரிட்டு வைத்துள்ளனர் நம் முன்னோர்கள் இதற்கான காரணம் என்ன அஃறினை என்பதே நாம் எப்படி பிரித்து படிப்போம் 

அஃறினை = அல் + திணை = உயர்வு அல்லாத திணை 

அதாவது தாழ்ந்த என்ற சொல்லையே பயன்படுத்துவதற்கு யோசித்து அதற்கு எதிர்மறையான சொற்களை கொண்டு ஒரு மொழி வடிவத்தை அமைத்த மொழி என்றால் அது நம் தமிழ் மொழி மட்டுமே! நம் தமிழ் மொழியை வடிவமைத்த நமக்கு மூத்தவர்கள் எல்லோரும் நம் தமிழ் மொழி ஒரு சீரான ஒழுங்கு முறையான ஒழுக்கமான சீர்மையான மொழியாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனத்துடன் இருந்துள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டையும் கூறலாம். பாகற்காய் கசப்பான சுவையை உடையது அதற்கு கசப்புக்காய் என்று நம் முன்னோர்கள் பெயர் வைத்திருக்கலாம். ஆனால் இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல்+காய்) என்று பெயரிட்டுள்ளனர் கசப்பு என்ற சொல்லையே ஒரு பொருளுக்கு பெயராக சூட்டுவதில் விருப்பமில்லாதவர்களாக நம்முடைய முன்னோர்கள் இருந்துள்ளனர். 

இவ்வாறு பெயரிடுவதில் கூட மிகவும் ஒழுங்கு முறையையும் சீர்மை தன்மையையும் கடைபிடித்தது நம் தமிழ் மொழி மட்டுமே.

நம் தமிழ் மொழி மிகவும் வளமையான மொழி என்று கூறுவதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் தொல்காப்பியம், நன்னூல் போன்ற தொன்மையான இலக்கண நூல்களும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க கால இலக்கிய நூல்களும் திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சிறந்த காவியங்களையும் காப்பியங்களையும் கொண்ட மொழியாக தமிழ் மொழி உள்ளது.

இன்னும் கூற வேண்டும் எனறால் தமிழ் மொழியின் சொல்வளம் என்பது உலக அறிஞர்களால் பாராட்டுகளை பெற்றுள்ளது ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது நம் தமிழ் மொழிக்கு உரித்தான சிறப்பாக கூறப்படுகிறது

நம் தமிழ் மொழியில் மட்டுமே பூவின் ஏழு நிலைகளுக்கும் அதாவது தோன்றுவது முதல் உதிர்வது வரை ஒரு பூவிற்கு ஏழு நிலைகளிலும் தனி தனி பெயர்கள் உண்டு 

  • அரும்பு 
  • மொட்டு 
  • முகை 
  • மலர் 
  • அலர் 
  • வீ
  • செம்மல் 

மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஏழு நிலைகளும் ஒரு பூ பூப்பதற்கு முன்பாக அதனுடைய நிலைகளுக்கென்று தமிழ் மொழியில் குறிப்பிட்டுள்ள பெயர்களாகும்.

அது மட்டுமல்லாமல் நம் தமிழ் மொழியின் மிக மிக முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றுதான் இந்த ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள். ஒரே ஒரு எழுத்து பல சொற்களை உள்ளடக்கி வரும். அதற்கு உதாரணமாக மா எனும் ஒரு சொல் மரம், விளங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களை தரும். மேலும் உங்களுக்கு இதுபோன்ற ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள எங்களுடைய மற்றும் ஒரு ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் என்னும் கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் 

தமிழில் உள்ள 56 வகை ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் – படிக்க 

மேலே குறிப்பிட்ட சில உதாரணங்களைக் கொண்டு நம் தமிழ் மொழியின் வளமை குறித்து நாம் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழ்மொழியின் வளர்ச்சி என்பது காலத்திற்கு ஏற்றார் போல மாறிக்கொண்டே உள்ளது தமிழ் மொழி ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக் கொண்டே வருகிறது என்றுதான் கூற வேண்டும். நம் தமிழ் மொழியில் முத்தமிழ் என்ற வார்த்தை உள்ளது அதற்கு இயல் தமிழ், இசை தமிழ், நாடகத் தமிழ் என்ற மூன்றையும் தன்னுள்ளே கொண்டுள்ளதால் அதற்கு முத்தமிழ் என்று பெயர் என்று கூறுகிறார்கள். 

பண்டைய காலத்தில் இயல் தமிழால் தங்களுடைய எண்ணங்களை மக்கள் வெளிப்படுத்தினர் அதேபோல் இசை தமிழால் தங்கள் உள்ளங்களை மகிழ்வித்து கொண்டனர் அதேபோல் நாடகத் தமிழால் தங்களுடைய வாழ்வின் நிறைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி உணர்வோடு மிகவும்  நல்ல முறையில் வாழ்ந்து வந்தனர்.

நம்முடைய நவீன காலகட்டத்தில் நம் தமிழ் தன்னையே புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறது. உதாரணமாக கூற வேண்டும் என்றால் செய்யுள், கவிதை, புதுக்கவிதை, துளிப்பா, ஹைக்கூ என்று கவிதை வடிவங்களும் கட்டுரை, புதினம், சிறுகதை, நாவல் என்ற உரைநடை வடிவங்களும் தற்போது இன்னும் வளர்ச்சிகரமான அறிவியல் தமிழ் மற்றும் கணினி தமிழ் என்று நம் தமிழ் மொழியானது ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வருகிறது.

இதையே நாம் வளர்ச்சியான மொழி என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக எடுத்துக் கொள்ள முடியும். நம் தமிழ் மொழியானது தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு தன்னை பயன்படுத்துபவர்களையும் அதாவது பேசுபவர்களையும் கூட வளர்க்கும் மொழி என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி களுக்கெல்லாம் ஈடு கடுக்கும் வகையில் நம் தமிழ் மொழியில் தினம் தோறும் புது புது கலைச்சொற்கள் உருவாகிக் கண்டு வருகின்றன அதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால்

  • Internet – இணையம்
  • Facebook – முகநூல்
  • App – செயலி
  • Search engine – தேடுபொறி

மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கில எழுத்துக்களுக்கு இணையாக நம் தமிழ் மொழியிலும் கலைச்சொற்கள் ஆனது உருவாக்கப்பட்டுள்ளது என்பதே இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

இந்த உலகில் எழுத்து வடிவமே பெறாத ஏராளமான மொழிகள் உள்ளன. ஆனால் நம் தமிழ் மொழியில் வரி வடிவ எழுத்துக்கள் அனைத்தும் அறிவியல் தொழில்நுட்ப நோக்கிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நம் தமிழ் மொழியை கணினியில் கூட பயன்படுத்த முடிகிறது. அவற்றை எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டால் அப்படி வடிவமைக்கப்பட்டு விட்டால் நம்முடைய தமிழ் மொழியானது கணினியில் கூட பயன்படுகிறது. தொல்காப்பியம் நன்னூல் போன்ற பழங்கால இலக்கணங்கள் நாம் படிப்பதற்கு இந்த காலத்திலும் ஏதுவாக எழுதப்பட்டதாக உள்ளது. அதனால் பிற்கால வளர்ச்சி நிலைகளை உணர்ந்து நம் தமிழ் மொழியின் எழுத்து வடிவமானது எழுதப்பட்டு இருக்கலாம் என்று கூட சொல்ல முடியும்.

மூத்த மொழியான தமிழ் மொழி கணினி இணையம் போன்ற எல்லாவித அறிவியல் தொழில்நுட்பங்களிலும் பயன்படுத்தும் வகையாக அமைந்து உள்ளது, நம் தமிழ் மொழியின் மிகச் சிறப்பான தன்மையாகும். அப்படிப்பட்ட தமிழ் மொழி நமக்கு தாய் மொழியாகவும் அதை நாம் கற்று அதை பயன்படுத்துகிறோம் என்பதிலும் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்பது உண்மையான கருத்துகளாகும். நாம் நம் தமிழ் மொழியின் வளர்ச்சியில் நிச்சயம் பங்காற்ற வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகும்.

நம் தமிழ் மொழியின் சிறப்புகளை முடிந்த அளவில் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இந்த பதிவில் நாம் தெரிந்து கொண்டிருப்போம் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவானது முடிவு பெறுகிறது. நம் தமிழ் மொழி அதற்கே உரித்தான சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்டுள்ளது அதனை நாம் பாதுகாப்பதும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதும் நம்முடைய தலையாய கடமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் தமிழ் மொழியின் சிறப்புகளையும் பெருமைகளையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதில் கவனம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

TAMIL KAVITHAI

Leave a Comment